Advertisement

'மினி பஸ்' சேவை நிறுத்தம் நங்கநல்லூர் மக்கள் தவிப்பு

நங்கநல்லுார், மூன்று ஆண்டுகளாக இயக்கப்பட்ட, 'மினி பஸ்' சேவையை, திடீரென நிறுத்தியதால், நங்க நல்லுார் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
கடந்த, 2014ல், சென்னையில், 'மினி பஸ்' சேவை துவங்கியது. அப்போது, ஆலந்துாரில் இருந்து, வேளச்சேரி வரை, தடம் 85 எண் கொண்ட, 'மினி பஸ்கள்' விடப்பட்டன. இவை, தில்லைகங்கா நகர், நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில், ராம் நகர், வாணுவம்பேட்டை மற்றும் உள்வட்ட சாலை வழியாக, வேளச்சேரி சென்றன.
ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம், ஆசர்கானா பேருந்து நிறுத்தம், வேளச்சேரி ரயில் நிலையம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகிய முக்கிய இடங்களை மையப்படுத்தி சென்றதால், நங்கநல்லுார், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிவாசிகள் மிகவும் பயன் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 'மினி பஸ்' சேவையை, அதே வழித்தடத்தில் மீண்டும் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தில்லைகங்கா நகர் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஆலந்துார் பணிமனை அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுனர், நடத்துனர் பற்றாக்குறை இருப்பதால், 'மினி பஸ்' சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இருக்கும் ஊழியர்களும், பெரிய பேருந்துகளை இயக்கத்தான் விரும்புகின்றனர். கூடிய விரைவில் நிலைமை சீராகி, மீண்டும் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement