Advertisement

நான் முதல்வர் வேட்பாளரா? : அகமது பட்டேல் மறுப்பு

சூரத்: குஜராத் சட்டபை தேர்தலில் காங். முதல்வர் வேட்பாளர் அகமது பட்டேலை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அக்.கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அகமது பட்டேல் மறுத்துள்ளார்.

குஜராத் சட்டசபைக்கு நாளை முதல்கட்ட ஓடடுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் சூரத்நகரில் முக்கிய இடங்களில் காங்.கட்சியினர் ஓட்டியுள்ள போஸ்டர் பரபரப்பினை ஏற்படுத்தியு்ள்ளது.
அந்த போஸ்டரில் முஸ்லிம்கள் ஆதரவு பெற்ற காங். ராஜ்யசபா எம்.பி. அகமதுபட்டேல் மற்றும் ராகுல் ஆகியோர் படத்துடன் முதல்வர் வேட்பாளர் அகமது பட்டேல் என குஜராத்தி மொழியில் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது காங்.கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. காங்.முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் அறிவிக்காத நிலையில் இது குறித்து அகமதுபட்டேல் கூறியத, போஸ்டரி்ல் கூறப்பட்டுள்ளதில் உண்மையில் வேண்டுமென்றே விஷமம் செய்துள்ளனர். இது பா.ஜ.வின் சதியாகத்தான் இருக்கும். நான் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இல்லை.முதல்வர் பதவிக்கு ஆசைப்படவுமில்லை என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஐய்யய்யோ நானில்லை அது நானில்லை என்று ஒரு மூர்க்க தலைவன் பயந்து ஓடும் நிலையை கண்டு சிரிப்பு தான் வருகிறது. குஜராத்தில் மோடியின் மாயாஜாலம் எந்த அளவிற்கு கரையான் புற்றிற்கு எதிராக வேலை செய்யவைத்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  முதல்வர் வேட்பாளருக்கு இவரை விட தகுதியானவர் இருக்கவே முடியாது கான்கிராஸ் கட்சிக்கு. முதல் பெயர் அரபியில் , இரண்டாவது பெயர் இந்து ஜாதி பெயர். போலி காந்தி குடும்பத்தாருக்கு இதை விட பொருத்தமானவர் கிடைக்க வாய்ப்பில்லை.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அடியே என்பதற்கு பெண்டாட்டியை காணோம் , அதற்குள் பிள்ளைக்கு பெயர்வைக்கப் போகின்றனர். அடிமுட்டாள்கள்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  எவ்வளவு கேவலமான அரசியல் பாருங்க பிஜேபி செய்வது .. மக்களை எப்படி மதத்தால் துண்டாடுவது என்று நன்கு அறிந்து வெச்சிருக்கு .. காங்கிரஸ் கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்க போகிறது என்று முதல் கருது கணிப்பு வந்த அடுத்த நிமிடம் பிஜேபி ஐடி விங் சமூக வலைத்தளங்களில் காமெடி படேல் தான் முதல்வராம் என்று போடுகிறார்கள் .. அடுத்த நாள் குஜராத் முழுக்க இந்த போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன .. எதற்கு ?? ஒரு முஸ்லிமை முதல்வர் வேட்பாளர் ஆக்கி விடுவார்கள் என்று ஹிந்து குஜராத்திகளுக்கு தெரிவிக்க .. பிரச்சாரத்தின் கடைசி நாள் பிஜேபி வேட்பாளர் , குல்லா போட்டவர்கள் ஜனத்தொகை அதிகரிக்க கூடாது .. ஏதாவது செய்தால் ஒட்ட நறுக்குவோம் என்று சம்பந்தமே இல்லாம பிரச்சனை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் .. ஹர்டிக் , அல்பேஷ் , ஜிக்னேஷ் மூவரின் பெயரையும் சேத்து ஹஜ் என்று போஸ்டர் அடித்து குஜராத் முழுக்க பிஜேபி ஒட்டி இருக்கிறது .. இதை விட கேவலமாக எங்கேயேனும் மத அரசியல் நடந்து இருக்கா ?? குஜராத்தில் இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல .. 2002 கு பிறகு பயத்துடனும் வாழ்வாதாரத்தை இழந்தும் தனி வாழ்விடங்களில் தான் வாழ்கின்றனர் .. யாரும் வீடு கூட கொடுப்பதில்லை அவர்களுக்கு .. இப்போது காங்கிரஸ் அவர்களை பற்றி பேசினால் பிஜேபி மதத்தால் பிரிந்துவிடும் என்று அவர்களை கண்டு கொள்வதில்லை .. ஆனால் இப்போதும் பிஜேபி அவர்களை பற்றியே பேசி கொண்டு இருக்கிறது .. வேறு அரசியல் தெரிஞ்சா தானே பண்ண முடியும் .. இது ரொம்ப நாள் நீடிக்க முடியாது .. எத்தனை நாட்கள் மக்களை முட்டாள் ஆக்க முடியும் ??

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  உன்ன விட மோசமான மானம் கெட்டவன் கிடைக்கலையே என்ன செய்ய?

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரசாவது ஜெயிப்பதாவது, பந்திக்கே வேண்டாம் என்கிறார்கள், இதில் இலை ஓட்டை இலை ஓட்டை என்று கூப்பாடு வேறு.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தேசநாசா... இந்துக்கள் வாக்கு இத்தாலி வாக்கு என்று மதவாத அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? நீரெல்லாம் படித்தவர் தானா?

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இது மட்டமான அரசியல் கடைசி நேரத்தில் வாக்காளர்களை குழப்பத்தை ஏற்படுத்துவது.... எந்த கட்சியாக இருந்தாலும்...

 • IndiraBthane -

  சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் அந்நாட்டு போலீஸ் அதிகாரி சார்பில் இதே மாதிரி அஹ்மத் படேல் முதல்வராவதை வரவேற்கிறோம் என்ற சுவரொட்டி காண பட்டத்தை மீடியா வெளியிட்டது .அதேமாதிரியான கும்பலின் வேலை தான் இது.பிஜெ பி மேல் பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்.

 • Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ

  அப்படியானால் சோனியா காந்தி என்னாவார்? அஹ்மத் படேல் அருகில் இருந்து ஆலோசனை கூறாவிடில் சோனியாவுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது எதுவுமே ஓடாதே? அவர் தான் சோனியாவுக்கு எல்லாமே.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  சூப்பர். முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற என்பதை கடவுளின் ஆசி பெற்ற என்ற ரேஞ்சிற்கு உயர்த்திய பெருமை மதசார்பற்ற விஞ்சிக்கு போகுமா இல்லை சிவபக்தன் விஞ்சிக்கு போகுமா? கண்ணைக்கட்டுதே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அஹமது படேல்தான் முதல்வராவார் என இஸ்லாமிய ஜமாஅத்துகளுக்கு ஏற்காகவே செய்தியனுப்பப்பட்டு அவர்களும் காங்கிரஸுக்கே வாக்களிக்க ரகசிய ஃபத்வாவும் விட்டாயிற்று. அதனை சில அதிமேதாவி மூர்க்க இளைஞர்கள் போஸ்டரடித்துக் கொண்டாடிவிட்டதால் தான் பிரச்னை. இந்து வாக்குகள் விழாது என பயந்து    மறைத்த  இத்தாலி காங்கிரசுக்கு மூக்கடைப்பு 

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சதியில் மதி மயங்கும் மக்களை திசை திருப்ப வழக்கம் போல பரிவார் கும்பல் செய்யும் சாகசங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் இது ஒரு சிறிய பங்கு தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement