Advertisement

திட்டமிட்ட கொள்ளை!

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஒரு திட்டமிட்ட கொள்ளை; மக்கள் மீது திணிக்கப்பட்ட பேரிடர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கி முன் வரிசையில் நின்று, ஏராளமானோர் உயிர் நீத்தனர்.மத்திய அரசு, இனியும் இது போன்ற தவறு செய்யக் கூடாது.

மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர், காங்.,

கோவில்கள் அழிக்கப்பட்டன!

மொகலாயர்கள் ஆட்சி காலத்தில், நாட்டின் பல பகுதிகள் அழிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. டில்லியில், ஒரு காலத்தில், ஜமுனா தேவி கோவில் இருந்த இடத்தில், தற்போது, ஜும்மா மசூதி உள்ளது. தேஜோ மஹாலயா என்ற கோவில் இருந்த இடத்தில், தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.

வினய் கடியார், ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

மீண்டும் எழுச்சி!

ராகுல் தலைமையில், காங்., முன் எப்போதும் இல்லாத வகையில் எழுச்சி பெறும். மதவாதத்திற்கு எதிரான பிற கட்சிகளும், ராகுல் தலைமையில், எங்களுடன் கூட்டு சேர்ந்து, பா.ஜ.,வை எதிர்க்க முன் வருவர் என்பதில் சந்தேகம் இல்லை. ராகுல் தலைமையில், நாட்டில் ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.

வீரப்ப மொய்லி, மூத்த தலைவர், காங்.,

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement