Advertisement

சாக்கடை கால்வாயில் பாய்ந்த ஷேர் ஆட்டோ

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து, சாக்கடை கால்வாயில் பாய்ந்தது; இந்த விபத்தில், லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30. இவர், திருப்பூரில் தங்கி ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை, பயணிகளை ஏற்றி கொண்டு, காங்கயம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சங்கிலிப்பள்ளம் ஓடை பாலத்தை ஆட்டோ கடந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த இறக்கத்தில் இறங்கி, சாக்கடை கால்வாயில் பாய்ந்து, விபத்துக்குள்ளானது.
ஆட்டோ கீழே இறங்கும் போது, ஆட்டோ டிரைவர் குதித்துவிட்டார். உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் குப்புராஜ், ராமச்சந்திரன், ராமாத்தாள், மீனாட்சி ஆகியோர், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் நால்வரும், அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, வீடு திரும்பினர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement