Advertisement

பள்ளி மாணவியை கடத்தியதாக புகார்

சேலம்: சேலம், அய்யந்திருமாளிகையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது, 14 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை, கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர், வீடு திரும்பவில்லை. ராஜா, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில், 'அன்னதானப்பட்டி, சண்முகா நகரைச் சேர்ந்த உறவினர் மெய்யழகன், 21, மகளை கடத்திச்சென்றுவிட்டார்' என, புகார் அளித்தார். இரவு, 7:00 மணிக்கு, அவரது மகள், மெய்யழகனுடன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். இருவரின் பெற்றோரை அழைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement