Advertisement

சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகள்; நிதி வழங்கி மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில், மின் கம்பிகளை பூமிக்கடியில் அமைக்கும் பணிகளுக்காக, 3,200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அனைத்து மாநிலங்களின் மின் துறை அமைச்சர்கள் மாநாடு, நேற்று டில்லியில் நடந்தது. இதில், தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி பேசியதாவது:


தமிழகத்தின் உபரி மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய வசதியாக, தனிப்பயன் பசுமை மின்வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள், 3, 4 ஆகியவற்றின் மொத்த மின் உற்பத்தியான, 2,000 மெகாவாட் மின்சாரத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும். செய்யூர் அனல் மின் திட்டத்தை, விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்.

இத்திட்டத்தின் தேவைக்காக, பிரத்யேகமாக ஒரு நிலக்கரி தொகுதியை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இதன்பின், அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. இருப்பினும், சென்னை நகரில், அடிக்கடி மின் தாக்கத்தின் காரணமாக, மின் கம்பங்கள் பழுதடைந்து வருகின்றன. இதை சரிசெய்யும் வகையில், இக்கம்பங்களில் செல்லும் கம்பிகளை, மின் புதை வடங்களாக, அதாவது, பூமிக்கடியில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக, மத்திய அரசிடம் கோரப்பட்டிருந்த, 3,200 கோடி ரூபாய்க்கு, தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. நவ., 29ல் வீசிய, 'ஒக்கி' புயல் காரணமாக, கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; 11 ஆயிரம் மின் கம்பங்கள் வீழ்ந்துவிட்டன. நான்கு நாட்கள் அங்கேயே முகாமிட்டு பணியாற்றினோம். அதிகாரிகள் இன்னும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில், முழுவதுமாக மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  கண்ணுக்கு தெரியும்படி இருக்கும் போதே இவ்வளவு உயிரிழப்புகள்...கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கடியில் ஏதாவது மின் கசிவு ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்...நம் நாட்டை போன்ற கட்டமைப்பு கொண்ட நாடுகளுக்கு நிச்சயம் பூமிக்கடியில் புதைக்க படும் மின்சாரம் என்பது ஆபத்துதான்...

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஓரிரு நாட்களில் சரியாகும் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். எப்போதுதான் சரியாகுமோ தெரியவில்லை.

 • alagesh - tamilnadu

  நீங்கள் 3 கோடி ரூபாய் தான்டா செலவு செய்து கணக்கு 3200 கோடி

 • jagan - Chennai,இந்தியா

  மழை பெஞ்சா நம்ம ரோடு முழுக்க தண்ணி தேங்குது... மின் கசிவு இருந்தால் மொத்த தண்ணியும் ஷாக் அடிக்குமா ? மரம் வளர்ந்தால் அதன் வேர் இந்த கரண்டு கம்பியை பிச்சுடுமா ?

 • Rajamani Sundaresan - thanjavur,இந்தியா

  அரசியல்வாதிகளுக்கு கொள்ளை அடிப்பதற்கு மற்றும் ஒரு சந்தர்ப்பம்.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  ஆங்கிலயேர்கள் ஆட்சியின் போது மத்திய சென்னையில் பூமிக்கு அடியில் கேபிள்கள் போடப்பட்டன.அதிக செலவு என்பதால் இந்த முறை கை விடப்பட்டது.ஆனால் புயல் வெள்ளத்தின்போது பாதுகாப்பாக இருக்கும்.சாலைகளில் மரங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது..

 • Ram - ottawa,கனடா

  எல்ல கடலோர மாவட்டத்திலும் பூமிக்கடியில் மின்தடத்தை கொண்டுசென்றால் புயலின்போது மின்தடை மற்றும் உயிரிழப்பு இருக்காது

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  இது சென்னை நகருக்கு மட்டுமா அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஊர்களுக்குமா? இந்த 3,200 கோடி ரூபாய் நிதியுதவி முறையாக செலவழிக்கப்படுமா இல்லை இதில் 20 முதல் 40 % வரை மின்சார துறை அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு கமிஷனாக போய் விடுமா? தரமான பொருட்கள் வாங்கப்படுமா ? இவ்வளவு கேள்விகள் உள்ளனவே

 • K.Ramachandran - Chennai,இந்தியா

  சென்னைக்கு மட்டும் தானா. மற்ற ஊருக்கெல்லாம் எப்போ ?

 • christ - chennai,இந்தியா

  இதில் எத்தனை கோடிகளை இந்த மொடா முழிங்கிகள் முழுங்க காத்துஇருக்கனவோ ?

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  பூமித்தாய் தான் என்ன பாடு படுகிறாள்

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  நல்ல சான்ஸ், மக்கள் பணத்தால் உங்கள் பையை நிரப்புங்களால் திருடர்களே

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கண்ணுக்கு தெரிவதிலேயே ஊழல் செய்பவர்கள்... தரைக்கு அடியில் என்றால் சொல்லவும் வேண்டுமா... தமிழனை நினைத்தால் பரிதாபப்படத்தான் முடியும்...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  பூமிக்கடியில் மின் கம்பிகள் போவது நம் தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது

 • KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா

  இக்கம்பங்களில் செல்லும் கம்பிகளை, மின் புதை வடங்களாக, அதாவது, பூமிக்கடியில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது எப்போது முடியும்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement