Advertisement

'நாங்க தான் இருக்கோம்ல...!' காமெடி ஜோடியின் கிச்சுமுச்சு அரசியல்!

'வருங்கால முதல்வர் தீபாம்மா; கோட்டையை ஆளப்போகும் தீபாம்மா; புரட்சித் தலைவி தீபாம்மா' என, தீபாவை சுற்றி நின்ற கூட்டம், ஜெ., சமாதியில் எழுப்பிய கோஷத்தை கேட்டு, தீபாவே சிரித்த காட்சிகள், வீடியோ பதிவாக வெளியாகி, 'சிடுமூஞ்சி'களையும் அதிரடியாக சிரிக்க வைத்தது. அதற்கும் மேலாக, கொஞ்சம் கூட கூசாமல், 'புரட்சித் தலைவர் மாதவன் வாழ்க' என, கோஷம் போட்ட வீடியோ காட்சி, 'பகீர்' சிரிப்பை கிளப்பியது. அஜித், விஜய் பட, 'டீஸருக்கு' கிடைக்காத, 'லைக்கு'கள் இந்த வீடியோவுக்கு குவிந்தது, தனி சாதனை.

இணையதளத்தில், அரசியல்வாதிகளை கொண்டு, காமெடி வீடியோக்கள் ஏராளமாக வெளியாகி, லைக்குகளை அள்ளுகின்றன; ஆனால், பெண் அரசியல்வாதிகளை கலாய்க்கும் வீடியோக்கள் குறைவு தான். அவ்வப்போது, தமிழிசையையும், சி.ஆர்.சரஸ்வதியையும் வைத்து, அந்த குறையை மறக்க முயற்சித்தனர். இந்த நேரத்தில், இவர்களுக்கு ஆறுதலளிக்க, 'நாந்தான் இருக்கேன்ல' என, கிளம்பியிருக்கிறார் தீபா. 'ஜெயலலிதாவின் அண்ணன் மகள்' என்ற அடையாளத்துடன் களமிறங்கியவருக்கு, சீரியஸ் அரசியல் கைகொடுக்காது போனாலும், 'காமெடி' துாள் பறக்கிறது. காமெடி செய்கிறோம் என்பது தெரியாமல், அதை வெகு, 'சீரியஸாக' செய்வது தான், தீபாவின் காமெடி!

ஜெ., உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்தவராக, திடீரென காட்சியளித்தார். ஜெ.,வை பார்க்க முடியாமல், சோகத்தில் இருந்த கட்சியினருக்கு, அவரின் முகச்சாயல் உள்ள தீபா மீது, திடீர் பாசம் ஏற்பட்டது. ஜெ., ஒதுக்கியதால், போயஸ் தோட்டக் கதவு திறக்காதா என, 20 ஆண்டுக்கு மேலாக காத்திருந்த தீபாவுக்கு, இது, அரசியல் கதவை திறந்து விட்டது.

சினிமாவில், ஏழை கதாநாயகி, 'பட்டத்து ராணி கனவு' காண்பது போல, ஜெ., மறைந்ததும், முதல்வர் கனவில் மிதக்க துவங்கினார்; ஜெ., சொத்துக்கும் சொந்தம் கொண்டாடினார். அதன்பின், கட்சியையும், சொத்துகளையும் அடைய, அவர் நடத்திய முயற்சிகள் எல்லாமே, சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும், காமெடியாக வே அமைந்தன. ஒன்றா, இரண்டா... அவற்றை எடுத்துச் சொல்ல!ஆரம்பத்தில், அ.தி.மு.க., தொண்டர்கள், அவரை பெரிதாக நம்பினர். வேலையெல்லாம் உதறி, 'பால்கனியில் தோன்றமாட்டாரா...' என, அவரின் வீட்டு வாசலில், பெரும் கூட்டமே தவம் கிடந்தது. உப்பரிகையில் மகாராணி போல், தினசரி ஒரு முறை மட்டும், தரிசனம் தருவார். ஜெ., விட்டு சென்றதால், அரசியலில் அனாதையாகி விட்டதாக கருதிய தொண்டர்கள், தீபாவை பார்ப்பதை, பெரிய ஆறுதலாக எண்ணினர்.

இதைப் பார்த்து, உற்சாகத்தின் உச்சத்துக்கு போன தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற, அமைப்பை துவக்கினார். 'ஜெ., விட்டு சென்ற தமிழகத்தையும், தமிழர்களையும், இனி, நான் தான் காப்பாற்ற போகிறேன்' என்றெல்லாம் வசனம் பேசத் துவங்கி விட்டார். அதற்கு பிறகு, அதிரடி காமெடிகள் அரங்கேறத் துவங்கின. தான் துவக்கியது, கட்சியா, அமைப்பா என்பதை கூட தெளிவு படுத்த முடியாமல் திணறினார், தீபா. அப்படி யே, அது கட்சி என்றாலும், அதற்கு இப்படியா பொருத்தமற்ற பெயரை வைப்பது என, நகைத்தவர்கள் ஏராளம்.

தன் மனைவி பேசுவதையும், அதற்கு சிலர் கைத்தட்டுவதையும் பார்த்து, கணவர் மாதவனுக்கும், அரசியல் ஆசை வெடித்துக் கிளம்பியது. உடனே, தானும் தனி கட்சி துவங்கப் போவதாக, அவரும் கிளம்பி விட்டார்.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க.,' என, அதற்கு பெயர் சூட்டி, ஜெ., சமாதிக்கு சென்றார். அங்கு, 'இரட்டை இலையை மீட்போம், நதிகளை இணைப்போம்' என, உறுதிமொழி ஏற்று, காமெடியில் தீபாவை விட, திறமைசாலி என காட்டினார். அப்போது, 'புரட்சித் தலைவர் மாதவன் வாழ்க' என, சிலர் கூச்சலிட்ட போது, கடுப்பான உண்மைத் தொண்டர்கள், அங்கே அவர்களை சூழ்ந்து விட்டனர். அப்புறம் என்ன... மாதவனை, போலீசார், 'பத்திரமாக' அனுப்பி வைத்தனர்.

கவுண்டமணி, கோவை சரளா ஜோடி போல, தீபாவும், மாதவனும், 'காமெடி தர்பார்' அரங்கேற்றி வந்த சூழலில், தம்பி தீபக், சும்மா இருப்பாரா... தானும் சளைத்தவரில்லை என, காட்ட நினைத்தவர், ஒரு நாள், தீபாவை, போயஸ் தோட்டத்திற்கு வரும்படி போனில் அழைத்தார். அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடி வரும் தீபா, ஓடோடி சென் றார். கூடவே, 'டிவி'க்காரர்களையும் கூட்டிச் சென்றார். தீபாவுடன் வந்த கூட்டத்தை கண்டு, மிரண்டு போன தீபக், 'நான் உன்னை வரச் சொல்லலியே...' என, 'பல்டி' அடித்ததும், கடுப்பான தீபா, அவரை, 'நாயே, பேயே' என, அசிங்கமாக திட்டியதை, தமிழகமே நேரலையில் பார்த்து திளைத்தது.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், படகு சின்னத்தில் போட்டியிட்டார், தீபா. கடும் வெயில் என்பதால், காரை விட்டுஇறங்க மறுத்து, பிரசாரம் செய்தது, அவரின் தனி பாணி. அப்போதும் விடாமல், 'அ.தி.மு.க.,வை மீட்பேன்; கோட்டையை பிடிப்பேன்' என, கிச்சுகிச்சு மூட்டினார். காங்கிரசில் இருந்து, த.மா.கா., பிரிவதும், பின் இரண்டும் இணைவதுமாக இருப்பது போல, இந்த காமெடி ஜோடி, மாதவனும், தீபாவும், சண்டை போட்டு பிரிவதும், பின் சேர்வதுமாக, அவ்வப்போது தனி விளையாட்டு விளையாடினர்.

இதையெல்லாம் பார்த்து வெறுத்து, 'இது, நம்மை காக்க வந்த ஜோடியல்ல; வெறும் காமெடி ஜோடி' என உணர்ந்தவர்கள், வேறு திசை பார்த்து ஓடி விட்டனர். இப்போதெல்லாம், தீபாவின், தி.நகர் வீட்டு முன், கூட்டத்தையும் காண முடிவதில்லை; பால்கனி தரிசனமும் இல்லை. ஆனாலும், அசருவது இல்லை அவர். சமீபத்தில், போயஸ் தோட்டத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது, 'என்னை கேக்காமல், எப்படி உள்ளே போகலாம்; நானும் உள்ளே வருவேன்' என, தீபா அரங்கேற்றிய காமெடியை கேட்டு, டில்லியில் இருந்த அதிகாரிகளும் சிரித்தனராம்.

அதையும் சட்டை செய்யாமல், பழையபடி, ஆர்.கே.நகருக்கு வந்தார்; ஆனால், புது, 'கெட்டப்பில்' தோன்றி, மக்களை, 'மெர்சல்' ஆக்கினார். கணவர் பெயரையே, வேட்புமனுவில் குறிப்பிடாமல், ஓட்டைகள் நிறைந்த, ஒரு மனுவை தாக்கல் செய்து விட்டு, 'அது நிராகரிக்கப்பட்டு விடும்' என, தீர்க்கத்தரிசி போல அருள்வாக்கு கூறி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் கலகலப்பை ஏற்படுத்தினார்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், தன்னுடைய வேட்புனுவை மறுபரிசீலனை செய்யுமாறு, தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டது, அவரின் காமெடி, 'பஞ்ச்!' கணவனும், மனைவியும், போட்டி போட்டு காட்டி வரும் முழு நகைச்சுவை திறமையையும் பார்த்தோ, என்னவோ தெரியவில்லை... 'ஜெ., மகள் நான்' என, பெங்களூரில் இருந்து புறப்பட்டிருக்கிறார் அம்ருதா. அவர் என்னென்ன காமெடி ஐயிட்டங்களை, கைவசம் வைத்திருக்கிறாரோ... முடியலடா சாமி!

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (28)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவரை சுற்றி ஏதெனும் ஆதாயம் கிடைக்கும் என்கிற ஆசையில் பல அல்ல கைகள் இருக்கும் வரை இவர் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்கிற கனவில் மிதந்து கொண்டேதான் இருப்பார் அரசியலில் பழம் தின்று கோட்டை போட்ட ஸ்டாலின் திணறுகிறாரென்றால் இந்த காமெடி பீஸ் எம்மாத்திரம் அனால் ஒன்று இவர் வைகோ , விஷால், பண்ணையார் போன்ற அரசியல் கோமாளிகள் இருக்கும் வரை வடிவேலு இல்லாத குறை தெரிய போவதில்லை

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    ஆளைக்கண்டு ஏமாறாதே வெறும் உது காமாலைன்னாப்பல இதுக்கு ஒரு வருத்தமும் இல்லே மண்ணும் இல்லே முன்போலவே வெறும் சாட்டெர் பாக்ஸ் .பெருமாளே இந்த எல்லா தீய சகதிகளிடமிருந்தும் தமிழ்நாட்டை யம் தமிளா ளையும் காப்பாத்து

  • Anandan - Dublin,அயர்லாந்து

    அட போங்கப்பா.. நீங்க வேற கிச்சுகிச்சு மூடிக்கிட்டு

  • Shree Ramachandran - chennai,இந்தியா

    இந்தியில் வந்த tun tun என்ற காமெடி நடிகையை நினைவு படுத்துகிறார்.

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

    கொஞ்ச மாதங்களுக்கு முன்னர் தினமலரும் வருங்கால முதல் அமைச்சர் அப்படினு சொன்னிங்க

  • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

    இவர்கள் மட்டுமல்ல..காமடி பீசுகள்... தினமும் ஒரு வேஷம் போட்டு டுவிட்டரில் ஒருத்தர் காமெடி பன்னுகிறார்.... வருவேன் ஆனா வரமாட்டேன் இது எப்படி இருக்குன்னு ஒருத்தர் நையாண்டி செய்கிறார்.. தொப்பி போனா என்ன குக்கர் வந்துச்சே.. என எத்தனை அடிபட்டாலும் வலிக்காமலே சிரிச்சி சிரிச்சே மக்களை சிரிக்க வைக்கிறார் வடிவேலு மாதிரி ஒருத்தர்.. நாமினேஷன் செய்வதையே நையாண்டியாக செய்து நாமெல்லாம் பார்த்து சிரிக்கும்படி சீன் போடுகிறார்.. மனோகருக்கு பிறகு வீரவசனம் பேசி நடித்து காண்பித்து நாமெல்லாம் தமிழர் என்று கைவீசி நடனமாடி ஜோக்கடிக்கிறார் ஒருவர்..என்னவென்று சொல்ல தமிழகமே காமெடி பாலிடிக்ஸ் ஆகி விட்டது அம்மா இறப்புக்கு பின்னால்......

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    தமிழ் சினிமா காமெடி பீசு என்று இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நான் சகல சஞ்சாரி நாரதர், விகடகவி தெனாலி ராமன் போல என்று தன்னைத்தானே இவர்கள் கூறிக்கொள்வார்கள், அதனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்பது போல. உன் நண்பனை சொல் நான் உன் அறிவை சொல்கின்றேன் என்பது போல டாஸ்மாக் நாட்டு மக்கள் கூமுட்டைகள் என்பது போல இருக்கின்றது இந்த தீபாவை அவர்கள் கொண்டாடுவது.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    புதிய மோஸ்தர், பழைய ஆள் . புது முயற்சி.

  • sri - trichy,இந்தியா

    ஐயா புபதி எப்படி இப்படி யோசிக்கற . sirichi vayuru valikuthu

  • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

    அப்படி இவரின் மனு மாற்றி வைக்கப்பட்டுள்ளது அல்லது மாற்றிய தாள்களை வைத்து பரிசீலனை நடந்திருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம்? மேலும் இவரை யாராவது மிரட்டியதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அலைபேசி உரையாடல் அழைப்புகளை எடுத்து ஆய்வு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடலாமே?

  • Sathish - Coimbatore ,இந்தியா

    இப்படிப்பட்ட மக்கள் இருப்பதை நினைத்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது. அதனாலேயே என்னவோ மலையாளி தமிழனை கேவலமாக பேசினாலும் நமக்கு இது தேவைதானாடா என்றே தோன்றுகிறது எதிர்த்து பேசி வாயடைக்க வைக்க தோன்றுவதில்லை.

    • dandy - vienna,ஆஸ்திரியா

      இந்திய தமிழனை இன்று யார் மதிக்கின்றான் ?

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    தமிழக மக்களுடைய பிரச்சனையில் அவர்களுடைய கவலைகளை சிறிது மறக்க உதவும் காமெடி கண்மணிகள் தீபாவும், மாதவனும்.

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    காங்கிரசில் இருந்து, த.மா.கா., பிரிவதும், பின் இரண்டும் இணைவதுமாக இருப்பது போல.. அப்போ காங்கிரசும் கோமாளி கட்சியா.?.உண்மை தான்.. இப்போ இருக்கும் நாவுக்கரசர் பெரியகோமாளி..

  • vasanthan - Moscow,ரஷ்யா

    கார யாரு வச்சிருக்காங்கிற கவுண்டமணி காமெடியை விட கரா ஓட்டுனரை யாரு வச்சிருக்காங்க காமெடி ரொம்ப நல்ல இருக்கே ..

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    காலம் கொஞ்சம் கை கொடுத்திருந்தால் காமெடி தமிழக மக்களுக்கு டிராஜடியாக மாறி இருக்கும்.

  • Paranthaman - kadappa,இந்தியா

    ஜெயா இறந்ததில் தீபாவுக்கு அக்கறை இல்லை.தொண்டர்களின் கட்சி நிதியில் ஆட்டம் போடுகிறார்.

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    இந்த காலத்தில் காசு பணம் இருந்ததால் தான் மதிப்பே வெறும் கையில் முழம் போட்டால் . இருக்கற இடம் தெரியாமல் தான் போவார்கள். இதெல்லாம் சப்ப பீசுங்க.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    கார் டிரைவர் ஐ கட்சியின் தலைவராக போட்டதை மறந்து விடீர்கள் .

  • bala - toronto,கனடா

    இதற்கு எல்லாம் காரணம் திராவிட கட்சிகள் தான்.தமிழனை இப்படி அடிமையாக வைத்திருக்க விரும்புகிறார்கள். ஒருகாலத்தில் உலகத்தை ஆண்ட இனம். தன் உரிமைகள் பறிபோவது தெரியாமல் மது,சினிமா மோகத்தில் அழியுது.இதை நினைக்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை ...

    • dandy - vienna,ஆஸ்திரியா

      அந்த ஆண்ட இனம் சோழர் காலத்தோடு போய் விட்டது..அவர்களுக்கு ..சூடு ..சுரணை ..மானம்..ரோசம் ..எல்லாம் இருந்தது

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    Even Jeya was a hitler style comedian. No wonder Deepa some it from her aunt.

  • Raju - jersi,யூ.எஸ்.ஏ

    சூப்பர்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழகத்தை பொருத்தமட்டில் வைகோ கூட பிரதமராக வாய்ப்பு இருக்கிறது.. ஹி ஹி ஹி... கற்பனைக்கு எல்லை இல்லை...

    • dandy - vienna,ஆஸ்திரியா

      ஏன் தினகூறன் கூட சிங்கப்பூரில் பெரிய ஆள் என்று தானே இங்குள்ள மாக்கள் நினைக்கின்றன ..இவனுக்கு சிங்கப்பூர் பாஸ்போர்ட் கூட உண்டாம் ஹி ஹி ஹி

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி தீபா வின் ஆட்சி இப்போ இருக்கும் ஆட்சியைவிட நல்லாவே இருக்கும்

    • Kunjumani - Chennai.,இந்தியா

      அப்படி வீசுங்க வீச்சறிவாள.. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அத்துடன் கலைஞர் பட்டத்தையும் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

    • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

      பட்டத்த புதுசா குடுங்கைய்யா?எதுக்கு வீணா கடன் வாங்கிகிட்டு? நல்லாவா இருக்கு? ஏன் ஓட்டுனர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் தெய்வமுன்னு கூட கொடுக்கலாமே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement