Advertisement

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் மாநகராட்சியினர் அதிரடி

சேத்துப்பட்டு, சென்னையில், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து வசித்து வருவோரை, அரசு உத்தரவுப்படி, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அதன்படி நேற்று, சேத்துப்பட்டு கூவம் ஆற்றை ஆக்கிரமித்து வசித்து வந்த, 387 குடும்பங்களை மாற்று இடத்தில் குடியமர்த்தும் பணியில், மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து வசித்து வருவோரை அகற்றும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று, சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டன் மற்றும் ஜோதிம்மாள் தோட்டம் கூவம் ஆற்று பகுதிகளை ஆக்கிரமித்து வசித்து வந்த, 387 குடும்பங்களை அகற்றும் பணியை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று
துவங்கினர்.
அவர்களுக்கு, பெரும்பாக்கத்தில், குடிசை மாற்று வாரியத்தில் மாற்று வீடுகளை வழங்கியது. அவர்கள், தங்களது உடைமைகளை எடுத்துச் செல்ல, மாநகராட்சியே வாகன ஏற்பாடுகளை செய்தது.
ஆக்கிரமிப்பு வீடுகள், ஓரிரு நாட்களில் முழுமையாக அகற்றப்படும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement