Advertisement

நங்கநல்லூர் மாணவிக்கு 'சங்கீத் மணி' விருது

சென்னை, தேசிய அளவிலான கர்நாடக இசைப் போட்டியில், நங்கநல்லுார், 'மாடர்ன்' பள்ளி மாணவி, ஐஸ்வர்யா முதலிடம் பிடித்துள்ளார்.
டில்லியில், நவம்பர் மாதத்தில், 'பால்கலா உத்சவ்'வில், மத்திய அரசின் கலாசாரத் துறை சார்பில், தேசிய அளவிலான கர்நாடக இசைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 25 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர்
பங்கேற்றனர்.
சென்னை, நங்கநல்லுார், மாடர்ன் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி, ஐஸ்வர்யாவும் இப்போட்டியில்
பங்கேற்றார்.
அவர், பல்வேறு சுற்றுக்
களில் முன்னேறி, இறுதிப் போட்டியில்
முதலிடம் பிடித்து,
தமிழகத்திற்கு பெருமை
சேர்த்துள்ளார்.
அவரின் திறமையை பாராட்டும் வகையில், டில்லி தமிழ் சங்கத்தின் சார்பில், மாணவி, ஐஸ்வர்யாவுக்கு, 'சங்கீத் மணி' விருது வழங்கி கவுரவிக்கப்
பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய மாணவி, ஐஸ்வர்யாவுக்கு, மாடர்ன் பள்ளி சார்பில், உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
அப்பள்ளியின் முதல்வர்,
மோஹனா, இசை
ஆசிரியரான, நன்மங்கலம் உமாசங்கர் ஆகியோர், ஐஸ்வர்யாவை வாழ்த்தி கவுரவித்தனர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு, தமிழ் சங்கம் சார்பில்,
'சங்கீத் மணி' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement