Advertisement

கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி கைது


மும்பை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகினறனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிறன்று சோதனை நடத்தி 3 இளம் பெண்களை மீட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி,43 என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். பைசர் போலீஸ் நிலையத்தில் வைத்து சவீதாபாரதியிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவர் உள்ளிட்ட பலரை கொன்று புதைத்துள்ள திடுக் தகவல் வெளியானது. .
உடன் அவரது வீட்டினை செவ்வாயன்று சோதனை நடத்தியதில் செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார் அது ஆண் சடலம் என்பதும் அவர் சவீதாவின் கணவர் ஷாதேவ் 49 என்பதும் தெரியவந்தது.

சினிமாவை மிஞ்சிய இந்த திகில் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கிரண்கபாடியா கூறுகையில், சவீதா பாரதி தனது கணவர் ஷாதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.. சவீதாபாரதிக்கு கமலேஷ் என்வருடன் இருந்த கள்ளகாதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது கடந்த 2004-ம் ஆண்டு கணவர் ஷாதேவ், குடிபோதையில் இருந்த போது மனைவி சவீதா பாரதி, தனது கள்ள காதலனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அடித்து கொன்று செப்டிக்டேங்கில் புதைத்து வைத்ததுள்ளார். மேலும் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்கள் உடலை தேடிவருகிறோம்.இவ்வாறு கிரண் கபாடியா கூறினார்.கைதான சவீதா பாரதியை போலீசார் நேற்று பல்கார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Ray - Chennai,இந்தியா

  கொண்டு வந்தால் சகோதரி கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் கொலை செய்வாள் பத்தினி உயிர்காப்பான் தோழன் - பழங்கால சினிமா வசனம்

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  இவள் ஒரு பத்தினி, அது தான் கொலை செய்து விட்டாள். அப்பாடா ஒரு வழியாக அந்த பழமொழிக்கு ஒரு மீனிங் கிடைத்து விட்டது.

 • Meenu - Chennai,இந்தியா

  ஆண்களுக்கு நிகர், சம உரிமையில் பெண்கள் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்திய பெண்கள் மேலைநாட்டு பெண்களை விட மேல் என்றால் இப்படித்தானோ ? இவளுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுக்கணும். கள்ளக்காதலனையும் தூக்கில் தொங்க விடணும்.

 • Jayvee - chennai,இந்தியா

  இவருக்காக வாதாட பல பெரிய தலைகள் இப்போதே ரெடியாக ullana.. கபில் சிபல் மனிஷ் tiwari, ஜெத்மலானி போன்ற சான்றோர்கள் கியூவில் உள்ளனர்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  ஆஹா.... இதுவல்லவோ சம உரிமை....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ராஜீவ் இதுபோலதான் கொல்லப்பட்டார் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உண்மை குற்றவாளிகள் ராஜபோகமாக வாழ்கிறார்கள்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மோகமுள்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  இவள் தான் படி தாண்டா பத்தினி.

 • Scorpio - Alaska,யூ.எஸ்.ஏ

  வாராய் - நீ வாராய் - போகும் இடம் வெகு தூரம் இல்லை - நீ வாராய் - பெண்களுக்கு ஜீவனாம்சம் - ஆயிரம் பொற்காசுகள் - அவர்கள் கூட இருந்து கொள்ளையடிக்கும் - கருப்பு கோட்டுகள் - வாழ்க ஆண்கள் - வாழ்க வளமுடன் -

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  படத்த பாத்தா இம்புட்டு செய்யற ஆளு மாதிரி தெரியல.

 • ushadevan -

  தப்பாக முடிவெடுத்த தப்பான பெண்.இதுபோல் கொலை வெறி பிடித்த ஜென்மங்கள் நாட்டின் களங்கம்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  இனிமேல் பெண்களுக்காக வக்காலத்து வாங்க கூடாது போல் இருக்கிறது . கொடூர குணத்தில் ஆண்களை மிஞ்சுகிறார்கள் . இந்த மாதிரி பெண்களையும் கைது செய்து கடுங்காவல் தண்டனை கொடுக்கவேண்டும்

 • appaavi - aandipatti,இந்தியா

  ஆஹா இவளல்லவோ குடும்ப விளக்கு....

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியின் இலக்கணமாக திகழும் பெண்ணரசி நீடுழி வாழ்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement