Advertisement

முடிச்சூர் பெரிய ஏரிக்கு மதகு அமைக்க கோரிக்கை

முடிச்சூர், வேகமாக நிரம்பி வரும், முடிச்சூர் பெரிய ஏரிக்கு, மதகுகள் அமைத்து தங்களை காக்க வேண்டும் என, முடிச்சூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, முடிச்சூர் பெரிய ஏரி, 112 ஏக்கர் பரப்பளவும், 17 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.
ஏரியின் மேற்கு பகுதியில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டதால், 20 சதவீத நீர்பிடிப்பு பகுதி காலியானது.
இந்த பெரிய ஏரியில், தற்போது நீர் நிரம்பி, பறவைகள் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் உலாவும் பகுதியாக ரம்மியமாக காணப்படுகிறது.
ஏரியின் கிழக்கு பகுதி கரைகளில், பெருங்களத்துார் பேரூராட்சி, குப்பை கொட்டப்பட்டு தொடர்ந்து நாசமாகிறது.
கடந்த, 2015ல் பெய்த கன மழையை அடுத்து, ஏரியின் உபரிநீர் வழியும் கால்வாய்களில், 4,000 மணல் மூட்டைகள் கொண்டு பொதுமக்களால்
அடைக்கப்பட்டது.
அதன் பின், ஏரி நீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு மதகுகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் எழுப்பப்பட்டது.
வடக்கு பகுதி கரையில் உள்ள மதகு, பழுதடைந்த நிலையில் இருப்பதாக முடிச்சூர்
வாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, அந்த கலங்கல் அமைந்துள்ள பகுதியில், மணல் மூட்டைகள் கொண்டு பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
கலங்கல் அமைந்துள்ள பகுதியில் உள்ள உடைப்பில், 170 மணல் மூட்டைகள் போடப்பட்டு, பொதுப்பணித்துறை சார்பில் வேலை நடைபெற்றது.
இந்த பருவமழையின் போது மழை அதிகரித்தால், ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, மேற்கு பகுதியில் உள்ள முடிச்சூர் ஊராட்சியின் முதல் நான்கு வார்டுகள் மூழ்கும் அபாயம் உள்ளது.
விரைவில், உபரிநீர் கால்வாய் பகுதிகளில் மதகுகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள்
மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement