Advertisement

அய்யனார் கோவிலில் தங்க தாலி திருட்டு

இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டி, அய்யனாரப்பன் கோவில் கதவை திறக்க, நேற்று அதிகாலை, பக்தர்கள் சென்றனர். அப்போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, கிட்டப்பன், சிவசண்முகம், பழனியப்பன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, சமையல் அறைக்குள் இருந்த பெட்டியில் அரை பவுன் தங்க தாலி, 2,000 ரூபாய் மற்றும் பாத்திரங்கள் திருட்டுபோனது தெரியவந்தது. அவர்கள் அளித்த புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement