Advertisement

யஷ்வந்த் சின்கா போராட்டம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி: உத்தவ்

மும்பை: யஷ்வந்த்சின்கா போராட்டம் பா.ஜ. ஆளும் மத்திய ,மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி என சிவசேனா கூறினார்.
பா.ஜ.மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா அகோலா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கடந்த 3 நாட்களாக தர்ணா செய்தார். அமைச்சர்கள் குழுவினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டார். இது குறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் உத்தவ் தாக்கரே கூறியது, விவசாயிகளுக்கு ஆதரவாக யஷ்வந்த் சின்கா போராட்டத்திற்கு சிவசேனா ஆதரவு தரும். விவசாயிகளை இந்த அரசு வஞ்சிக்கிறது. யஷ்வந்த்சின்காவின் போராட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. மகாராஷ்டிரா அமைச்சர்கள் யஷ்வந்தசின்காவிடம் கெஞ்சி கூத்தாடி தான் போராட்டத்தை கைவிட வைத்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்ந்தால் நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் பிரச்னை பெரிதாகிவிடும் என அஞ்சுகின்றனர் .இவ்வாறு உத்தவ் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

 • தாமரை - பழநி,இந்தியா

  உத்தவ்... பா ஜ க வேண்டாம் என்றால் அவர்களது கூட்டணியை விட்டு ஓடிவிட வேண்டியதுதானே அதை விடுத்து ராகுலையும் சிதம்பரத்தையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு மோடியைக் குறை சொல்கிறீர் ?

  • mangaibagan - bangalore,இந்தியா

   இதையே இப்படி சொன்னால் என்ன? அவர்தான் பிஜேபிக்கு எதிர்ப்புக்குரல் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே வருகிறாரே? அவரை கூட்டணியை விட்டு பிஜேபி நீக்கினால் என்ன?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  காலை சுற்றிய பாம்பு. இந்த சிவசேனாவும் சரி, சின்ஹாவும் சரி, பதவி ஆசையை வைத்தே தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்கின்றனர். பிடிக்கவில்லை என்றால் ஆதரவை விலக்கிக்கொள்வதுதானே.

 • PrasannaKrishnan -

  Who the hell are you to give warning? You beat Tamil people. First you be perfect. treat all equally.

 • Mariappa T - INDORE,இந்தியா

  உத்தவ் ஜி, பிஜேபி அழிவை நோக்கி செல்கிறது எனவே சுதாரித்து கொள்ளவும்.

  • JOKER - chennai,இந்தியா

   நல்லா இருந்த சேனாவை பிஜேபி கூட சேர்ந்து போட்டியிட்டு கடைசில அவனுங்க சேனாவை குப்புற தள்ளி விட்டுட்டானுங்க . கூட இருந்தெய் குழி பறிக்கும் கயவர்கள்

  • sivan - Palani,இந்தியா

   ஜோக்கர் நல்லா இருந்த சேனாவா? நீங்கள் மும்பையில் வசித்தீர்களா? அல்லது நெருங்கிய உறவினர் வசித்தார்களா? எத்தனை முறை சிவ சேனாவுக்கு ஒட்டு போட்டீர்கள்/ போட்டார்கள்? .. அவரவர் மாநில தேர்தல் விஷயங்களை அந்தந்த மாநில அரசியலை அந்த மக்களே பார்த்துக் கொள்வார்கள். நீங்களோ நானோ கருத்து எழுதுவதால் அவர்கள் யாரும் மாற்றி ஒட்டு போடப் போடுவது இல்லை. . நம் மாநிலம் இப்படி சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்க நீங்கள் பாவம் உத்தவ் ஜிக்கு எல்லாம் அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை. நம் கருத்துக்களை அவர்கள் படிக்கவும் போவதில்லை. அப்படி இருக்க மஹாராஷ்ட்ரா விஷயத்தில் உத்தவுக்கு முந்திக் கொண்டு ஆதரவு கொடுப்பதும், உ.பி விஷயத்தில் யோகி க்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அவசியமே இல்லை. நம் கருத்தை ( ஆதரவோ எதிர்ப்போ) படிக்கவே போகாத உத்தவுக்கும் யோகிக்கும் கருத்து எழுதி நம்மை நாமே ஜோக்கர் ஆக்கிக் கொள்ள வேண்டாமே?? என்ன நான் சொல்றது?

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எச்சரிக்கைகள் விளைவுகள் தெரியாதவர்களுக்கு தான். பிரச்சினைகளில் லாபம் பார்ப்பவர்களிடம் அது எடுபடாது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சின்காவை இவர் தனது கட்சியில் சேர்த்துக்கொள்ளலாமே..

  • JOKER - chennai,இந்தியா

   பிஜேபி முதலில் சின்ஹாவை நீக்கட்டும் . அப்புறம் பார்க்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement