Advertisement

ஊறுகாய்க்கு வரி விலக்கு : ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: 'ஊறுகாய் பாக்கெட்டிற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து, முழு விலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்து, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், தினமும், ஊறுகாய் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, 50 கிராமிற்கும் குறைவான எடையுள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து, முழுமையாக விலக்களிக்க வேண்டும். ஊறுகாய் உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும், ஏழை, எளிய கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சிறுதொழில்களின் வெற்றியில் தான், கிராமப்புற வாழ்வாதாரம் அடங்கியிருப்பதால், ஊறுகாய்க்கு வரி விலக்கு அளித்து, சிறு தொழில், நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

  • Jeeva - virudhunagar,இந்தியா

    Apo thana saraku ku side dish correcta erukkum stalinukku ?

  • Prem - chennai,இந்தியா

    urukava vechi arasiyal aathayam thedugirar seilu

  • Vaishalee - bangalore,இந்தியா

    Stalin eppa yaru pesunalume oru kutham kandu pidichuruvaru.. etho avaru mattum than correct a work panraru pola

  • Sarathi_Ganesh - Delhi,இந்தியா

    thondargalukku sydish vaangi thara athiga selavu aaguthu pola stalin kku ...

  • Vel - Chennai,இந்தியா

    எலெக்சனுக்கு குவாட்டர் சிக்கன் தர முடியலே. ஊறுகாய் விலை குறைக்கமுடியுமா

  • GovindarajanThenkondar -

    அப்பன் திறந்து விட்ட சாராயத்திற்கு, மகன் ஊறுகாய் தருவது தானே நியாயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement