Advertisement

கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

திருவேற்காடு, அண்ணியை அடித்து கொன்றவனை பிடிக்க
முடியாமல், தனிப்படை போலீசார் திணறுகின்றனர்.சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள், 40. கணவரை இழந்து, அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். அவருடன், தாய் பாக்கியம் அம்மாள், 75, மகள் தீபா, 20, ஆகியோர் இருந்தனர்.
கடந்த, 2ம் தேதி மாலை, தனியார் மருத்துவமனையில் இரவு பணிக்கு சென்ற தீபா, மறுநாள் காலை வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அவரது தாய் முனியம்மாள், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பாட்டி பாக்கியம் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
இது குறித்து, திருவேற்காடு போலீசார் விசாரித்தனர். அதில், செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தால், முனியம்மாளை, அவரது மைத்துனர் பூபாலன், அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
அதைக்கண்ட முனியம்மாளின் தாயையும், பூபாலன் அடித்திருக்கிறான். ஆனால், காயத்துடன் உயிர் தப்பிய பாக்கியம், சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூபாலனை, பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மதுரை, திண்டிவனத்திற்கு சென்றன. ஆனால், பூபாலன் பற்றிய தகவல் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement