Advertisement

மகளிர் குத்துச்சண்டை: 120 பேர் பங்கேற்பு

பெரியமேடு, மாநில அளவிலான, சீனியர் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 120க்கும் மேற்பட்ட வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான, சீனியர் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற
உள்ளது. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் உள்ள, குத்துச்சண்டை அரங்கில், 13, 14 ஆகிய
தேதிகளில் போட்டி நடக்க உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் உட்பட,
மாநிலம் முழுவதும் இருந்து, 120க்கும் மேற்பட்ட வீராங்கனையர் பங்கேற்று, மோத உள்ளனர்.
அதில், லைட் பிளே முதல் சூப்பர் ஹெவி என, 10 வகையான எடை பிரிவுகளில், போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டியில் இருந்து,
ஓர் எடை பிரிவுக்கு ஒருவர் வீதம், 10 வீராங்கனையர், தேசிய அளவிலான சீனியர் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி
பெறுவர்.
தேசிய போட்டி, ஹரியானா மாநிலம்,
ரோதக்கில் நடக்க உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement