Advertisement

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன

புதுடில்லி: பாலஸ்தீன விடுதலை தான் இந்தியாவின் நிலைப்பாடு என, இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேம் டிரம்ப் அறிவிப்பு விவகாரத்தில் இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க துாதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக நேற்று ஐ.நா. பாதுகாப்புசபை கூட்டம் நடந்தது. இதில் ஜெருசலேம் நகரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதர் அன்டான் அலிஹாஜா ராஜ்சபா டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். விரைவில் மோடி பாலஸ்தீனம் செல்லஉள்ளார் அது எப்போது என்பது குறித்து முடிவு செய்யப்படவி்லை. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிப்பு விஷயத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் பாலஸ்தீன விடுதலை என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.இதில் மூன்றாவது நாடு முடிவு செய்யக்கூடாது என்றார்..
Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • Naga - Muscat,ஓமன்

  சார் ப்ளீஸ் கம் டு மஸ்க்யாட் we are expecting யு

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மதம் இருக்கும் இடத்தில் மூர்க்கம் இருக்கும். அழிவு தான் மிஞ்சும். அந்த வகையில் ஜெருசேலத்தில் நிம்மதியே இருக்க வாய்ப்பில்லை. என்றுமே அழியாத அழிவு தான். மாதங்கள் அழிந்தாலொழிய அங்கே அமைதிக்கு வழியே இல்லை.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகர் என அமேரிக்கா அங்கீகரித்ததை பற்றி இந்தியாவின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலில்லை.. ஆனால் பாலஸ்தீன விடுதலை தான் முக்கிய குறிக்கோளாம்.. ஜெருசலேம் பற்றி ஒரு வார்த்தையும் காணோம்.. பாலஸ்தீனம் இன்னும் விடுதலை அடையவில்லையா?அப்புறம் எப்படி ஐநாவில் அங்கத்தினராக அங்கீகாரம் கொடுத்தார்கள்?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அடுத்த நாட்டின் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது தேவையற்றது

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  கிறித்துவம் - 150 + நாடுகள். -பவுத்துவம் - 15 + -மொஹம்மதியர் - 51 + -சனாதன இந்து மதங்கள் - 0 -யூதர் - 0 பாவம் ஸீரோ இருக்கிறவங்களுக்கு முதல்ல ஒண்ணாவது கொடுங்கையா. அவுங்க மட்டும் என்ன இளிச்சவாயன்களா.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  பாலஸ்தீனம் வேண்டாம். 51 நாடுகள் வைத்து இருப்பவர்களுக்கு எதற்கு இன்னொரு நாடு. பூஜ்யம் நாடுகள் வைத்து இருக்கும் யூதர்களுக்கும் இந்துக்களுக்கும் தான் ஒரே ஒரு நாடாவது குடுக்க வேண்டும்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ஊசிமணி அய்யா பாலஸ்திநீயர்கள் தீவிரவாதத்தை கை வீட வேண்டும் என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் இஸ்ரயேலை என்ன சொல்வீர்கள் தீவிரவாதத்தின் தந்தை என்றா ? உலக நாடுகளில் தீவிரவாதத்தை அமெரிக்காவை வைத்து சதிராடும் இவர்களை என்னவென்று சொல்வீர்கள் ??? வரலாற்றை முதலில் படியுங்கள்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  நிலைபாடா ?? இருந்தா தானே சொல்ல முடியும் .. பொருளாதாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை அப்படியே காப்பி அடிச்சாச்சு .. வெளிநாட்டு கொள்கையில் என்ன செய்வது என்று இப்போது தான் பழகி கொண்டு இருக்கோம் .. நினைத்தவாறு செய்து கொண்டிருக்கோம் .. கடைசியில் அதுக்கும் காங்கிரஸ் நிலைப்பாடு தான் எடுக்கணும் போல ..

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நம்ம முன்னேற்றம் தான் முக்கியம் ஊர் பிரச்சனை வேண்டாம்

 • Jayvee - chennai,இந்தியா

  ஜெரசுலாத்தை யூதர்களுக்கு kodukkavendum. இஸ்லாமியர்களை உள்ளேய vidakoodaathu.. ஏனென்றால் Jerusalem இப்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் ullathu.. (இதுதான் ராமஜென்ம பூமியில் இங்குள்ள திருட்டு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு)

 • Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா

  மதசார்பற்ற கொள்கை என்பது இன்று புதிய சிந்தனையாளர்களால் தகர்த்தெடுக்கப்படுமோ எனும் பீதி அரசியல் வாதிகளை குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பழைய சித்தாந்தங்கள் இன்றைய தலைமைத்துவ ஆளுமைக்கு உகந்ததாக இல்லை. அணையப்போகும் விளக்கு விட்டு விட்டு எரிந்தபின் இறுதியான ஒளி சற்று பிரகாசமாக கக்கிய பின்னர் எப்படி நின்றுவிடுமோ அப்படி பழமையான சித்தாந்தங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றனவாக இல்லை. இருக்கின்ற பிரச்சனைகளை தீர்க்க வழி தெரியாவிட்டாலும்,சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்கிற பாணியிலான அரசியல் தலைவர்கள்,உலக அரங்கில் யூதர்களுக்கும்,கிருத்துவ ,இஸ்லாம் பெரும்பான்மையிலான மக்களை தூண்டிவிட்டு வழிபாட்டு தலங்களையும் விட்டுவைப்பதில்லை என்று விழிபிதுங்கி தவிப்புக்குள்ளாகி விட்டனர். மனிதனை மாற்றவல்ல சக்தி அவனுடைய உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ஆன்ம ஒளிவிளக்கு. அதை தூண்டிவிட்டால் ஒழிய,அர்த்தமுள்ள உரையாடல் எதுவுமே எடுபடாது. ஆண்டவன் நமக்கு விதித்துள்ள இன்றைய திட்டங்கள் உலகநீதிமன்றத்தினால் உலக மக்களுக்கு கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது.உலக சீர்திருத்தம் என்பது நாளைய தலைமுறைக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டியது நமது தவிர்க்கவியலாத சேவைப்பணியாகும்.அதற்கான அரங்கம் நிர்மாணிக்கப்பட்டு,இன்று 200 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது."உலகமே ஒரு நாடு மக்கள் யாவரும் அதன் பிரஜைகள்" பஹாவுல்லா.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்தியா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவேண்டும். இந்த முடிவை இதற்கு இங்குள்ள மதவெறி கிறிஸ்தவ பாவாடை சாமிகளும் ஆதரிப்பார்கள். ஆனால் அவர்களின் ஆதரவிற்க்காக இதை செய்ய கூடாது. இந்தியாவின் நலனிற்க்காக இதை செய்ய வேண்டும். ஹிந்துக்களும் இதையே ஆதரிப்பார்கள். யூதர்கள் எப்போதுமே இந்தியாவின் ஆதரவாளர்கள்..அவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து மூர்க்கங்களால் துரத்தியடிக்கப்பட்ட பொது அவர்களை அரவணைத்த நாடு பாரதம். அந்த பந்தம் இப்போதும் தொடரப்படவேண்டும்.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  பாலத்தீன விவகாரம் என்பது அந்த இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட விஷயம் இதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நமது காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவதாக எந்த நாடும் தலையிடுவதை நாம் எப்படி விரும்பவில்லையா அதுபோல அந்த இருநாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது. மாறாக இங்குள்ள பச்சைகளை மகிழ்விக்க தேவையில்லாமல் இந்தியா பலஸ்தீன விவரகாரத்தில் தலையிடுமேயானால் அதனால் இந்தியாவிற்கு தான் நிறைய சங்கடங்கள் வர வாய்ப்பு அதிகம். இதை காரணம் காட்டி காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் சீனாவை உள்ளிழுக்கும். இந்திய வெளியுறவு கொள்கைகள் காலத்துக்கேற்ற தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். யூதர்கள், ஹிந்துக்கள் மற்றும் பச்சையல்லாதவர்களை கொன்றொழிக்க வேண்டும் என்பது தான் உலக பச்சைகளின் முக்கிய குறிக்கோள் எனவே பாலஸ்தீனிய விவகாரம் இந்தியாவிற்கு சம்பந்தமில்லாதது.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இது காங்கிரஸ் அரசு எடுத்த முடிவு...பிஜேபியும் தொடர்வது சந்தோசமளிக்கிறது......3 ஆபிரகாமிய மதங்களின் பிறப்பிடமான ஜெருசலேம் ஒரு புனித நகராகவே தொடர வேண்டும்...அங்கு தீவிரவாதம் தலை தூக்கி விட கூடாது...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இதோடு முடியப் போகும் விஷயமல்ல இது. மலரின் மகள் என்ற பெயரில் உள்ள இந்துத்துவ வாசகரின் கருத்து இங்கு ஏற்றுக் கொள்ள படலாம். ஆனால் அது மென்மேலும் பயங்கரவாதம் வளரவே வழி வகுக்கும். உலகின் அமைதியின்மை தான் ஆதிக்கவாதிகளின் நோக்கம் .

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  வாட்? அப்பொறம் அவனுங்க காஸ்மீர்ல கை வெப்பானுங்க பர்வாயில்லயா?

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  இது தான் உண்மையான நடுநிலை தன்மை, இவ்ளோ நாலு செக்யூலரிஸ்ம் பத்தி பேசிய பகுத்தறியா பல்கலை கழகங்கள் கத்துக்கோங்க

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நான்கு மாதங்களில் ஆரம்பித்து நான்கு வருடங்களில் மெது மெதுவாகத்தான் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்ற போகிறோம் என்று சொல்லி இருக்கிறார். மேலும் நான்கு வருடத்திற்குள்ளாக மாற்றி விடவேண்டும் என்று எந்த காலக்கெடுவையும் நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறி இருக்கிறார். ஜெருசலேமில் எங்களுக்கு என்று எந்த இடமும் இதுவரை இல்லை என்றும் கூட அறிவித்திருக்கிறார். இந்தியாவின் நிலை என்ன என்று யாரும் நம்மை யாரும் கேட்டு நச்சரிக்கவில்லை. உள்ளூர் அரசியல் தலைகள் அதை கிளப்பாமல் அமைதியாக இருக்கவேண்டும். ஜெருசலேமில் தான் அரைநூற்றாண்டாக இஸ்ரேலின் தலைநகரமும் அவர்களின் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி கொண்டிருக்கின்றன என்றும் அங்கு முப்பது லட்சம் பாலஸ்தீனியர்களும் அரைக்கோடி யூதர்களும் இருக்கிறார்கள் என்றும் தெரியாமல் உள்ளூர் சேனலில் உளறுவதை போல உளறி கொண்டிருப்பார்கள். பிரச்சினைகளை பூதகரமாக்குவரர்கள். ட்விட் செய்வார்கள். இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்றால், "எண்களின் நிலைப்பட்டால் நாங்கள் எந்த மாற்றமும் கொள்ளவேண்டிய அவசியம் வரவில்லை என்றும் அதுபோன்ற அவசியம் வருவதற்கான சூழல் இனியும் உருவாகாது என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று பழைய பஞ்சாங்கத்தை பாட வேண்டியது தான். அப்படித்தானே பிரிட்டன் டிப்ளமேட்டிக்காக பேசுகிறது. நமது இந்திய சேனல்களில் பேசுவதைப்போல, மீடியாக்கள் எழுதுவதை போல எந்த அரபு தேசமும் அமெரிக்காவை எச்சரிக்கவோ, கடுமையான சொற்களை பயன்படுத்தவோ இல்லை. அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஜோர்டான் மன்னர், சவூதி மன்னர், எகிப்தின் ப்ரெசிடெண்ட் இவர்களிடம் முதலில் பேசிவிட்டு தான் அறிவிப்பை செய்திருக்கிறார். அரபு தேசத்தார்கள் அமெரிக்காவின் முடிவால் அந்த ஜெருசலேம் பகுதியில் அமைதிக்கு குந்தகம் வர வாய்ப்பு வரலாம் என்ற அளவில் மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். அதை சமாளிப்பது மற்றும் சில சிக்கல்களை தீர்ப்பது சம்பந்தமாக அவர்கள் நாளை கூடி பேச போகிறார்கள். மேலும் நாளைய தினம் (இன்று) கூட இருக்கின்ற ஐ நாவின் பாத்து காப்பு கவுன்சிலில் பதினைந்து தேசத்தில் ஒன்றான எகிப்தும் கலந்து கொள்கிறது அங்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பாரக்கவேண்டும். இப்போதைய நிகழ்வு நம் பிராந்தியத்திற்கு வெளியில் நடக்கும் வெளிநாட்டு பிரச்சினை, அதை நாம் தற்போது பஞ்சசீல கொள்கை அடிப்படையில் எடுத்து கொள்வோம். அதுதான் நலம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது நல்லது... பாலஸ்தீனர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதை கை விட வேண்டும்...

 • VIJAIANC -

  This is what true secularism is

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement