Advertisement

கண்டு கொள்ளாத அதிகாரிகள் டூ களமிறங்கிய பொதுமக்கள்

பல்லடம்:பல்லடத்தில், சேதமடைந்த ரோடுகளை சரிசெய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், பொதுமக்களே, களத்தில் இறங்கி, குழிகளை சரி செய்தனர்.பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி, மங்கலம், திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் ரோடுகள், மிகவும் பழுதடைந்துள்ளன. அண்மையில் பெய்த மழையால், இதன் நிலை, மேலும் மோசமானது. ரோட்டில் குழிகள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி, பெரும் அவதியை ஏற்படுத்தியது. இது குறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, ரோட்டில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மங்கலம் ரோடு, வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சேதமடைந்த குழிகளை, மண் கொட்டி மூடினர்.அவர்கள் கூறியதாவது:பல்லடத்தில் ரோடுகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களால், பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களிடம் வரி வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ப ரோடுகளை பராமரிக்க வேண்டும். பல மாதங்களாக உள்ள இப்பிரச்னையை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
எனவே, நாங்கள் களம் இறங்கினோம். இதேபோன்று மக்களை திரட்டி, மற்ற ரோடுகளில் உள்ள குழிகளையும் மூடுவோம். அதன்பிறகும் அதிகாரிகள், நிரந்தரத்தீர்வு ஏற்படுத்த முற்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement