Advertisement

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி 16 வீரர், வீராங்கனையர் முதலிடம்

சென்னை, வேளச்சேரியில் நடந்த, சென்னை மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை நீச்சல் போட்டியில், 16 வீரர், வீராங்கனையர்
முதலிடம் பிடித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், சென்னை மாவட்ட முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி நடந்தது.
அந்த போட்டி, வேளச்சேரி உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்றது. அதில், சென்னை முழுவதும் இருந்து நீச்சல் வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவு இறுதி போட்டியில், 400 மீ., பிரிவில் வர்ஷா, 200 மீ., ஸ்ருதி மகாலிங்கம் ஆகியோர் முதலிடத்தை
பிடித்தனர். 100 மீ., பிரிவில், ரவி சிவதேஜா, 200 மீ., பிரிவில் பிரியங்கா புகழரசு, 50 மீ., பிரிவில் நவ்யா ராஜா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 50 மீ., பிரிவில் ஜெயா ஸ்ருதி, முக்தா முல்லர், ஜெயவீனா ஆகியோர் முதலிடத்தை தனதாக்கினர்.
ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், 400 மீ., பிரிவில் அகமது அஸ்ரக், 200 மீ., பிரிவில் ஆகாஷ் பாலாஜி ஆகியோர் முதலிடத்தை தனதாக்கினர்.
100 மீ., பிரிவில் ரூபன் குமார், 50 மீ., பிரிவில் டோஷித், அபாசுதீன், தனுஷ் ஆகியோர்
முதலிடத்தை பெற்றனர். 50 மீ., பரிவில் சிவசங்கர், ஆதர்ஷ் நாராயண்
ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.
இவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த வீரர், வீராங்கனையர், மாநில அளவிலான நீச்சல்
போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement