Advertisement

திட்டமிட்ட கொள்ளை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்

ராஜ்கோட்: ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஒரு திட்டமிட்ட கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காங்., கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஒரு திட்டமிட்ட கொள்ளை; மக்கள் மீது திணிக்கப்பட்ட பேரிடர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கி முன் வரிசையில் நின்று, ஏராளமானோர் உயிர் நீத்தனர். மத்திய அரசு, இனியும் இது போன்ற தவறு செய்யக் கூடாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்,
Advertisement
 

வாசகர் கருத்து (76)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  எல்லா பக்தாள்ஸுக்கும் கோவில்பட்டி கடலை முட்டாய் ஒரு பாக்கெட்டு பார்சேல்.. இது லோனாவாலா சிக்கிடை விட டேஸ்ட்டு சூப்பரா இருக்கும் ஜீக்களே..

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  குடோன்களிலும், கன்டெய்னர்களிலும், பண்ணை வீடுகளிலும், பினாமிகளிடமும் பதுங்கி இருந்த பல லடசம் கோடி ரூபாய் பணம் வங்கிக்கு வந்தது கொள்ளையா. பணமதிப்பிழப்பால் ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ, நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணக்காரர்களோ பதிப்படையவில்லை. ஒரு மாதம் கொஞ்சம் அசெளகர்யம்தான். நாட்டுக்காக அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதே சமயம் ஊழல் அரசியல்வாதிகள், லஞ்ச அதிகாரிகள், ஹவாலாக்கள், போதை பொருள் மாஃபியாக்கள், சட்டவிரோதமாக பணத்தை கொள்ளையடித்து குவித்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். பத்து ஆண்டுகள் இவர்களுக்காக அரசியல் செய்த சிங் இப்படித்தான் புலம்புவார். நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வைமேக்ஸ் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று கொள்ளையடித்து குவித்த பல லட்சம் கோடிகளை பினாமிகளின்கணக்கில் போட்டு அவர்களுக்கு கமிஷன் கொடுத்து மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான். இனி அப்படி கொள்ளையடிக்கப்பட்ட கோடிகள் எப்படி வங்கிக்கு வந்திருக்கிறது எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்று வருமானவரித்துறை தீர விசாரித்து ரெவிட் அடிக்கவேண்டியதுதான் பாக்கி. பட் சிங்கின் நேர்மை பாராட்டவேண்டும். அவர் எந்த இடத்திலும் பத்து ஆண்டுகாலம் நான் நேர்மையாக லஞ்சம், ஊழல், கமிஷன் அதிகாரத்துஷ்பிரயோகம் இல்லாத ஒரு ஆட்சியை கொடுத்தேன் என்று சொன்னதே இல்லை.

 • Snake Babu - Salem,இந்தியா

  //அதிகாரவர்க்கமும் நீதிபதிகளும் காங்கிரஸ் காலத்து நியமனங்கள் அவர்களை நீக்க வழியுண்டா? அவர்கள் மூலம் காங் திருட்டுகளை தண்டிப்பட்டது சாதாரண வேலையில்லை... // அப்ப உங்களால முடியாதுனு ஒத்துக்கீறிங்களா தேச நேசன் - Chennai,இந்தியா அவர்களே. தண்டிக்க முடியாது. இவ்வளவு அசுர பலம் இருந்தும். சரி ஒன்றுக்கு பதில் சொல்லிவிட்டேர்கள். அடுத்து பணம்தப்பிழைப்பின் பலன்களை கொஞ்சம் பட்டியலிட்டு கூறுங்களேன். அய்யா தேவையான விவாதம் இது போன்றவையே, அது ஆரோக்கியமான விவாதம். அய்யா யாரவது 500 1000 செல்லாததாக்கியது GST, மானியங்கள் நீங்கியது இதில் அடைந்த நன்மைகள் இவற்றை எல்லாம் விவாதியுங்கள். இதை தான் நாங்கள் விரும்புகிறோம். தற்போது அணைத்து கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நடக்கும் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியது என்ன என்று ஆராயாமல் சுட்டிக்காட்டியவரை எதிர்கட்சினராக சித்தரிப்பது தவறு.

 • N Maheswaran - Itanagar,இந்தியா

  PRADHAN MANTRI MUDRA YOJANA திட்டத்தின் கீழ் 9 கோடி பேரை தொழிலாளராக அல்ல முதலாளி ஆக்கியுள்ளார். அவர்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருப்பார்கள் ஊகிக்கவும். திட்டமிட்ட ஊழல். 2G, CWG, Coal gaye, அகஸ்தா ஹெலிகாப்டர், நேஷனல் ஹெரால்டு, வத்ரா நில ஊழல், இன்னும் பல. இத்தனையும் மௌனமாக பார்த்து கொண்டே இருந்த மௌன மோகன (அ) சிங்கம் பேசுகிறது. யோக்கியன் வருகிறான் செம்பைத் தூக்கி உள்ளே வைன்னு ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  இந்த நோட்டு மாற்றம் பற்றி ஒண்ணு தெரிந்துக்கணும். அதாவது ரிசர்வ் வங்கி 117000 கோடி நோட்டு அடிச்சதுலே 115000 கோடி திரும்பிடுத்துன்னு சொல்வதால், பெரிய நிபுணர்கள் நோட்டு மாற்றத்தால் பயன் இல்லை,மக்கள் அவதி பட்டதுதான் மிச்சம் என்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் கள்ள நோட்டு 110000 கோடிக்கு மேல் நடமாடியது. எது நல்ல நோட்டு எது கள்ள நோட்டு என்று பெரும்பாலான நேரங்களின் கண்டுபிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானும் பங்களாதேஷும் நேபாள் மூலமாக உள்ளே தள்ளின. ஆகையால் இன்னும் 112000 கோடி நோட்டு பிரபலங்களிடம் உள்ளது. அது மொத்தம் வேஸ்ட். அவர்கள் தான் காச் மூச் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். எப்போதும் போல் ஏழை பங்காளனாக நடிக்கிறார்கள். இது இப்போதைய அரசுக்கும் தெரியும். ஆனால் சொன்னால் வெட்க கேடு ஆகிவிடும். அதற்குத்தான் புது நோட்டு வந்தது, திட்டமும் வெற்றி பெற்றது. திட்டம் தோல்வி என்றால் யாரும் ஒப்பாரி வைக்க அவசியமில்லையே.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  ஒரு அயல் நாட்டு பிரதமரால் 'வயசான கிராமத்து பொம்பளை' போல் செயல்படுகிறார் என்று வர்ணிக்க பட்டவர், பல கோர்ட்களினால் பலமுறை கூட்டு வைக்கப்பட்டவர், ரெசெர்வ் வங்கியின் கவர்னராக இருந்தும் அங்கு நடக்கும் பிராடுகளை பற்றி ஒன்றும் தெரியாதவர், தன் மந்திரிசபையின் தீர்மான நகலை ஒருவன் லைவ் டிவி சானலில் கிழித்து எறிகிறான் என்று தெரிந்தும் முதுகெலும்பு இல்லாமல் எதிர்க்க துணிவில்லாமல் ஹி ஹி என்று குழைந்ததோடு அல்லாமல், அந்த தீர்மானத்தையே வாபஸ் வாங்கிய சிகாமணி, பல மெகா ஊழல்களுக்கு துணை போயும், இன்னும் பல ஊழல்களை நேரடியாக செய்தும் தலைவியிடம் சபாஷ் பெற முயன்ற கேவலமான பேர்வழி, இவர் எந்த தைரியத்தில் வெளியே உலவுவதோடல்லாமல், மேடையேறி பேசுகிறார்? மக்களின் மறதி மீது அவ்வளவு நம்பிக்கையா?

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  ஹர்ஷத் மெஹதா, ஸ்டாக் மார்க்கெட்டில் செய்த திருட்டுத்தனத்தால் ஆயிரக்கணக்கான நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வின் முழு சேமிப்பை இழந்தது யார் காலத்தில்? அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்த FINANCE MINISTER அதை திட்டமிட்டு செய்த சதியாக ஒப்புக்கொள்வாரா ? மோடி எடுத்தது பிரம்மாஸ்திரம் . கருப்பு பணத்தாலும் லஞ்ச பணத்தாலும் வளர்ந்து வோட்டை வாங்கி ஆட்சி புரிந்து வந்த உங்கள் கட்சிக்கு விழுந்த சரியான அடி தான் மௌன சாமியாரை பேசவைத்ததா ?

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நீங்க தான் அதில் கில்லாடி. உங்க கூட்டாளி ஜைட்லீ செஞ்ச கோளாறு தான் அரசுக்கு கெட்ட பேரை கொடுத்தது.

 • vbs manian - hyderabad,இந்தியா

  நீர் ,நிலம் ,ஆகாயம் என எல்லாவற்றிலும் ஊழல் , இவர் அரசு இயங்கிய போது அடித்த கொள்ளை பணம் எவ்வளவு, எங்கே போயிற்று. பண நீக்கத்தில் மக்கள் பணம் பாங்குகளில் தான் உள்ளது. திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இந்த வயதான காலத்தில் ஏன் இப்படி திரித்து பேசி பொழுதை கழிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை கூட்டு பொறுப்பில் [collective responsibility] இயங்குகிறது. இவர் காலத்தில் நடந்த ஊழல்களுக்கு இவர் பொறுப்பேற்க வேண்டும்.

 • Jayvee - chennai,இந்தியா

  பாவம் ஜெயா சசிகிட்ட சிக்கின மாதிரி இவரு சோனியாகிட்ட சிக்கியிருக்காரு .. அவர் சொன்னா இவரு sollanum.. என்ன ராவுல் வின்சி எழுதிக்கொடுத்தக்கூட படிக்க தெரியாதவரா இருக்காரே

 • sridhar - Chennai,இந்தியா

  Mms ஐயா , உங்கள் திட்டமிட்ட கள்ள மௌனம் தான் பத்து வருடத்தில் இந்தியாவையே ஊழல் புதைகுழியில் தள்ளியது. வழக்கம்போல் பேசாமலேயே இருங்கள்.

 • Anand - chennai,இந்தியா

  கோபம் வர்ற மாதிரியெல்லாம் காமெடி பண்ணக்கூடாது திரு மன்மோகன் அவர்களே.

 • Raji - chennai,இந்தியா

  கடந்த 10 வருட கான்கிராஸ் ஆட்சியில நீங்க அடிக்காத கொள்ளையா உனக்குலாம் மனசாட்சியே இல்லையா, 3 வருட மோடி ஆட்சியில உன்னால ஒரு ஊழல் குற்ற சாட்டாவது சொல்ல முடியுமா? நான் இங்க கமெண்ட் போடுற எல்லாரையும் சேத்து தான் கேட்குரேன் , சரி நீ பிரதமரா இருந்தப்ப தான் மக்களுக்காக எதயுமே பேசல , சரி இப்பவாது பேசலானு முடிவு பண்ணிருக்க போல

 • Indhuindian - Chennai,இந்தியா

  மறை கழண்டு விட்டது. செல்லாத நோட்டுகளை யார் நரேந்திர மோடியா ஆட்டையை போட்டார்? நிலக்கரி வூழல், ஸ்பெக்ட்ரம் கோட்டால, ஹெலிகாப்டர் வூழல், நேஷனல் ஹெரால்டை ஆட்டைய போட்ட போது இந்த ஞானோதயம் தூங்கி கொண்டு இருந்ததை. இவைகளை தடுத்திருந்தால் உம்மை உலகமே போற்றி இருக்கும். அவைகளுக்கு துணை போய்விட்டு பதவியே போறும் என்று மௌனி யாக இருந்துவிட்டு இப்போது இந்த மாதிரி பேசுவது வெட்க கேடு

 • sethu - CHENNAI,இந்தியா

  இப்போது நடக்கும் செயல்அனைத்திற்கும் இவர்தான் பொறுப்பு, இவர் அதிகாரத்தில் இருக்கும் போது இந்தியனுக்கு பயப்படாமல் இத்தாலிக்கு பயந்து செயல் பட்டதன் விளைவு நாங்கள் இதை அனுபவிக்கிறோம். பேச வேண்டிய இடத்தில் பேசாமல், செயல் பட வேண்டிய இடத்தில் செயல் படாமல் இருப்பதே இவருக்கு வேலை.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  நீங்கள் அடித்த கொள்ளையை மறைப்பதற்கு வாஜ்பாயிக்கு பின் 60 ஆண்டு ஆண்ட நீங்களே வறுமையை கண்டு பிடித்து ஊரக வேலை வாய்ப்பு என்ற திட்டம் பேரில் மக்களுக்கு 200 ரூபாய் உறங்க வைத்து சம்பளம் தரும் உங்களால் இந்த நாடும் முன்னேற போவதில்லை.மக்களும் இந்த 200 ரூபாய்க்கு சோம்பேறியாகி விட்டார்கள்.இனிமேல் நீங்கள் கொடுக்கும் இலவசம் வொட்டாக மாற போவதில்லை.இந்திய பொருளாதார மேதை பொருளாதாரத்தை சீராளத்ததுடன் கொள்ளையும் அடிக்கிறீர்கள்.மக்களும் சகித்திதான் வாழ்கிறார்கள்.

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  இதெல்லாம் ஊமை குசும்பு. நான் நல்லவன், ஆனா நான் பிரதமராக இருந்த போது நடந்த ஊழலை கண்டுக்க மாட்டேன். பதவி சுகத்துக்காக கான் + கிராஸ் கட்சியின் ஊழல் சாம்ராச்சியத்தின் தலைவனான ஊழலின் ஊமை குசும்பன் மம்மோகனை ஏன் சிறையில் தள்ளக்கூடாது.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தினம் ஏறும் பெட்ரோல் டீசல் விக்கையை பார்த்தாலே தெரியும் இந்த கேடு கெட்ட ஆட்சியின் லட்சணம்

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  துளசி சிங்கம் கூலிக்கு இல்லை நாட்டுக்காக மாரடிக்குறோம் ஒன்ன மாதிரி முட்டைக்கு அது புரியாது

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  சமானியன் வங்கியில் பழைய நோட்டை கொடுத்து 2000 நோட்டு வாங்கும் போது நம்பரை எல்லாம் குறித்து கொண்டு கொடுத்தீர்கள்.. ஆனால் சேகர் ரெட்டிக்கு மட்டும் கோடி கணக்கில் 2000 நோட்டு எந்த வங்கியிலிருந்து சென்றது என்று கேட்டால் தெரியாது என்று சொன்னீர்கள். இதாண் உங்க லட்சணம்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  அப்போ 2 ஜி கொள்ளை.... நிலக்கரி கொள்ளை... அகஸ்டா கொள்ளை..... இப்படிப் பல கொள்ளைகள் திட்டமிடப்படாத கொள்ளையா......???

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவுனுங்க majority கூட இல்லாத state கள்லயும் குறுக்கு வழில பதவி வெறி புடிச்சி அலையற போதே தெரியும், திட்டம் போட்டு கொள்ளையடிக்கத்தான் ஒவ்வொரு காரியமா அரங்கேத்துறானுங்க... ஆனா, யோக்கிய சிகாமணிங்க மாரி வக்கணையா பேசுவானுங்க....

 • Nagar Iyer - mumbai,இந்தியா

  திட்டமிட்ட கொள்ளை என்பது சரிதான். 70 ஆண்டுகளாய் நாட்டை கொள்ளை அடித்து பதுக்கி வைத்து இருந்தவர்களை மோடி அரசு ஒரே இரவில் எந்த வித சோதனைகள் செய்யாமல் கொள்ளை அடித்து அந்த பணத்தை அதன் நியாயமான சொந்தக்காரர்களுக்கு திருப்பி கொடுத்து இருக்கிறது. PRADHAN MANTRI MUDRA YOJANA திட்டத்தின் கீழ் 9 கோடி தொழில்முனைவோருக்கு 4.5 லக்ஷம் கோடி ரூபாய் வட்டியோ பிணையமோ இன்றி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 5 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  வருடம் ஒரு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லிய பிஜேபி இந்த மூன்று வருடங்களில் மூன்று கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியதா? என்ன? மூன்று கோடி பேர் வேலை போயிருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது. பிஜேபி அரசால் இந்திய அளவில் விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை

 • Lake Daniel - YogJakarta,இந்தோனேசியா

  மிச்சர் முடுஞ்சிடுதப்பா ????

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  மன்மோகன் சிங் பேசுவது ரொம்பவும் சரியாகத்தான் சொல்கிறார். பாதிக்கப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். கண்ணை மூடிக்கொண்டு ஜால்ரா அடிப்பவர்களுக்கு என்ன தெரியும்? பிஜேபீ யில் உள்ள பெரிய தலைகளே இந்த ரூபாய்நோட்டு மாற்று விவகாரத்தை தினம் தினம் குறைகூறி திட்டி வருகின்றனர். மன்மோகன்சிங் சொன்னால்தான்தான் குற்றம் ஆனால் முன்னால் பிஜேபீ நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சின்காவே குறை சொல்லுகிறாரே அதெல்லாம் கண் தெரியிவில்லையா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வேலைவாய்ப்புக்கள் பறிபோயிருப்பது உண்மைதான் .வாழ்க்கையில் ஒருமுறைகூட. வரியே காட்டாமல் கறுப்பில் வணிகம் செய்தவர்களின் பிழைப்பில் மண் விழுந்துள்ளது. அவர்களிடம் எடுபிடிவேலை செய்த்தவர்களுக்கு வேலைபோனதும் நியாயம்தான். நேர்மையானவனிடம் வேலைசெய்தால் கூலி குறைவாகத்தான் கிட்டும் ஆனால் அவனிடம் வேலை செய்ய உங்கள்பிமான சிறுபான்மை ஹவாலா கடத்தல் இனத்துக்குத்தான் கூச்சமாக உள்ளது அவர்களுடைய பழைய முதலாளிகள் ஹவாலாவுக்காக வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றாக கஷ்டப்பட்டது உங்களையும் பாதித்துள்ளதே

 • Snake Babu - Salem,இந்தியா

  அய்யா. கூறி இருக்கும் கருத்திற்கு பதில் கூறுங்கள். அதை விடுத்து காங் குறை கூறுதல் ......... அய்யா அவங்க சரி இல்லை என்று தான் நீங்கள் ஆள்கிறீர்கள். உங்கள் நடவடிக்கை யால் ஏற்பட்ட நன்மைகளை பட்டியலிடுங்கள். அடுத்து காங் ஊழல் ஊழல் என்று கூறுகிறீர்கள் அதை நிருபித்து அத்தனை பேரையும் உள்ள தூக்கி போடுங்கள். அசுர பலத்துடன் இருந்து ம் உங்களால் நிருபிக்க முடியும். அதை செய்யுங்கள். அதை விடுத்து எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்க போகிறீர்கள். நன்றி வாழ்க வளமுடன்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உங்க கட்சி தலைவர்கள் எத்தனை பேர் தினமும் கியூவில் நின்று நோட்டை மாற்றினார்கள் எனும் விவரம் தரமுடியுமா? காங்கிரசில் அவனவன் பல கோடி பழைய நோட்டை வைத்துக்கொண்டு வங்கிப்பக்கமே வராமல் மாற்றிய ஜாலத்தை விளக்குங்களேன்(வங்கி ஊழியர் தொழிற்சங்கமே உங்கள் கட்சிகையில்தான் எனும்போதும் என்னகவலை?) அட உங்கள் வசமிருந்த பழைய நோட்டுக்களை கியூவில் நிற்காமல் எப்படி மாற்றினீர்கள் என்று கூறியதுண்டா? நீரா ராடியா யார்? (?)அவள் அவர் ஏலம்விட்டு உங்கள் மந்திரிசபையை அமைத்ததுபோல ஏன் ஸ்பெக்ட்ரத்தையும் நிலக்கரியையும் ஏலம் விடவில்லை ? ஓ அமைச்சரவை ஏலத்தில் விட்டதைப்பிடிக்கவா? (எங்க ஊர் குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை ஏலம் விடுவார்கள். அதுபோல ஊழல் பண்ணி ஆட்டயப்போடும் உரிமை ஏலம் போலிருக்கிறது ) உங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் நடந்த ஊழல்களில் ஏற்பட்ட இழப்பை வைத்தே நாட்டில் வேலையின்மையைப் போக்கியிருக்கலாமே .நீதிமன்றங்கள்மட்டும் சுறுசுறுப்பாக இருந்தாலே உங்க கட்சியில் ஒரு தலையும் வெளியே இருக்காது .படித்த படிப்புக்கு வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமலே வாழ்ந்து பெயிலாகிவிட்டீர்களே

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  இங்கே மோடியை ஆதரித்து எழுதவே ஓர் கூலிக் கூட்டம் பணிசெய்கிறது. அவர்கள் எவ்வளவு செருப்படியை மக்கள் வாங்கி நொந்தாலும் கவலைப் படாமல் கூலிக்கு மாரடிக்கும் வெட்டிகளாவர்

 • Kunjumani - Chennai.,இந்தியா

  எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார். காந்தியின் நட்பு கூடா நட்பா?

 • Paranthaman - kadappa,இந்தியா

  யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் விலை வாசி மேலும் மேலும் உயரும். கூடுமே தவிர. குறைவதற்கு சாத்தியமில்லை.

 • Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த மௌன சாமியாருக்கு இப்போது எங்கிருந்து இப்படியொரு ஞானம் வந்தது. சரி கொள்ளையடித்தது யார்?

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  நீங்க திட்டங்களே கொள்ளையடிப்பதற்க்காக தானே அய்யா தீட்டினீர்கள்..? குஜராத் தேர்தலுக்காக ராகுல் எழுதி கொடுப்பதையெல்லாம் வந்து படிக்க வேண்டிய பரிதாப நிலையில் நீங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. ஆழ்ந்த அனுதாபங்கள்..

 • grg - chennai,இந்தியா

  MMS stooping to such low levels? The demonitisation was an inevi move. MMS must be knowing this well. when more than 80% of the notes in circulation was of 500 denomination due to fake notes from pakistan. helped looters of congress party. MMS is shameless with his 'silence' when he was PM and now also shameless because of such talks.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இவா் மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இப்படி உளறி கெடுத்துக்கறார். இவ்வளவு வயசான பிறகும் இந்த அடிமை பிழைப்பெதற்கு? சற்றும் தன்மானமில்லாத மிக கீழ்தரமான மனிதராய் இருக்கிறார். 10 வருடம் பதவி சுகம் அனுபவித்தாகி விட்டது பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்து பதுக்கிய ஊழல் பணமெல்லாம் செல்லா காசாக செல்லரித்து போனதனால் வந்த விரக்தியில் மனநிலை மாறி பிதற்றுகிறார் என்றே தோன்றுகிறது. தன் இத்தாலிய திருட்டு முதலாளியின் ஏவளாலாய் இன்னும் கால் நக்குவதெதற்கு? சீக்கிய இனத்தின் அசிங்கம் இவா், இந்திரா இறந்த போது பல்லாயிரம் அப்பாவி சீக்கியா்களை அநியாயமாய் கொன்று குவித்த கான்கிராஸ் கயவாளிகளுடன் கைகோர்த்து பதவிக்காக பிச்சை பிழைப்பு நடத்தும் இவரை சீக்கிய இனம் என்றும் மன்னிக்காது.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஏய்யா எப்பவுமே வாயை தொறந்தா புளுகு மூட்டைதானா? இதுல வேற பொருளாதார மேதை> காலம் கடந்த ஞானம்? வேஸ்ட்?

 • Paranthaman - kadappa,இந்தியா

  மன்மோகன் சிங் ஒரு குசும்பன். தான் ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் வாயை திருந்து பேசியதே கிடையாது. ஏதாவது கேட்டால் தலையை மட்டும் ஆட்டுவதுடன் சரி. ஆட்சியில் இல்லாத நேரத்தில் தினமும் ஆளும் கட்சியை தாக்கி பேசுவது குசும்பு தனம். பூமியில் வாழ தகுதி இல்லாத மனிதர்கள்.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இந்த ஊமை கோட்டான் கூட கூவுதா? ஆச்சரியம்தான்?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  He never told that he will deposit 15 lakhs rupees in everybody bank account.

 • rajan. - kerala,இந்தியா

  கோல் கேட் ஊழலில் துணை போன இந்த ஆளை ஏன் உள்ளே தூக்கி வைக்க கூடாது. பாவம் சட்ட துறை முதன் முதலில் ஒரு முன்னாள் பிரதமரை தண்டிக்கும் அவ பெயர் வேண்டாம் என எண்ணி இருக்கலாமோ.

 • rajan. - kerala,இந்தியா

  ஆம் உங்கள் ஊழல்வாதிகள் இன்றைய ரைடினாலே தினமும் செத்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் இந்த நிலைப்பாடு தொடரும். அன்று அரசு கஜானாவில் ஆட்டைய போட்டு மக்களின் கலாச்சாரத்தை கட்டுக்கோப்பை சீரழித்தீர்கள் இன்று மக்கள் அந்த சீர்கேடுகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் உங்க அத்தனை ஊழல் அரசியல்வாதிகளும் சூறையாட படுவீர்கள். உங்கள் முன்னாள் நிதி அமைச்சன் என்னமா கோடிகளில் மவனை வைத்து வெளிநாட்டில் சேர்த்திருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம் அதை பற்றி ஏன் நீங்கள் அறிக்கை விட கூடாது.

 • அப்புஜி -

  இவருக்கு ரொம்ப முத்திப் போச்சு...

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தற்போது நடப்பது போல ஊழல் இல்லாத ஆட்சி நடத்தினாலே பாஜக 20 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும். ஆனாலும் பாஜக பணமதிப்பிழப்பு GST போன்ற முயற்சிகளில் ஈடுபட காரணம் உங்கள் ஆட்சியில் நீங்கள் அளவுக்கதிகமான ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விட்டு, ரொக்க பரிவர்த்தனை ஊக்குவித்து, கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் பல லட்சம் கோடிகள் புழங்க விட்டு, என்று வேண்டுமானாலும் நம் நாட்டு பொருளாதாரம் நொறுங்கி விடும் என்ற பேராபத்தான நிலையில், ஆட்சி முக்கியம் இல்லை, நாடு தான் முக்கியம் என்று பாஜக சீர்திருத்த பணியில் இறங்கியுள்ளது பாஜகவின் தேச பற்றை காட்டுகிறது. உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்தது தான் திட்டமிட்ட கொள்ளை..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பொருளாதாரம் சுத்தமாக படுத்துவிடும்... இந்தியா திரும்ப எழவே முடியாது என்றெல்லாம் கதை விட்டார்கள்... இப்பொழுது பத்து சதவிகிதத்தை எட்டாது என்றெல்லாம் ஓவராக கதை விடுகிறார்கள்... பொய் மேல் பொய் சொல்லி மன்மோகன் சிங் ... என்ற அளவில் ஆகி விட்டார்...

 • thiru - Chennai,இந்தியா

  என்ன பண்றது வடநாட்டு மக்கள் முட்டாள்தனம் செய்த பெரிய தப்பு... இப்ப குத்துதே குடையுதேன்னா...

 • Raja - Chennai,இந்தியா

  அப்படியே காங்கிரஸ் ஆட்சியில நடந்த மெகா ஊழல்களுக்கும் பெயர் என்னனு சொன்னா நல்லா இருக்கும்...

 • Indhiyan - Chennai,இந்தியா

  தாத்தா முழிச்சிட்டார்டோ . பேச்சுகூட வந்துடுச்சு. இந்தியாவின் மாபெரும் ஊழல்கள் சென்ற காங்கிரஸ் காலத்தில் தான் நடந்தது. அப்போல்லாம் மண்ணு மாதிரி இருந்து விட்டு இப்போ சத்தம் வருதோ??

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பிஜேபி ஆட்சியில் ஊழல் இல்லையென்றால் மக்களும் நாடும் நன்றாக இருந்து இருக்க வேண்டும் . பணம் நிறைய சேர்ந்து இருக்கும் .குறைந்த பட்சம் ரேஷன் சர்க்கரை அரசி பருப்பு காஸ் பெட்ரோல் விலை ஏத்தாமல் இருந்து இருக்கலாம் காங்கிரஸ் ஆட்சியை விட பிஜேபி ஆட்சியில் வாழ்க்கை படு மோசம் . எல்லா விலையும் உயர்ந்து விட்டது . அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரன் ஆனதை தவிர ஒரு சாதனையும் இல்லை . பிஜேபி ஆட்சி ஆரம்பிக்கும் போது இருந்த விலை, முடியும் போது இரண்டு மடங்கு ஆகிவிடும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement