Advertisement

ரவுடியை கல்லால் தாக்கிய மூவர் கைது

சேலம்: ரவுடியை கல்லால் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். சேலம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜிகுனா சந்தோஷ், 27. இவர் மீது, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில், ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி, கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தான். நேற்று மாலை, வள்ளுவர் நகரில், மொபட்டில் வேகமாக வந்து, குழந்தை மீது மோத இருந்ததை கண்டு, அப்பகுதி இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து, சந்தோஷிடம் கேட்டுள்ளனர். அதில், இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், சந்தோஷ் கத்தியால் குத்தவந்தான். ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவனை கல்லால் தாக்கினர். ஆனால், சக ரவுடிகளை சேர்த்துக்கொண்டு, அவர்களை தாக்க, சந்தோஷ் முயன்றான். இதனால், இருதரப்பும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து வந்து, மோதலை தடுத்து நிறுத்தி, சந்தோ ?ஷ, மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ரவுடிகள், வள்ளுவர் நகரை சேர்ந்த பூபதி, 28, வசந்த், 20, சதாம் உசேன், 20, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement