Advertisement

'தினமலர்' செய்தி எதிரொலி கேபிள்கள் அதிரடியாக அகற்றம்

குரோம்பேட்டை, நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, எம்.ஐ.டி., மேம்பால மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தனியார் கேபிள்களை, நகராட்சியினர் அதிரடியாக அகற்றினர்.
சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி.,
மேம்பாலத்தில் உள்ள கம்பங்களில் முறையான அனுமதி பெறாமல், 10க்கும் மேற்பட்ட தனியார் தொலைத்தொடர்பு, தனியார், 'டிவி' கேபிள்கள் கட்டப்பட்டிருந்தன.
இது குறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, நகராட்சி பொறியியல் பிரிவினர், மேம்பால கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தனியார் கேபிள்களை, நேற்று அதிரடியாக அகற்றினர்.
இதை பார்த்து, தனியார் நிறுவனங்கள் அங்கு சென்று, தங்களின் கேபிள்களை அவசர அவசரமாக அவிழ்த்து சென்றனர். பல்லாவரம் -- துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலத்தில் உள்ள கேபிள்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இனி, கேபிள்களை அனுமதி இல்லாமல் கட்டக் கூடாது என்று, தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement