Advertisement

விடுதி காப்பாளரிடம் போலீஸ் விசாரணை

திருப்பூர்:பள்ளி மாணவியரை கழிவறையை சுத்தப்படுத்த வற்புறுத்தியதாக, விடுதி காப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருமாநல்லூரை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மகள், திருப்பூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவி. ராயபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி, இம்மாணவி படித்து வந்தார். இந்நிலையில், விடுதியில் உள்ள மாணவியரை, கழிவறையை சுத்தம் செய்தல், சமையல் செய்தல் போன்றவற்றை கட்டாயப்படுத்தி, செய்ய வைப்பதாக விடுதி காப்பாளர் சங்கீதா மீது, மாணவியின் தந்தை மூர்த்தி, திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். விடுதி காப்பாளர் சங்கீதாவிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். உற்பத்தி பொருளின் தரம்கூட்டத்தில் அறிவுறுத்தல்திருப்பூர் · டிச. 8-

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement