Advertisement

தானியங்கி கதவை எடுத்து சென்ற நிறுவனம் நெடுஞ்சாலை ஆணையம் விசாரணை

சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கதவை, தனியார் நிறுவனம் எடுத்து சென்றது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விசாரணையை
துவக்கியுள்ளனர்.
பெருங்களத்துார் - புழல் இடையில், 34 கி.மீ.,க்கு, சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம், வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்காக, இரண்டு தனியார் நிறுவனங்களை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்து
உள்ளது.
இதில், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்து வந்த நிறுவனம், சமீபத்தில் மாற்றப்பட்டது.
இதற்கு பதிலாக,
ஏற்கனவே, அங்கு கட்டண வசூலிப்பில் அனுபவம் பெற்ற நிறுவனம், மீண்டும் நியமனம்
செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் மூலம், தற்போது, சுங்க கட்டணம் வசூலிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சுங்கச்சாவடியில், வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இதை சுங்க கட்டணம் வசூலிக்க வரும் நிறுவனங்கள், கண்டுக்கொள்வது இல்லை.
இச்சாலை வழியாக செம்மரம், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை, அதிகளவில் கடத்தப்
படுகின்றன.
எனவே, சந்தேகப்படும் வாகனங்கள், சுங்கச்
சாவடியை கடந்து செல்வதை தடுப்பதற்காக, தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என, போலீஸ் தரப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம்
வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன், சுங்கச்
சாவடியில், எட்டு கட்டணம் வசூலிப்பு மையங்களில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டன.
தற்போது, சுங்க கட்டணம் வசூலித்து வந்த நிறுவனம், தானியங்கி கதவுகளை கழற்றி எடுத்து சென்று உள்ளதாக
கூறப்படுகிறது.
இதனால், சந்தேகப்படும் வாகனங்களை, சோதனை செய்வதில்
சிக்கல் நீடிக்கிறது.
சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், கட்டணம் செலுத்தாமல், சுங்கச்சாவடியை வேகமாக கடந்து செல்கின்றன.
போலீசார் முறையிட்டதை தொடர்ந்து தானியங்கி கதவை கழற்றி எடுத்து சென்ற நிறுவனத்திடம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் விசாரணையை துவங்கிஉள்ளனர். - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement