Advertisement

காங்., தலைவர் பதவி மனு நிராகரிக்கப்பட்டதாக புகார்

புதுடில்லி: ''காங்., தலைவர் பதவிக்கு போட்டியிட மனு கொடுத்தேன்; ஆனால், எந்த காரணமும் கூறப்படாமல், மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது,'' என, உ.பி., மாநில, காங்., பிரமுகர், அயூப் அலி கூறியுள்ளார்.

காங்., தலைவர் பதவிக்கான தேர்தலில் கட்சி தலைவர், சோனியாவின் மகனும், துணைத் தலைவருமான, ராகுல் பெயரில், 89 மனுக்கள் அளிக்கப்பட்டன. போட்டி இல்லாததால், கட்சியின் தலைவராக, அவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
'தலைவர் பதவிக்கான தேர்தல், மோசடி தேர்தல்' என, மஹாராஷ்டிர செயலர், ஷெஷாத் பூனாவாலா, ஏற்கனவே போர்க்கொடி துாக்கி உள்ளார்.
இந்நிலையில், உ.பி., யைச் சேர்ந்த, காங்., பிரமுகர், அயூப் அலி, தலைவர் பதவிக்கு போட்டியிட மனு கொடுத்ததாகவும்; ஆனால், அது எந்த காரணமும் கூறாமல் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement