Advertisement

தேசிய ஸ்னூக்கர் போட்டி 16ல் சென்னையில் துவக்கம்

சென்னை, மயிலாப்பூரில் நடக்க உள்ள், தேசிய அளவிலான ஆறு ரெட் ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டி, டிச., 16ம் தேதி துவங்க இருக்கிறது.
தமிழ்நாடு ஸ்னுாக்கர் அண்டு பில்லியர்ட்ஸ் சங்கம் சார்பில், தேசிய அளவிலான தமிழ்நாடு ஆறு ரெட் ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. அந்தப் போட்டி, 16ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை, மயிலாப்பூர் காமதேனு மஹாலில் நடக்க இருக்கிறது. இருபாலருக்குமான இறுதி போட்டிகள், 23ம் தேதி நடக்கிறது.
நடப்பு சாம்பியன் பங்கஜ் அத்வானி, உலக
தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கமல் சாவ்லா உள்ளிட்ட முன்னணி வீரர்,
வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.
சலீம், ஸ்ரீகிருஷ்ணா உட்பட, தமிழகத்தைச்
சேர்ந்த, 'டாப் - 16' வீரர்கள் பங்கேற்கின்றனர். பெண்களில், அனுபமா ராமச்சந்திரன், நீனா
பிரவீன் உட்பட, தமிழக வீராங்கனைகள்
பங்கேற்க உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement