Advertisement

மருத்துவமனையில் ஜெ.,வை ஒரு முறை கூட... 'சந்திக்கவில்லை'; அரசு டாக்டர்கள் குழுவினர் வாக்குமூலம்

ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது.

கைரேகை:



ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன்... பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.

குழு ஒருங்கிணைப்பாளராக, பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் அங்கீகார படிவத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழுவில் இடம்பெற்று இருந்த மருத்துவர்களிடம், இந்த வாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முதல் நாள் விசாரணையில், கலா, முத்துசெல்வன் ஆகியோர் ஆஜராகினர். மறுநாள் விசாரணையில், மருத்துவர் டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராகினர். நேற்று, மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை தர்மராஜனிடமும், பகல், 12:00 மணி முதல், 1:50 மணி வரை பாலாஜியிடமும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெ.,க்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை கண்காணிக்கும் குழுவில் இருந்த, ஐந்து மருத்துவர்களில், பாலாஜி தவிர, மற்ற நான்கு பேரும், 'சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, தெரிவித்து உள்ளனர்.

மேலும், அவர்கள் கூறியுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவ மனையில், எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது; தினமும், அங்கு வந்து அமர்ந்துஇருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும், மருத்துவ செய்திக் குறிப்பை, ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். ஒரு நாள் கூட, ஜெ.,வை சந்தித்தது இல்லை. இவ்வாறு, அந்த நான்கு மருத்துவர்களும், விசாரணையில் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள்:



அதேநேரத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றபோது, தானும், சசிகலாவும் மட்டுமே, அந்த அறையில் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமின்றி, வேலுார், ஐதராபாத், பெங்களூரு பகுதியிலிருந்தும், சிறப்பு மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க வந்ததாக, இவர்கள் கூறிஉள்ளனர்.

வெளியூர் மருத்துவர்களை அழைத்து வரும் பணியை, பாலாஜி மேற்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர், கிலானியை, ஜெ.,விடம் அறிமுகப்படுத்தியதாக, பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெ.,விடம், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியபோது, அவர் வர மறுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியை மட்டும், மீண்டும், 27ம் தேதி, விசாரணைக்கு வரும்படி, ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.,வை பார்க்க, அரசு நியமித்த மருத்துவர் குழுவினரை கூட அனுமதிக்காதது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அரசு தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்து உள்ளது.


தீபக்கிற்கு, 'சம்மன்': நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முக்கிய நபர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி வருகிறது. 'அக்குபஞ்சர்' மருத்துவர் சங்கர், 12ம் தேதி; ஜெ., அண்ணன் மகள், தீபா, 13; அவரது தம்பி தீபக், 14; தீபாவின் கணவர் மாதவன், 15; மருத்துவர் மகேந்திரன், 19; முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், 20; முன்னாள் அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ், 21ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொன்னது என்ன? ''நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்தேன்,'' என, மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''விசாரணை கமிஷனில், நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், பதில் கூறினேன். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், பீலே வருகை குறித்து கேட்டார். அதற்கு, பதில் அளித்தேன். ஜெ.,க்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து கேட்டதற்கும், பதில் கூறினேன்,'' என்றார்.ஆனால், ஜெ., கைரேகை குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, பாலாஜி மறுத்து விட்டார். பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு? ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், கமிஷனின் பதவிக் காலம், இம்மாதம் நிறைவு பெற உள்ளதால், ஆறு மாதங்கள் நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, செப்., 25ல், தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷன், மூன்று மாதங்களுக்குள், அறிக்கை அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணை கமிஷன், தற்போது தான் விசாரணையை துவக்கி உள்ளது; இன்னும் ஏராளமானோரிடம் விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷனின் பதவிக்காலம், டிச., 24ல் நிறைவு பெறுகிறது. எனவே, விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அதை ஏற்று, கமிஷனின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (94)

  • Ray - Chennai,இந்தியா

    ஒருங்கிணைந்த ஸ்க்ரிப்ட் ஒற்றுமையா வசனத்தை ஒப்பிக்கிறாங்க அத்தனை ரிகர்சலாச்சே

  • Natarajan Ramamoorthy - Chennai,இந்தியா

    அப்பொல்லோவின் அறிக்கையும், மத்திய மருத்துவ குழுவின் அறிக்கையும் ஒரு முக்கிய விவரத்தை முன் வைத்திருக்கிறார்கள். அதவது, ஜயலலிதா அம்மையார், அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய இரத்ததில் பிராணவாயுவின் பங்கு 49 சத விகிதமாக இருந்தது என்று. 88 சத விகிதத்தின் கீழே குறைந்தால் நினைவு தவறி, மூளையின் ஆற்றல் குறைந்து, ஆழ் நிலை மயக்கத்திற்கு உட்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இருக்க மூன்று மாத காலமாக விழிப்புணர்வுடன் இருக்க வாய்ப்பில்லை. மூன்று மாத காலம் நினைவு திரும்பாமலேயே அவர் படிப்படியாக உருப்புக்களின் செயல் திறனை இழந்து, பின்பு மாரடைப்பால், அறிக்கையில் கூறப்பட்டது போல், இறந்திருக்க வேண்டும். இந்த கருத்து அறிக்கையின் அடிப்படையில் தான் தெளிவாகிறது. அவ்வாறு இருக்க, எவரையும் அனுமதித்து இருக்க வாய்ப்பில்லை. எழும் கேள்வி ஒன்று தான். 49 சதவிகிதம் வரை குறைந்து உணர்வின்றி இருக்கும் ஒருவர் முதல் அமைச்சர் ஆக இருக்க தகுதி அற்று இருக்கும் நிலையில், அவருடைய உடல் நிலை ஏன் அரசு மருத்துவர்களால் கண்காணிக்கப் படவில்லை? அவர் யார் கண்காணிப்பில் இருந்தார்? அப்பொழுது யார் ஆட்சி புரிந்தார்கள்? எவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன? இக்கேள்விகள் ஒருவரால் தான் விடை கூற இயலும். அவர் இப்போது சிறையில் உள்ளார். ஆளுனர் கூட மருத்துவமனையில் காணச்சென்று கொடுக்கபட்ட அறிக்கையில், மருத்துவர்கள் முடிந்தவரை சிறப்பாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூறினாரே தவிர, அவர் அந்த அம்மையாரினை பார்த்ததாகவோ, சுயநினைவுடன் இருப்பதாகவோ நேர்காணலிலோ, அறிக்கையிலோ கூறவில்லை என்பது உண்மை. இந்த நீதிபதி, அப்போது இருந்த ஆளுனரையும் அல்லவா விசாரனை செய்ய வேண்டும்? இவ்வலை இன்னும் பெரியதாக விரிய வாய்ப்பு இருக்கிறது. மூடி மறைக்கப்படாமல் இருந்தால். ஆனால், இது ஒரு கண் துடைப்பு விசார்னை என்று அனைவருக்கும் தெரிந்ததே காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் அந்த அம்மையாரிடம் வைத்திருந்த மரியாதை மற்றும் நம்பிக்கை, குற்றவாளி என்ற தீர்ப்பில், தவிடு பொடியானது என்பதில் எந்த மற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.

  • V Nath - PCMC,இந்தியா

    இந்த டாக்டர் பாலாஜி சொல்வது கூட உண்மையில்லை என்றே தோன்றுகிறது. இடைத்தேர்தல் நாமினேஷன் படிவங்களில் ஜெயலலிதாவின் வலது கை ரேகைக்கு (இடது கைவிரல் ரேகை அல்ல) அட்டெஸ்டேஷன் செய்தது இந்த பாலாஜிதான். அவரது முன்னிலையில் கைரேகை எடுக்கப்படவில்லையென்றும் ஏற்கனவே சசிகலா எடுத்து வைத்திருந்த படிவங்களை மட்டும் தன்னிடம் கொடுத்ததாகவும் அதில்தான் அட்டெஸ்ட் செய்து கையெழுத்திட்டதாக சொல்லியிருந்தார். அட்டெஸ்டேஷன் என்பது signed before me என்றுதான் செய்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அப்படியில்லை. பாலாஜி முன்னிலையில் கைரேகை பெறவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறெனில் அந்த நாமினேஷன் மொத்தமும் செல்லாதது அல்லவா? தேர்தல் கமிஷனையும் விசாரிக்கவேண்டும்

  • Nagendran Masanam - THIRUPPUVANAM,இந்தியா

    சசிகலா கணவர் நடராஜின் திமுகவில் இருந்து வந்தவர் அடுத்வங்கள எப்படி கவுக்கலாம் மனைவிக்கு சொல்லிக் கொடுத்த, செயல்பாடு விபரிதமா நடந்து விட்டது ஜே கொலை, - நம்ம நம்பி ஓட்டு போட்டது திமுக- அதிமுக- மட்டும்தான் இந்த இரண்டுபேரும் பிராந்தி கடைக்கு கூட்டணி / மக்கள் மத்தியிலே எதிரி கட்சிகள் - பிராந்திகடையை எடுங்க காந்தி மாதிரி ஒருவர் போரட்ட நடத்தி மக்களுக்காக இறந்தார் அத மக்கள் வேடிக்கை பார்த்தாங்கா, எவனையும் மற்றும் மக்களைம் இந்த இரண்டு கலவாணி மதிக்கிறதே இல்லை ஓட்டு கேட்கும்போது நான் உங்கள் தாய்- இல்லை நான் உங்களின் கட்டுமரம் என கூவி அனைத்து மக்களும் குடி போதையுடன் வாழுங்கள் உங்கள் இரத்த த்தை பணமாக உறிஞ்சிக் குடிக்கின்றோம் என்று இரண்டு கலவாணி குடிச்சுச்சு..-கடவுள் கூடவே ஆளவச்சு 6 அடி பள்ளத்தை தோண்டிட்டாறு / இன்நொருத்தருக்கு தான் பிள்ளைகள் மூலமாக கட்டு மரத்த கொள்ளி வைக்க நாள் குறிச்சிருக்காரு அதனால சசிகலா கடவுளாள அனுப்பப்பட்ட நல்ல அரக்கி

  • a.s.jayachandran - chidambaram,இந்தியா

    யாரையும் விசாரணை செய்யவேண்டாம் டாக்டர் .பாலாஜி அவர்களை மட்டும் விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் அல்லது தீபக்கை விசாரிக்க வேண்டும் கண்டிப்பாக உண்மை வெளிவரும்.விசாரணை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் .

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    சமாதியை உடைத்து கால் இருக்கிறதா இல்லையா என்று சோதித்தால் சந்தேகம் உறுதியாகிவிடும்.

  • murugan - chennai,இந்தியா

    ஒரு முதல்வர் மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அவர் உடனே இறக்கவில்லை. நீண்டகாலம் மருத்துவமனையில் இருந்தபோது இடைக்கால முதல்வர், தமிழக கவர்னர், இந்திய உள்துறை, இந்திய உளவுத்துறை, இந்திய பிரதமர் என்ன செய்தார்கள்? அனைவரும் சேர்த்து ஒரு முதல்வரை கொன்றார்களா?

    • rcsn - Chennai,இந்தியா

      முதல்ல செப்டம்பர் 22 தேதியே வந்த அந்த ஐயரை விசாரிக்கணும். அங்கே என்ன வேலை அவருக்கு? எதற்கு வந்தார் என்று விசாரிக்கணும். எப்படி அவரை மட்டும் போலீஸ் கார் சைடு வழிய போங்க அப்டின்னு சொன்னாரு? ஒழுங்கா விசாரிச்சு உண்மையை கொண்டாங்கப்பா

  • elangovan - TN,இந்தியா

    Ammas death was very clear it was preplanned murder by Prime suspect Sasi and family. State and central government not taken care this because it is political murder . Every one was acting and given key by Sasi including EPS and OPS and those who all are given press meeting outside the hospital to be enquired first how they can give wrong information to the public. There is no doubt it is murder. Sasi and family criminals all are to be punished . God arumugadamy will enquir in good manner to punish all these criminals

  • karthi - chennai,இந்தியா

    It is very clearly appears that Sasikala didn't allowed any body including OPS, Governer etc., to see Jayalalita. It is very frightening to note that a Chief Minister for 8 Crore people was under the control of a servant maid. Very sad.

  • Malaichaaral - Ooty,இந்தியா

    ஜெயலலிதாவை சித்ரவதை செய்து கொன்றுவிட்டார்கள்.. மத்திய அரசும், அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை..

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    ஐயா இந்த ஆறுமுகசாமி ரொம்ப வெவரமானவரு ஆறு மாசமல்ல ஆறு வருஷமானாலும் இந்த கமிஷனால் வொன்னும் கண்டுபுடிக்க முடியாது . இந்த கமிஷனுக்கு செய்ற செலவை கட்சில இருந்து கொடுங்க

  • kuruvi - chennai,இந்தியா

    பிறகு எதற்கு நேர்காணலில் பீலேயுடன் அமர்ந்திருந்தீர்கள்?

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    ஐயா அம்மா எல்லோரும் என்ன மன்னிச்சிருங்க நான் சொன்னதெல்லாம் பொய் , நான் ஜெயலலிதாவை சினிமாவுலதாம் பாத்துருக்கேன்

    • dandy - vienna,ஆஸ்திரியா

      உலகிலேயே பொய் நீதிமன்றத்தில் சொல்லி தப்பிக்க கூடிய ஒரே நாடு இந்தியா மட்டும் தான்

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    ஒரு வேலைக்காரி அச்சு அசலாக ஒரு டான்/கள்ளக்கடத்தல் தலைவன் போல நடந்து கொண்டுள்ளாள் என்று தெளிவாகத்தெரிகின்றது.

    • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

      உலகில், சசியை விட மோசமான ஒரு பிறவியை பார்க்க முடியாது. அவர் செய்யாத அக்கிரமங்கள், கொள்ளைகள், ப்ளாக்மைல்கள், கிடையாது. இந்த மன்னார்குடி மாபியாக்கள், ஒசாமா, தாவூத் போன்றவர்களை விட, ஆபத்தானவர்கள்.

    • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

      அறிவுடன் தான் பேசுகிறாயா , ஒரு அரசு பொறுப்பில் கூட இல்லாத சசிகலா சொல்லுவதைத் தான் கவர்னர், பிரதமர், பல தலைவர்கள் எல்லாரும் கேட்டார்களா. காதில் பூ சுத்துவதற்கு அளவு இல்லையா. ஜெயலலிதா மரணத்திற்கு மத்திய அரசே முழு பொறுப்பு.. அதனை மறைப்பதற்குத்தான் சசிகலா குடும்பத்தினரை பழி வாங்குகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை

    • chandkec - singapore,சிங்கப்பூர்

      Yarai சொல்கிறீர்?

    • Indhiyan - Chennai,இந்தியா

      ராஜகுமார், கூடவே இருந்த சசி எல்லாத்தையும் போட்டு உடைக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? எனறால் சசியும் உடைந்தை

  • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

    ராஜ்யத்தில் ..யார் முட்டாள்கள் அனைவருமே .. இவைகளை/ இவர்களை திருத்தும் பணி யாரிடம் உள்ளதோ அதை சொன்னால் கருத்து இங்கு பிரசுரம் ஆகாது .

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    ஜெயா ஆவி வந்து பேசினால் மட்டுமே உண்மை வெளி வரும்... மத்தபடி இந்த கமிஷன் எல்லாம் வெறும் ஐ-வாஷ்.... இதை வெச்சு எல்லாரும் காசு பண்ணுவாங்க... வேற ஒண்ணும் நடக்காது...

    • INDIAN - Riyadh,சவுதி அரேபியா

      ஆவி வந்தால் கூட அதில் இட்லி வேகவைத்து தின்று விடுவார்கள் இந்த கொள்ளைக்கார படுபாவிகள்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    அப்போ முதல்வராக இருந்தவர் OPS தான் . மொத்தமாக சசி மேல் பழிபோடுவது தவறு . ஒரு வேலைக்காரிக்கு OPS ஏன் அடிபணிந்தார் ?

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    கடந்த ஜூலை மாதம் அப்பல்லோ மருத்துவ மனையில் என்னுடைய வயிற்றில் இருந்த கட்டியை அகற்ற அனுமதிக்கப் பட்டிருந்தேன். அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் இதய நோய் நிபுணர் டாக்டர்.செங்குட்டுவேல் அவர்களிடம் கிளியரன்ஸ் கிடைத்தால் ஒழிய எனக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை. நான் ஓர் இதய நோயாளியும் கூட. டாக்டர்.செங்கோட்டுவேல் அவர்களை நடக்கக்க கூட முடியாத சூழ் நிலையில் சந்தித்து ,ராமச்சந்திராவில் தாங்கள் தான் எனக்கு ஆஞ்சியோ செய்து அடைப்பின் தன்மையைச் சொல்லி தைரியம் சொன்னீர்கள் என அறிமுக படுத்திக் கொண்டேன். சற்று தயக்கத்துக்குப்பின் எனக்கு கிளியரன்ஸ் கொடுத்தார். அவருக்கு நன்றி தெரிவித்து ,டாக்டர் சார் எனக்கு அறுவை செய்யும்போது தங்கள் கூட இருப்பீர்களா என்றேன். அவரும் என்னைக் கூப்பிட்டால் நிச்சயம் வருவேன் என்றார். பின் என்னுடைய டாக்டரான ரோபோ அறுவை நிபுணர் வெங்கடேஷ் முனி கிருஷ்ணா வெற்றிகரமாக அறுவையை செய்து முடித்தார்.அவர் ரவுண்ட்ஸ்க்கு வந்தபோது நான் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?டாக்டர் சார் ,டாக்டர்.செங்கோட்டுவேல் அறுவை சிகிச்சையின் போது கூட இருந்தாரா என்றேன்? என்னுடைய டாக்டர் சிரித்துக் கொண்டே அறுவையின்போது உங்களுக்கு இதய பிரச்சினை வராததால் டாக்டர் .செங்கோட்டுவேலை அழைக்கவில்லை என்றார். வாசக நண்பர்களே ஜெ-வின் மருத்துவ குழுவில் இடம் பெற்றிருந்த மயக்கநிலை மருத்துவர்,சர்க்கரை நோய் நிபுணர் போன்றோர் அந்த நேரத்தில் தேவைப் படாமல் இருந்திருக்கலாம்.இது ஒரு பெரிய விஷயமில்லை.வேறு விஷயங்கள் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

    • kanchi siva - chennai,இந்தியா

      சார் , உங்கள் விஷயம் வேறு ..... ஜேஜே நம் முதல்வர் .....தமிழ் நாட்டு முதல்வர் அவருக்கு ஒரு பாதுகாப்பு, மருத்துவம் கிடைக்க வில்லை என்பது தான் நம் கேள்வி ........

    • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

      நீங்கள் சொன்னதற்கும், உங்கள் கருத்திற்கும் சம்பந்தமே இல்லை. அப்போல்லோவில் நடந்த மெடிக்கல் தவறுகளை பட்டியலிட்டால், கணக்கில் அடங்காது. நீர் மருத்துவ துறைக்கு ஒரு புதுமுகம்.

  • wellington - thoothukudi,இந்தியா

    மத்திய அரசின் துணை இல்லாமல் இதில் எதையுமே மறைக்க இயலாது ,ஒரு மாநில முதல்வரை தனியொருவராக சசிகலாவால் இவ்வளவு காலம் மறைத்து வைக்க இயலாது ,கடைசிவரை ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே இருக்கத்தான் போகிறது ,

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இவ்வளவையும் மூடி மறைச்சிட்டு, பெரிய தலைங்க ரெண்டும் எப்புடி RK நகரில் மக்கள் முன்னால முழிக்க முடியுது ?

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    இந்த விசாரணை எல்லாம் சரிபட்டுவராது, சசிகலா கும்பலை கஸ்டடிக்குள் எடுத்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும், அடியைப்போல அண்ணன் தம்பி உதவ மாட்டானுகள்.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    ஒருவர் எங்களுடைய அறையில் வந்து மருத்துவ அறிக்கையை படித்து காண்ப்பிப்பார் ..அதை கேட்டுவிட்டு மாலையில் சென்று விடுவோம் . நாள் முழுக்க அந்த அறையில் தான் இருந்தோம் ..ஜே அறைக்கு செல்வதில்லை ...//////// ...வெக்கமா இல்லை ...மருத்துவ அறிக்கையை கேட்க அப்போலோ மருத்துவ மனைக்கு செல்ல வேண்டுமா?...மருத்துவ அறிக்கையை fax மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ பெறலாமே .....முன்னாள் நடிகை ,அழகானவர் முக்கியமானவர் என்பதற்காக கூட ஒரு தடவை கூட பார்க்க எண்ணம் வரவில்லையா? ..நம்ப முடியவில்லை .

  • narayanan iyer - chennai,இந்தியா

    சசிகலா எப்படிப்பட்டவர் என்பது இந்த நிகழ்ச்சிகளில் இருந்து தெரிகிறது ? அசாத்திய துணிச்சல் . செயல்படுத்திய விதம் . எப்படி எல்லாரும் அவர் சொன்னபடியே செய்தனர்? மோடியின் மேல் நான் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தகர்ந்தது இதனால் தான் . ஒரு ஆத்மார்த்த நண்பர் இப்படி எதனால் அமைதி காத்தார்? அவர் நினைத்திருந்தால் எம் ஜி ஆருக்கு இந்திரா காந்தி செய்தது போல் செய்து இருக்கலாம் ஏன் செய்யவில்லை ?சசியின் நீண்டகால திட்டமாகத்தான் நடந்திருக்கு எல்லார் ஒத்துழைப்புடன் . நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் .இந்த லக்ஷ்ணத்தில் சசி ஒரு தியாக தலைவியாம் .

  • Nesan - JB,மலேஷியா

    ஜெ மரணத்தில் மத்திய அரசு, மற்றும் சசி மாபியாவுக்கும் தொடர்பு உண்டு. எல்லா உள்குத்து வேலையும் மோடிக்கு தெரியும். இந்த டாக்டரை விசாரிக்க வேண்டிய வழியில் விசாரித்தால் எல்லா உண்மையும் வெளியே வரும். சும்மா, சும்மா அப்பாவிகளை மிரட்டும் இந்த கையாலாகாத மந்திரிகள். ஏன் ஜெ மரணத்தில் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டி உண்மையா உலகுக்கு தெரிவிக்க முடியவில்லை. எல்லாம் நாடகம், கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.

  • Shanu - Mumbai,இந்தியா

    அப்பல்லோ ரெட்டியை போலீஸ் பிடியில் கொடுத்து ரொட்டி ஆக்க வேண்டும்.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ஐயா, அந்த மூன்று இடைத்தேர்தலுக்காக, அந்த அம்மாவிடம் பெறப்பட்ட (எடுக்கப்பட்ட?) கை விரல் ரேகைகளில் உள்ள, உயிர்ப்பு தன்மையை குறித்து, தடய அறிவியலின் பல வல்லுனர்களிடம் (உள்நாடு மற்றும் வெளிநாடு) அறிக்கை கேளுங்கையா?, நீதியரசர் ஐயா. இந்த முதல் முடிச்சை, முதலில் அவிழ செய்யுங்கையா?. அந்த ரேகைகளில் தோஷ்சம் உள்ளது என நிரூபணம் ஆன பிறகு, அதில் இருந்து, ஜெம்ஸ்பாண்ட்-007 போல, விசாரணையின் பாதையை திசையை அறிந்து கொள்ளுங்கையா?, நீதியரசர் ஐயா. பிறகு பாருங்கையா, அந்த அம்மாவின் மரண விசயத்தில், எத்தனை பேர்கள் வரிசையாக மாட்டுகிறார்கள் என்று?. அரசல் புரசலாக செய்திகளில் கசிந்த, பணம் நகை வைரம் நிலம் கம்பெனிகள் என்பது கொஞ்சமா குறைவா என்ன?. பொதுவாக, சில நேரங்களில், ஆயிரம் தான், உயிர் நண்பர்களாக, சிலர் வாழ்ந்தாலும், அவர்களின் நட்பை முடிவுக்கு கொண்டு வருவது, செல்வங்களை தக்க வைத்து கொள்ளும் விசயத்தாலும், முதுமையின் இயலாமையின் விசயத்தாலும் தானே?, நீதியரசர் ஐயா அவர்களே?.

  • Shanu - Mumbai,இந்தியா

    மருத்துவர் பாலாஜியை போலீஸ் பிடியில் கொடுத்து அவர்கள் பாணியில் விசாரிக்க வேண்டும். இவர் சசிகலாவின் கை-ஆள் .

    • dandy - vienna,ஆஸ்திரியா

      இந்த பாலாஜி மருத்துவ துறைக்கே ஒரு கரும்புள்ளி ..மற்ற நாடுகளில் இவனுக்கு நடப்பது வேறு

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    வழக்கை முடிக்க 2 full டாஸ்மாக் பாட்டிலே போதும்.... சசி ஆத்தாவுக்கும் குக்கர் மைனருக்கும் ஊத்திக்குடுத்தா எல்லா உண்மையும் வெளியில் வரும்

  • sachin - madurai,இந்தியா

    குமரி மாவட்ட மீனவர்கள் போராட்டம் பற்றி உங்கள் தலையங்கத்தில் போட்டு இருக்கலாம் தினமலரே ஏன் அரசுக்கு இப்படி துணை போகிறீர்கள் ......கேரளாவுடன் குமரியை இணைக்க போராட போகிறோம் என்பது ஒரு மோசமான நிகழ்வு தமிழ்நாட்டில் மிக பெரிய ஒரு எச்சரிக்கை கலந்த வார்த்தை என்பதை ஏன் ஒரு ஊடகமும் மக்களிடம் சொல்வதில்லை இந்த கையாலாகாத தமிழக அரசின் தோல்வியை ஏன் சொல்ல பயப்படுகிறீர்கள் நீங்கள் ???????????????????????????????????

  • sachin - madurai,இந்தியா

    மோடி, ராஜ்நாத்சிங் ஐயும் விசாரிங்க ஏன் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அறிக்கையை உள்துறை , பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்து இருக்கிறது .....

  • K.Ramachandran - Chennai,இந்தியா

    This should be a public hearing. Then only people can know the truth.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    இறைவன் மனிதர்களை படைத்தான், மனிதர்கள் பணங்களை படைத்தார்கள், அந்த பணமிருந்தால் தான், இறைவனை மிக அருகே சென்று தரிசனம் செய்ய முடியும் கோயிலிலே. பண வேட்டைக்காக, பஞ்சமா பாதக, பாவ செயல்களை செய்யவும், ஒரு சுயநல கூட்டம், நம் இந்தியாவில் நடமாடுகிறதா?, அல்லது இல்லையா?, பொதுவாக. ஆக திருவாளர்கள் அப்பாவி பொதுமக்கள்தான், தங்கள் தினசரி வாழ்வில், உசாராக வாழவேண்டும், நம் இந்தியாவில். (பொதுவாக கூறினேன்).

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    என்னமோ நடந்தது எல்லாமே மர்மமாய் முடிந்தது சசி சின்னம்மாவை தவிர மருத்துவர்கள் யாராவது அறைக்குள் வந்தார்களா மருத்துவம் பார்த்தார்களா என்னும் சந்தேகம் பலமாய் எதிரொலிக்கிறது

  • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

    நம்ம பகுத்தறிவாளிகளுக்கு பொறுமையே கிடையாது. எடுத்தமா, கவுத்தமா என்று மட்டும் தான் தோணும். அது தான் டாஸ்மாக் விஞ்ஞானம். 25 வருசமா மறைந்த ஜேஜே வை முன்னிறுத்தி, என்னென்னமோ செய்து விட்டனர். அவர்களின் அயோக்கியத்தனத்திற்கு, அவங்க அதிகாரிகளையும் நியமித்து கொண்டு செயல் பட்டனர். இதெல்லாம் சரி செய்யணும் என்றல் கொஞ்சம் சமயம் வேண்டாமா. பொறுமை காக்கவும். முடிவு வரும் வரையில் காத்திருப்போம்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    இந்த அரசு மருத்துவக்குழு மருத்துவமனையில் ஜெ அவர்களை பார்க்கவில்லை என்றால் அப்போதைய முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பி.எஸ் சிடம் இவர்கள் இது பற்றி விவாதம் செய்தார்களா, பார்க்கமுடியவில்லை என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்களா, ஏன் அவர்களால் பார்க்க முடியவில்லை, இந்த குழுவை அமைத்தது யார், அவர்களிடம் இந்த குழு உறுப்பினர்கள் அறிக்கை ஏதாவது அப்போது கொடுத்தார்களா என்பதை எல்லாம் விசாரித்தால் நலமாக இருக்கும்,

    • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

      உங்களுக்கு மண்டையில ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன்.......முதல்வர் ஓ.பி.எஸ் தலைவியை பாக்க முடியாம வெளியில உக்காந்து இருந்தாரு.. அவ்வளவு ஏன் பிரதமரே பாக்க முடியல அதான் அவரு வரல....... பன்னீர்கிட்ட போயி ஏன் முறையிடலான்னு இவரு கேக்குறார்.

    • kanchi siva - chennai,இந்தியா

      ராகுல் காந்தி கூட ஜேஜே வை பார்க்க வில்லை

    • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

      உங்க மண்டை நல்லா இருக்குதா.. பிரதமரே பாக்க முடியலயா இந்த இடத்துல மெயின் வில்லனே பிஜேபி.. யோசிச்சு பார் உண்மை புரியும்.. இப்பொது நடக்கும் ரைடு, தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் மோடியே காரணம்

    • Kalyanaraman S - Bangalore,இந்தியா

      பாலகிருஷ்ணனின் கருத்துக்கு எதிர்மறையாக மதிப்பளித்தவர்கள், எதற்காக அப்படி செத்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் அவர் சொல்வது மிகவும் சரியே எதிர்ப்பவர்கள் ஏதோ மறைப்பது ஆதரிப்பதுபோல் தோன்றுகிறது

  • AURPUTHAMANI - Accra,கானா

    சரியான உச்ச நீதிமன்ற நீதிமானிடத்தில் இந்த விஷால் விவகாரம் தெளிவாக எடுத்து சொல்லப்படுமேயானால் இந்த தேர்தலும் செல்லாததாக முடியும்,அந்த தேர்தல் அதிகாரி கார்பொரேஷன் ஆஃபீஸ்ர் தண்டிக்கப்படுவார். நடந்ததை உள்ளேய நேராக பார்த்தவர் சொல்வதை கேட்டால் நடுங்குகிறது, எதோ நாலு பேருக்கு தெரிந்த விஷாலுக்கே இந்த நிலைமை என்றால் என் போன்றவர்கள் போட்டியிடுவது நினைத்தே பார்க்கமுடியாது .நீதி துறையின் கடைசி மூச்சு இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது. போகவில்லை,என்ற நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம்

    • R. Vidya Sagar - Chennai,இந்தியா

      எந்த விஷயத்தில் கருத்து பதிகிறோம் என்று கூட தெரிய வில்லை.

  • Ganapathy - Bangalore,இந்தியா

    நம்ம ஊர் டாக்டர்களையே நம்பவில்லை . ஒரு அளவிற்கும் மேலாக ரகசியம் என்றபெயரில் சசி & கோ செய்த கூத்து தமிழ் நாட்டிற்கு தீரா வினையாக வந்துள்ளது . இப்போது கருப்பு சட்டை அணிந்து கண்ணீர் விடும் அடிமை கூட்டம் , பண்டைய பரமார்த்தகுருவம் சீடர்களும் கதையை நினைவுக்கு வருகிறது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'அந்த நால்வர்' மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அரசு சம்பளம், சொகுசு தங்கள் பேப்பருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த மேதைகள் இவர்கள் மருத்துவ கௌன்சிலால் நீக்கம் செய்து லைசன்ஸையும் பறிக்கப்பட வேண்டியவர்கள். எத்தனை கோடி பெற்றார்களோ ?

    • kandhan. - chennai,இந்தியா

      சூப்பர் பதிவு இவர்களை உண்மை கண்டறியும் சோதனையை மக்கள் முன் நடத்தி இவர்கள் மருத்துவ தொழில் செய்யமுடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இல்லையேல் பிற மருத்துவர்களும் இதே செயலை செய்யத் துணிவு வந்துவிடும் இதை இப்போதே வேர்அறுக்கப்பட வேண்டும் மேலும் பிற மருத்தவர்களுக்குஇந்த வழக்கு முன் உதாரணமாகிவிடும் இதில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் கந்தன் சென்னை

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    ஆஸ்பத்தியில் நடந்த உண்மை தெரிய வேண்டுமெனில், சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் ஸ்பெஷல் செகரட்டரி ஷீலா நாயர் இவர்கள் இருவரையும் விசாரித்தால் 90% உண்மை வெளி வரும், இவர்கள் இருவருந்தான் ஜெயா அறைக்கு பக்கத்துக்கு அறைகளில் இருபுறமும் அப்போ வந்த செய்தி.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    கைநாட்டுக்கு சாட்சியாக சசி மட்டுமே உடனிருந்தார் வேலிக்கு ஓணான் சாட்சி . எது வேலி எது ஓணான்?

    • Raja Ramesh D - villupuram,இந்தியா

      மோடிஜி அனுப்பிய டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்தோம் என்று சொன்னார்களே? வெங்காய நாயுடு வேறு வந்து அடிக்கடி பார்த்துக் கொண்டாரே? கவர்னர்ஜி வேறு அடிக்கடி வந்து பார்த்து அறிக்கை விட்டாரே? அப்போ இது எல்லாமே நாடகமா? அப்படி நாடகமென்றால் அதை நடத்தியது யார்? எதற்க்காக?

    • Raja Ramesh D - villupuram,இந்தியா

      வேலி- மோடி, ஓணான் - சசி

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      விழுப்புரம் ராஜா அவர்களே, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் அமுக்கப் பார்த்தார்கள். மிஸ் ஆகிடுச்சு.

    • kanchi siva - chennai,இந்தியா

      ராகுல் காந்தி கூட பார்க்காமலே போனவர் லிஸ்ட் இல் இருக்கிறார் நண்பரே

  • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

    மோடிஜி அனுப்பிய டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்தோம் என்று சொன்னார்களே? வெங்காய நாயுடு வேறு வந்து அடிக்கடி பார்த்துக்கொண்டாரே? கவர்னர்ஜிவேறு அடிக்கடி வந்துபார்த்து அறிக்கை விட்டாரே? அப்போ இது எல்லாமே நாடகமா? அப்படி நாடகமென்றால் அதை நடத்தியது யார்? எதற்க்காக?

    • Kailash - Chennai,இந்தியா

      எய்ம்ஸ் மருத்துவர்கள் சும்மாகத்தான் இருந்தார்கள் என்று அப்போலோவில் வேலை பார்த்த டாக்டர் சமீபத்தில் ஒரு தனியார் டிவி நேரலையில் பேசினார் சில நிமிடங்களில் பிளாஷ் நியூஸ் என்று அந்த செய்தி மறைக்கப்பட்டது...

    • mohan - chennai,இந்தியா

      எல்லாம் பல் வேறு தரப்பினரின் பல்வேறு லாபத்திற்காக....

  • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

    பணத்திற்காக மட்டுமல்ல. உயிர் போய்விட்டால் ? 2 ஜி வழக்கில் சாதிக் பாட்சாவுக்கு நிகழ்ந்ததைபற்றி சற்று நினைத்துப் பாருங்கள்.

  • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

    முதலில் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து அப்போல்லோ மருத்துவ மனைக்கு சீல் வையுங்க எல்லா உண்மையும் வெளியில் வரும், தமிழக அரசுக்கு அந்த தைரியம் இருக்க ?

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      தமிழக அரசையல்ல, மத்திய அரசுக்கு என்று எழுதுங்க.

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    மேலிடம் அனுப்பிய எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரிப்பார்களா விசாரித்தால் உண்மை வருமா........... ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே இது சாத்தியம்.

  • Paranthaman - kadappa,இந்தியா

    ஜெயாவின் மர்ம மரணத்தில் ஒரு முக்கிய நபரை எதிர்பார்த்து இந்தவழக்கு சுழன்று செல்கிறது. அவர் வரும் வரை விசாரணை நீளும். அடுத்த ஆறு மாதம் மேலும் பல தடவை நீளும்.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      4 வருஷம் 10 வருஷமாகும். ஆனால், இதுக்கெல்லாம் உடந்தையா, கண்டுக்காம இருந்த மத்த குற்றவாளிகள் எல்லாரும் வெளியவே இருப்பானுவோ.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      தமிழ்வேல் அவர்களே, சப்போஸ் இந்த விசாரணையில் ஜெயலலிதா கொலை தான் செய்யப்பட்டு, அல்லது சாகவிட்டு, பலநாட்கள் அப்போலோவுக்குள்ளே அவரின் உடலை மறைத்து வைத்தார்கள் என்று தீர்ப்பு வந்தால், உடந்தையா இருந்தவங்க சார்பாக மத்திய அரசு ராஜினாமா செய்யுமா?

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    மருத்துவர்களை பத்தி படத்தில காட்சி வச்சா உடனே எப்படி மருத்துவர்களை தரகுறைவா படம் எடுக்கலாம்னு கொடி பிடிச்சிக்கிட்டு வருவானுங்க...நிஜத்தில் அப்படி தானே நடக்குது? சும்மாவே தினசரி டி சாப்பிட்டுட்டு போயி இருக்காங்க......ஒரு நாள் கூட ஜெயாவை பார்க்கலை....ஆனா சம்பளத்தை வாங்கிகிட்டு போயிட்டாங்க? நாங்களும் இத தானயா ஒரு வருசமா சொல்லிக்கிட்டு இருக்கோம்? ஜெயா உயிரோட இருந்து இருந்தா தானே எல்லாரும் பார்த்து இருக்க முடியும்? நீங்க ரைம்ஸ் டாக்டர்களை கூப்பிட்டு கேட்டாலும் இத தான் சொல்லுவாங்க.......நாங்க தினசரி முதுகை தான் பார்த்துட்டு போனோம் கவர்னர் மாதிரி........எங்களை கூப்பிட்டு போயி தனி ரூமில் உக்கார வச்சு தினசரி ரொட்டி சப்பாத்தி மசாஜ் எல்லாம் கொடுப்பாங்க...சாயங்காலம் ஒரு ரிப்போர்ட் கொடுத்துட்டு போயிடுவோம்...........அந்த பாலாஜிக்கிட்ட தான் எல்லா மேட்டரும் இருக்கு.............சசிகிட்ட பணம் வாங்கிட்டு கைரேகை அவன் தான் உருட்டி கொடுத்து இருப்பான்.......அந்த கட்டை விரலையும் வெட்டி கொடுத்து இருப்பான்.............கவர்னர் முதல், முதல்வர் அமைச்சர்கள் கட்சி காரன் என்று யாருமே ஜெயாவை பார்க்கலை..........பன்னீர் எடப்பாடி எல்லாமே சும்மா திண்ணையில தினசரி உக்காந்து இருந்துட்டு கேண்டின்ல சாப்பிட்டுட்டு ராத்திரி வீட்டுக்கு போயிடுவாங்க...........அங்க உக்காந்து யாரையும் அண்ட விடாம பார்த்துக்கிட்டது சசியும் தினகரனும்.......ஒரு பங்கு தர்றேன்னு தீபக்கிட்ட அடிச்சு விட்டதால் அவனும் கம்ம்னு அப்போ இருந்துட்டான்.........லேட்டா இந்த கும்பலே எல்லாத்தையும் சுருட்டிகிட்ட போறது தெரிஞ்சு அப்போ தான் வெளியில வந்து குரல் கொடுக்க ஆரம்பிச்சான்..........தங்களோட பதவி கிடைக்கிறது சசி கையில தான் அப்படின்னு தெளிவா தெரிஞ்சதால பதவிக்காக பன்னீர் எடப்பாடி எல்லாம் கம்முன்னு அப்போ இருந்தாங்க.............அவங்களுக்கு நல்லா தெரியும் என்ன நடந்துகிட்டு இருக்குன்னு......பதவிக்காக அப்போ கம்முனு இருந்தாங்க...............அதனால தான் ஜெயா செத்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே எந்த கண்ணீரும் இல்லாம பதவி ஏத்துக்க முடிஞ்சது...............

    • Anandan - chennai,இந்தியா

      இதெல்லாம் ஏமாத்து வேலைனு மத்த கட்சிகாரங்களெல்லாம் கூப்பாடு போட்டப்ப அவங்களை கன்னாபின்னா திட்டுனீங்களே இப்போ இப்படி பேசுறீங்க சாமி.

    • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

      நான் எங்க திட்டினேன்... கொஞ்சம் பொறுமையா இருந்து என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு சொன்னேன்... அது போக அந்தம்மாவை போட்டு தள்ளிட்டாங்கன்னு அப்பவே நான் பதிவு பண்ணி இருந்தேன்......

  • rajan - kerala,இந்தியா

    விரைவில் ஜெ மரணம் எனும் மர்ம நாவல் எத்தனை பக்கங்களில் வெளியாக போகுதோ கடவுளே.

  • rajan - kerala,இந்தியா

    இத்தனை பண்ணுறீங்களே ஒரே ஒரு முறை அந்த மன்னார்குடி மாபியா சின்னத்தாயி கிட்டே ஒரு நார்க்கோ அனாலிசிஸ் டெஸ்ட் பண்ணுங்க அத்தனை உண்மையும் தானே வெளிவருமே. அதை ஏன் பண்ண இன்னும் தயக்கம் மன்னனா.

    • R dhas - Bangalore,இந்தியா

      சின்னத்தாயி கிட்டே அப்படி ஒரு டெஸ்ட் செய்து வென்னீரு மோ(ச)டி கும்பல் முந்தைய கவர்னர் எல்லாரும் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? மக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக விசாரணை செய்வது மாதிரி செய்து கடைசி வரை உன்மை வெளி வராமல் பார்த்து கொள்வது தான் இவர்களது நோக்கம். சசிகலா வென்னீரு உன்மையை சொன்னாலும் சரி அல்லது மத்திய மாநில அரசுகள் உன்மையான முயற்சி செய்தாலும் சரி எல்லாருமே மாட்டுவார்கள். அதனால்தான் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறைசொல்லி பம்மி கொண்டு திரிகிறார்கள். ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே உன்மை வெளி வருவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனாலும் ஸ்டாலின் இதில் எந்த அளவுக்கு முயற்சி எடுப்பார் என்று தெரியவில்லை. கருணாநிதி என்றால் ஜெயலலிதா அவரது பரம விரோதி என்பதையும் தாண்டி இந்நேரத்திற்கு பிரித்து மேய்ந்திருப்பார். இதற்காகவே அவர் உடல் நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்......

  • venkatesh - coimbatore,இந்தியா

    மோடிஜி அனுப்பிய டில்லி டாக்டர்கள் என்ன சொல்லப்போறாங்க .ரேகை எடுத்த டாக்டரை நல்ல விசாரிச்ச பலஉண்மைகள் வெளியே வரும். பணம் இருந்தால் என்ன வேணுமானாலும் செய்யலாம் அப்பல்லோ ரெட்டி என்ன சொல்லுவாரு.. இவனுங்களும் அரசியல்வாதிகள் போல் பணத்துக்கு விலை போனவர்கள்.

    • Shanu - Mumbai,இந்தியா

      JJ சாவில் மோடியும் உடந்தை. தமிழ்நாட்டை அபகரிக்க பிஜேபி போட்ட முதல் திட்டம். JJ வை தீர்த்துக்கட்டியது. JJ சாவில் சசிகலாவுக்கு மோடிக்கும் தொடர்பு. கடவுள் மட்டும் தான் இவர்களை தண்டிக்க முடியும்.

    • K.Sugavanam - Salem,இந்தியா

      தலை குனிவு...அனைவரும் சேர்ந்து நாடகமாடியுள்ளது போல மக்கள் சந்தேகிக்கிறார்கள்.. நெருப்பில்லாமல் புகையாது.

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      நெருப்பில்லாமல் புகையாது, எனக்கு என்னமோ, 2019 முன் மஸ்தான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வார் போல ஒரு அசாத்திய ஒலி கேட்க்குது.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    உயிரோட்டம் இல்லா கை ரேகை என்பது உண்மை தான் போல ஆகவே தான் கைரேகை குறித்து பாலாஜி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த ஆட்சிக்கு மத்திய அரசின் பரிபூரண ஆதரவு உள்ளவரை ஒன்றும் செய்ய முடியாது. ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விட்டது.

  • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

    உண்மையை வரவைக்க சந்தேக பட கூடிய வகையில் உள்ள நபர்களுக்கு Narcotic Test செய்யுங்கள். உண்மை தானாகவே வரும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பார்க்கவில்லை என்றால் ஏன் இவர்கள் அந்தகுழுவில் இருந்தார்கள்?

    • Anandan - chennai,இந்தியா

      எதிர்க்கட்சி தலைவர் இந்த விஷயத்தில் கேள்வி கேட்டபோது அடிமைகள் கொதித்து எழுந்தனர். ஒரு முதல்வரின் உடல்நல சீர்கேட்டுக்கு ஏன் இவ்வளவு ரகசியமாக மருத்துவம் பார்க்கவேண்டுமென்று. அது சரி அடிமைகள் என்றாலே மழுங்கிவிடும்தானே.

    • rajan - kerala,இந்தியா

      பணம் கொட்டுறப்ப ஏன் போயி அந்த கன்றாவிகளை இவுக பார்க்கணும்? அள்ளி கொண்டு போவது மட்டும் தானே இவுக வேலை.

    • K.Sugavanam - Salem,இந்தியா

      அப்பொல்லோவுக்கு விசிட் அடித்த எல்லா அரசியல் வாதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்..

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    இந்தியாவில் பணம் மற்றும் பதவி இருந்தால் நான்தான்டா கடவுள்.... (அப்போ ஜெயாவுக்கு ஏன்இப்படி என்று கேக்கதீங்கோ.... அதுதான் டம்மி என்று தெரிந்துசீ ..என்ன கொஞ்சம் லேட்டா..)

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      பணம் + மூளை + அடிமைகள்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    // தினமும், அங்கு வந்து அமர்ந்துஇருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும், மருத்துவ செய்திக் குறிப்பை, ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். // சும்மா உட்கார்ந்திருந்ததுக்கு சம்பளம் குடுத்தாங்களா ?

    • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

      அதுமட்டும் அல்ல தினசரி கவரு வேற வாங்குனதா சொல்றாங்க?

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      சத்தம் போடாமல் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு...

  • Raju - jersi,யூ.எஸ்.ஏ

    ம மா கூட்டம் , இதை புஸ்வானமாக செய்து விடுவார்கள் .

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஜெ., கைரேகை குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, பாலாஜி மறுத்து விட்டார். அப்போ கைநாட்டு வச்சதுக்கு சாட்சி கையெழுத்து போட்டியே அது எப்படி. அதை இந்த கூறுகெட்ட தேர்தல் ஆணையம் ஏத்துக்கிச்சே அது எப்படி. அந்த மூணு வேட்பாளர்களையும் அந்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டியிருக்குமே. இந்த கவர்னருக்கு இதெல்லாம் புரியுமா? இரட்டைத்தலை கட்சி முட்டாள்களுக்கு வன்முறை தானே தெரியும்.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அப்போ உயிரோட இருந்திருந்தா நான் கைநாட்டு வைக்கலேன்னு சொல்லி இருக்கும். (விஷாலுக்கு நடந்த கதை போல)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement