Advertisement

பேருந்து நிலைய பள்ளத்தில் சிக்கி சீரழியும் வாகனங்கள்

பெருங்களத்துார், பெருங்களத்துார் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், பயணியர் விழுந்து அடிபடுவதால், உடனடியாக சீரமைக்க கோரிக்கை எழுந்து உள்ளது.
சென்னை, பெருங்களத்துார் பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் உட்பட பல்வேறு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் நின்று, பயணியரை ஏற்றிச்
செல்கின்றன.
இங்கு, பேருந்துகள் வந்து நின்று பயணியரை ஏற்றுவதற்கும், வெளியே செல்வதற்கும் தனிப்
பாதைகளை, போக்குவரத்து போலீசார் அமைத்து
உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், அந்த சாலை நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும், அந்த பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால், பேருந்துகள் அந்தப்
பகுதியை கடந்து செல்வதில் இடையூறு
ஏற்படுகிறது.
சமீபத்தில், முதியவர் ஒருவர், அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.
இந்த சாலை பள்ளத்தால், உயிர் பலி ஏற்படும் முன், பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement