Advertisement

தகுதி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்: சரத்யாதவ்


புதுடில்லி: பீஹாரில் கூட்டணி ஜாகையை மாற்றி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார்.இதனால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் சரத்யாதவ், அலி அன்சாரி ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர்.இவர்களின் ராஜ்சபா எம் .பி. பதவியை தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா உத்தரவிட்டார்.
இது குறித்து சரத்யாதவ் கூறுகையில், மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் சுப்ரீம் கோர்டில் நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டது. அதே போன்று என்னை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக பார்லி. கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்னை நீக்கியதை எதிர்த்து நான் கோர்ட்டில் நியாயம் கேட்க உள்ளேன் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement