Advertisement

நடைபாதை மரக்கன்றுகள்: அகற்ற கோரிக்கை

கோடம்பாக்கம், நடைபாதையில் உள்ள மரக்கன்றுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலத்தில், தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம், நடைபாதைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
சில தெருக்களில், மழைநீர் வடிகாலை உடைத்தும் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
இதனால், மரம் வளரும் போது, மழைநீர் வடிகால் சேதமடையவும், மரங்கள் சாய்ந்து விழவும் வாய்ப்பு உள்ளது.
நடைபாதை மற்றும் மழைநீர் வடிகால் மீது நடப்பட்டுள்ள மரக்
கன்றுகளை, இடம் மாற்றி நட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து
உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'மழைநீர் வடிகால் மீது மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள தெருக்களை ஆய்வு செய்ய உள்ளோம். அந்த மரக்கன்றுகளை
அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் நடப்படும்'
என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • venkat - chennai,இந்தியா

    அந்த இடங்களில் கடைகள் போஸ்ட் நட்டு சீட் போட்டு ஆக்கிரமிப்பு செய்ய அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் என்பதே சென்னையில் பல நடைபாதைகளில் காணும் காட்சி. முதலில் நடை பாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி அகற்றட்டும். மரங்களை அகற்ற தேவை இல்லை. இன்று வெளி நாடுகள் எல்லா நடை பாதைகளிலும் அழகாக மரங்கள் நட்டு பராமரிக்கிறார்கள். இங்கு கொஞ்சம் கடைகள் வந்து விட்டால் எல்லா மரங்களும் காணாமல் போய் தெரு பாலைவனம் போல் ஆகிவிடும். கடை ஆக்கிரமிப்பால் மக்கள் தெருவில் நடக்கும் சூழ்நிலை. ஆக்கிரமிப்பு கடைகளுக்கு லைசென்ஸ் புதிப்பிக்கக்கூடாது என்று வேறு சட்டம் வைத்துள்ளார்கள். எத்தனை கடை லைசென்ஸ் கான்செல் செய்துள்ளார்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement