Advertisement

பைக் மீது பஸ் மோதி இருவர் பலி

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, டூ வீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், தந்தை, மகன் இருவரும் பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 42; டீக்கடையில் வேலை பார்த்தார். இவர், நேற்று மதியம், 36 வயது மனைவி, 5 வயது மகன், 3 வயது மகளுடன், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்ற போது, தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை சென்ற ராஹத் என்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் மணிவண்ணன், அவரது மகன் ஆகிய இருவரும், அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அவரது மனைவி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லேசான காயத்துடன், 3 வயது மகள் உயிர் தப்பினார். புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 36; சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று மதியம், 1:00 மணிக்கு ஆலங்குடி வாரச்சந்தையில் காய்கறி வாங்கி, ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டிற்கு சென்ற போது, லாரி மோதி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்; செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். இவரது மகன் திவாகரன், 3, நேற்று காலை, 8:30 மணிக்கு வீட்டருகே விளையாடிய போது, 4 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement