Advertisement

தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்: மகுடஞ்சாவடி தி.மு.க., நிர்வாகி கைது

சங்ககிரி: தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த, மகுடஞ்சாவடி ஒன்றிய தி.மு.க., துணைச் செயலாளரை, போலீசார் கைது செய்தனர்.

இளம்பிள்ளை, காகாபாளையம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 52. தப்பக்குட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன், 46. இவர், மகுடஞ்சாவடி ஒன்றிய தி.மு.க., துணைச்செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான, 1.10 ஏக்கர் நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்ச்செல்வன் வாங்கியுள்ளார். இதில், பணப்பரிமாற்றம் தொடர்பாக, மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு, சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த, 28ல், தமிழ்ச்செல்வன், குடும்பத்துடன் காகாபாளையத்தில் இருந்து, காரில், இளம்பிள்ளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, காரை மறித்த சீனிவாசன், 'நிலத்தை தர வேண்டும். மறுத்தால், குடும்பத்தோடு கடத்தி கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், காகாபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அவர்கள் விசாரித்து, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிந்து, சீனிவாசனை கைது செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement