Advertisement

டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை

லண்டன் : இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, ரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.


ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அது தொடர்பான அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க துாதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக


ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா உள்ளது.


முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன.


இது குறித்து பாலஸ்தீன நிர்வாக சர்வதேச விவகார ஆலோசகர் நஹில் கூறுகையில், ''இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று டிரம்ப் அறிவித்ததன் மூலம் அவர் ஒரு நேர்மையான மத்தியஸ்தராக செயல்பட முடியாது'' என்று குறிப்பிட்டார்.


அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா, ''இது முஸ்லிம்களுக்கு ஆத்திரம்
ஏற்படுத்தும் செயலாக அமையும்'' என்று கருத்து தெரிவித்தது.

டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன. டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • sridharankc -

  அடுத்த பஞ்சாயத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுகும் ஆக இருக்கும.

 • Sulaiman Seit - Chennai,இந்தியா

  பதவியை பயன்படுத்தி டிரம்ப் பேசி இருப்பது ஒரு வகையில் தீவீரவாதமே.எனவே இவரை போன்ற தீவீரவாதிகளுக்கு தீவீரவாதிகளின் எச்சரிக்கை என்பது மிகைப்படுத்த தேவை இல்லாத விஷயம்.நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம்.தீயதை விதைத்தால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அதற்கான கூலியை கொடுத்தே ஆகவேண்டும்.உலகம் அமைதியாக இருப்பதை விரும்பாத டிரம்பிற்கு எனது கண்டனங்களை பதிவிட்டு கொள்கிறேன்.

 • Pats - Coimbatore,இந்தியா

  பாலஸ்தீனம் என்பது சமீப காலத்துப் பெயர். முந்தைய வரலாற்றில் பாலஸ்தீன் என்று எதுவும் இல்லை (1940களில்தான் இந்தியா என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்ததைப் போல). பாலஸ்தீனியர்கள் என்று இன்று அழைக்கப்படுபவர் எல்லோருமே அரபு-முஸ்லீம் இனத்தினர். அரபு படை எடுப்புகளின் மூலம் புது நிலங்களை ஆக்ரமித்தவர்களே (காஷ்மீர் முஸ்லிம்கள் போல). கூடவே கொஞ்சம் பழமைவாத கிறிஸ்தவர்களும் உள்ளனர். அல்-அக்ஸ்ஸா மசூதி அரபு படையெடுப்புகளின்போது கட்டப்பட்டதே. அதுவும் யூதர்களின் பழமையான கோவிலை இடித்து அதன் மீது கட்டப்பட்டது என்பது யூதர்கள் வாதம் (அயோத்தி ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது போல). உண்மையில் யூதர்களே ஜெருசலேமின் 4000 ஆண்டுக்கும் முந்தைய பூர்வ குடியினர். ரோமானிய (இத்தாலி), கிறிஸ்தவ (கிரீஸ்) ஒட்டாமன் (துருக்கி), அரேபிய (சிரியா/ஜோர்டான்/எகிப்து) படையெடுப்புகளால் யூதர்கள் நாடிழந்து நாடோடிகளாய் உலகம் முழுவதும் அடிமைகளாகவும், அகதிகளாகவும் திரிந்து, மீண்டுவந்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டினர். யூதர்களை வெளியேற்றி ஆக்ராமிப்பின்மூலம் இடையில் வந்து காலூன்றியவர்கள் இன்றைய பாலத்தீனிய அரபு-முஸ்லீம்கள். பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 60-70 லட்சம். இன்றைய முஸ்லீம் நாடுகள் நினைத்தால் இவர்களுக்கு தாராளமாக நிலம் கொடுக்கலாம். துருக்கி, சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான், அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, லிபியா, சூடான், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பறந்து விரிந்து கிடக்கிறது இஸ்லாமியர்களுக்கான நிலம். முக்கியமாக பாலத்தீன அரபு-முஸ்லிம்களின் பூர்வீக நிலம் சிரியா, ஈராக், ஜோர்டான், அரேபியா பகுதிகள். பாலஸ்தீனியர்கள் வீம்புக்காககவும், அல்-அக்ஸா மசூதிக்காகவும் மிகச் சிறிய நிலப்பரப்பை சொந்தம் கொண்டாடி யூதர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். மற்ற முஸ்லீம் நாடுகள் இஸ்லாமிய ஆதிக்க மற்றும் யூத, கிறிஸ்தவ எதிர்ப்பு மனோபாவத்துடன் பாலஸ்தீனியர்களை தூண்டிவிட்டு, ஆதரித்து வருகின்றனர்.

 • DuraiRaj - Chennai,இந்தியா

  ஜெருசலம் விஷயத்தில் மட்டும் பாலஸ்தீனத்திற்காக வரிந்து கட்டும் தீவிரவாத குழுக்கள், அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகள் ... சிரியா அகதிகள் இருக்க இடம் தேடி அலைந்தபோது அல்கொய்தாவும் அரபு நாடுகளும், வாயை மூடிக் கொண்டுதானே இருந்தார்கள். அரபு நாடுகளும் , உலக நாடுகளும் எத்தனை அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்?. சிறுவன் அய்லான் மரணத்துக்கு பிறகு கூட அரபு நாடுகளோ இஸ்லாமிய நாடுகளோ அகதிகளை கண்டுகொள்ளவில்லையே? அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது மேற்கத்திய நாடுகள்தான். இப்போ இடம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு ஒருவரும் தயாரில்லை ஆனால் கடந்த காலத்தில் உள்ள ஜெருசலத்திற்கு மட்டும் வரலாறு, கதை, நியாயம் என்று முழங்குகிறர்கள்.

 • hasan - tamilnadu,இந்தியா

  வாடிகன் போன்று ஜெருசலேத்தை தனி நாடாக அறிவித்து அங்கு மும்மதத்தினரும் வந்து செல்லும் வண்ணம் அனுமதியளிக்கலாம் , யுக முடிவு காலம் வரை ஜெருசலேத்திற்கு தீர்வு கிடையாது

 • jagan - Chennai,இந்தியா

  அமெரிக்க எண்ணெய் எடுக்க பிராக்கிங் (hydraulic fracking ) முறை கண்டு பிடிச்சு எண்ணெய் உறிஞ்சி எடுக்கிறான்...நம்ம நாட்டில் வெய்யில் காயுது அதை வைத்து இந்நேரம் முக்காவாசி கரண்ட் உற்பத்தி செஞ்சிருக்கணும்...சூரிய மின் உற்பத்தி தொழில் இருந்தா, நம்ம ஆளுங்க ஒட்டகம் மேய்க்க அரபி நாட்டு பக்கம் போக வேண்டி இருக்காது..... இன்னும் டெஸ்லா பேட்டரி செய்வானா ? சப்பான் காரன் பேட்டரி செய்வானா என்று தொங்குகிறோம்....பேட்டரி ஆராய்ச்சி செய்ய கூடவா முடியாது ? (ஒடனே அரசியல்வாதி காங்கிரஸ் என்று புலம்ப வேண்டாம்... தனியார் செஞ்சிருக்கலாம் )...இவ்ளோனாள் தனியார் தான் மோட்டார் பைக் செய்யுறாங்க ஆனா பேட்டரியில் ஓடும் பைக் 10 அல்லது 15 வருஷம் முன்னாடியே செஞ்சிருக்கணும்...நம்ம ஆளுங்க ரொம்ப தண்டம், இந்த லட்சணத்தில் சமச் சீரழிவு கல்வி என்று தரம் வேறு போகிறது , இதில் இட ஒதுக்கீடு வேற.....

 • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  உலகிலேயே மிகவும் அதீத முக்கியத்துவம் வாய்ந்த புண்ணியஸ்தலம் ஜெருசலேம். ஆபிரஹாம் காலத்திலிருந்து இது புனிதமாக கருதப் படுகிறது என்றாலும் உலகின் முதல் ஜீவராசியும் மனிதனும் தோன்றியது இங்குதான். உலகிலேயே இரண்டு மதங்கள் மிகவும் பழமையானவை ஒன்று இந்து மதம் மற்றொன்று யூத மதம் என்று கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கூறி இருக்கிறார். எந்த மதத்திற்கும் ஒரு ஆதி காலம் உண்டு. இந்து மதத்திற்கு அது தோன்றிய காலம் தெரியாது என்றும் அதுவே உலகின் முதல் மதம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது தோன்றியது நதிகளின் புனிதத்தில். நாகரீகமிக்கவர்களாக வேதகாலத்திலிருந்து இருந்ததற்கு காரணம் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது. வாழ்வதற்கான அருமையான சூழல் உள்ள மண்ணின் ஸ்வர்கத்தில். அனால் ஆபிரகாமின் மதங்களோ மிகவும் கடும் குளிர் வெயில் வாட்டி வதைக்கும் பாலை வனமும் சிலநேரங்களில் சோலைவனங்களாகவும் இருந்த பூமியில். DEAD SEA, RED SEA அங்குதான் அருகில். உலகின் பாதிக்கும் மேலானவர்கள் ஆபிரஹாமியர்கள் தான். ஜெருசலேம் முக்கிய மூன்று மதத்தினர்களுக்கு புனித தலம். கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள். கூடவே ஆர்மேனியர்களுக்கும். யூதர்களும் முஸ்லீம் மதத்தினரும் அந்த இடத்திற்கு மொத்த உரிமை கொண்டாடுகிறார்கள். ஒரே தந்தையின் குழந்தைகளாக அவர்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை என்பது வருத்தம் தான். உலகின் அதிகமுறை தாக்குதலுக்கு ஆளான இடமும் எருசலேம் தான். அம்பதுக்கும் அதிகமான முறைகள், மேலும் அந்த இடம் நாற்பதுக்கும் மேற்பட்ட முறைகளில் ஆட்சி முறை மாறி இருக்கிறது. இன்று ஐருப்பது இஸ்ரேலின் வசத்தில் தான். அதை உலக நாடுகள் யாரும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் அதை தான் ஏற்றிருக்கிறார்கள். கூகிள் மேப்பில் கூட அது இஸ்ரேலின் பகுதி என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனர்கள் வெஸ்ட் பேங்க் பகுதியில் ஒதுங்கி விட்டார்கள். அவர்கள் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் கிழக்கு ஜெருசலேம் பகுதியான பண்டைய ஜெருசலேம் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரேலோ மொத்த ஜெருசலேமையும் தனதாக்கி கொண்டது. அத்துடன் இல்லாமல் தங்களது தலைநகரை டெல் அவிவ் இடத்திலிருந்து ஜெருசலேத்திற்கு மாற்றி அம்பது வருடங்கள் ஆகின்றன. அங்கிருந்து தான் அவர்கள் ஆட்சி செய்கிறார்கள் அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களும் ஜெருசலேமிலேயே இருக்கின்றன என்று அனைவருக்குமே தெரியும். டெல் அவிவ் இல் உலக நாடுகளின் தூதரகங்கள் அனைத்தும் இருந்து கொண்டு இன்றும் அது தான் அவர்களின் தலை நகரம் ஆகையால் நாங்கள் அங்கு எங்களது தூதரகத்தை வைத்திருக்கிறோம் என்று சொல்கின்ற வழக்கம் இருக்கிறது. அம்பது வருடகாலங்களா ஒரு நாட்டின் தலைநகரை ஏற்காமல் அந்த தேசத்தின் வேறொரு பகுதியை தலைநகர் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் பகுதி தங்களின் எதிர்காலத்தில் என்றோ அமைய இருக்கும் தேசத்தின் தலைநகர் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களால் அரசியல் ராணுவ ரீதியாக சாதிக்க முடியாமல் போனதாம். எகிப்தியர்கள் என்றோ அதன் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டார்கள், ஜோர்டான் மிக சில காலமே ஜெருசலேத்தை கைப்பற்றி அதை வெறும் ஆறே நாள் யுத்தத்தில் இஸ்ரேலிடம் இழந்து விட்டது. கிறிஸ்துவர்களும், அர்மேனியர்களும் பிரச்சினை செய்யவில்லை. கிறிஸ்துவர்களுக்கு அது மிகவும் முக்கியமான பகுதி. ஜோர்டானும் ஜெருசலேமும் அவர்களின் புண்ணிய தலங்கள். ஜோர்டானில் கிறிஸ்துவ முஸ்லிம்கள் யாதொரு சச்சரவும் இன்றி அமைதியாக அன்பாகத்தான் வாழ்கிறார்கள். யூதர்களை பாலஸ்தீனியர்களுக்கும், மொத்த முஸ்லீம் இனத்தவருக்கும் பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் அரேபியர்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துவரவில்லை என்றுதான் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஹிட்லர் யூதர்களை மொத்தமாக கொன்று குவித்ததும், அவர்கள் தங்களுக்கு என்று தேசமே இல்லாமல் உலகம் முழுதும் ஓடி ஒளிந்து அகதிகளாக தஞ்சம் நாடி வாழ்ந்ததும், உலகின் அதிக புத்திசாலிகளாக அவர்களால் அணுகுண்டு தயாரிக்க பட்டு அதன் மூலம் அமெரிக்கா இரண்டாம் உலக போரில் கோலோச்சியதும் அமெரிக்காவில் நிரந்தரமாக ஏராளமான யூதர்கள் இருப்பதும் அவர்கள் அங்கிருந்து தங்களுக்கென்று ஒரு ராஜ்யத்தை பூர்வீக நிலத்தை மீட்டதும், அதை யாருமே வெற்றி பெறமுடியாத அளவிற்கு மாற்றி கொண்டதும் வரலாறு. பிரச்சினைக்குரிய இடம் என்றால் அது நமது அண்ணா பல்கலையின் மொத்த இடத்தையும் விட பாதிதான் இருக்கும். அந்த பகுதிக்குத்தான் பெரியளவில் பிரச்சினை. அங்குதான் மூன்று மதத்தினரின் முக்கிய புனித நிகழ்வுகளும். கிறிஸ்துவின் அவதாரம், நபியின் வானுலகு நோக்கி இறைவனை அடைந்ததும் அவருடன் பேசியதும், அப்ரஹாமின் பிறந்த இடமும் என்று அனைவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வெறும் ஒரு சதுர கி மீ குள்ளே அடக்கம். கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் போன்ற இடங்களும் அவர்களின் சீடர்களின் இடங்களுமாக புண்ணியத்தலங்கள் இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு மெக்கா மதினா இருக்கிறது, யூதர்களுக்கு ஜெருசலேம் விட்டால் வேறு இடம் இல்லை ஆகையால் அது எங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள். மேலும் கிறிஸ்து அவதரிப்பதற்கு ஏழு நூற்றாண்டிற்கு முன்னரே இவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதை விட முக்கியமாக கற்காலம், வெண்கல காலம் பொற்காலம் தொட்டு இன்றைய கம்பியூட்டர் காலம் வரை ஜெருசலேம் பிரமிப்பான பிரமாண்டமான இடமாக இருக்கிறது. இன்றைய நவீன ஜெருசலேத்தை நிர்மாணித்தவர்கள் இஸ்ரேலியர்கள். அரை கோடி யூதர்களும், முப்பது லட்சம் பாலஸ்தீனியர்களும் ange இருக்கிறார்கள். சில ஆயிரம் கிறிஸ்துவர்கள் தான் இருக்கிறார்கள். நீண்ட காலமாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகர் என்று எந்த தேசமும் சொல்லவில்லை. அதை இஸ்ரேலின் ஒரு நகரமாக கூட சொல்லவில்லை. அது இஸ்ரேலியர்களால் அபகரிக்கப் பட்ட பகுதி என்று சொல்லப்பட்டு, பின்னாளில் இஸ்ரேலியர்களால் வென்றெடுக்கப்பட்ட பகுதி மேற்கு ஜெருசலேம் என்று ஏற்கப்பட்டு, கிழக்கு ஜெருசலேம் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் பகுதி என்று ஏற்று கொண்டிருக்கிறார்கள். ஒரு சதுர கி மீ பகுதியை தரமுடியாது அது எங்களுடன் ஒன்றிணைந்த பகுதி என்று கூறி லட்சக்கணக்கில் ஜெருசலேம் முழுதும் காஸ்மீரில் முஸ்லீம்களை குடியமர்த்தி பண்டிட்களை வெளியேற்றி விட்டது போல, யூதர்களை குடியமர்த்தி விட்டார்கள். தமிழக பகுதியில் சிங்கள குடியிருப்பு போல. ஆகிவிட்டது. அமெரிக்க அதிபர் என்றோ முஸ்லீம் மதத்தினருக்கு எதிரான கருத்துக்களை தான் தேர்தலின் போதே சொல்லிவந்தார். அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவேன் என்று எல்லாம் சொல்லிவந்தார். இன்று அவர்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதாவது எத்துணை காலம் தான் தான் ஜெருசலேத்தை கிழக்கு பகுதியானது முற்றிலும் அழிந்து கலிங்கம் போல காணப்படும் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தம் என்று சொல்வது. அதை வெற்றி பெற்றவர்களின் பகுதியாக ஏற்பது என்றும் பின்னாளில் அதை மெதுவாக மும்மதத்தினரும் அவர்களின் புண்ணிய தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வதற்கு இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரித்து அவர்களை அனுமதிக்க செய்வது என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. சர்வதேச மக்களும் வந்து செல்லும் ஒரு இடமாக, இஸ்ரேலின் பகுதியாக அது இருக்கட்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. வேறு என்ன தீர்மானம் எடுக்க முடியும். வெற்றி பெற்றவர்கள் சொல்வதை தோற்றவர்கள் ஏற்கவேண்டும். பின்னாளில் அவர்கள் தங்களை வலிமை படுத்தி கொண்டு தங்கள் கோரிக்கைகளை குறிக்கோளை அடைய முயலவேண்டும். ஜப்பானை, ஜெர்மனியை, கொரியாவை உலகப்போரில் வென்ற பிறகு இரு வல்லரசுகளும் தங்களுக்குள் வைத்து கொள்ளவில்லையா? என்று சிந்திக்கிறார்கள் அவர்கள் என்று தெரிகிறது. பாலஸ்தீனியர்களுக்காக இன்று யாரும் பெரியளவில் ஆதரவிற்கு வருவதாகவோ அல்லது அமெரிக்காவின் தீர்மானத்தை வன்மையாக கண்டிப்பதார்களோ தெரியவில்லை. பெயரளவிற்கு அவர்கள் மிகவும் மெலிதாக இதனால் அந்த பகுதியில் அமைதிக்கு குந்தகம் வர வாய்ப்பிருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு இருக்கிறார்கள். பலர் மெதுவாக ஜோர்டான் மன்னர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறார்கள். ஜெருசலேமில் வாழும் முப்பது லட்சம் பாலஸ்தீனியர்கள் சிறிய பிரச்சினைகளை லாரி டயரை கொளுத்துவது, உருவ பொம்மை எரிப்பது என்று கொஞ்ச நாளைக்கு போராடுவார்கள் என்று சொல்கிறார்கள், அவர்களை ரப்பெர் குண்டுகள், தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கட்டுப்படுத்துவது என்று இஸ்ரேல் அரசு முயன்று கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று சொல்கிறார்கள். காஸா பகுதியில் இருப்பவர்கள் வேறு வலி இல்லாததால் இஸ்ரேலுடன் சமாதானத்திற்கு விட்டு கொடுத்து செல்வது நல்லது என்றும் சொல்கிறார்கள். முதலில் அவர்கள் தங்களை வளப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் பக்கம் இருக்கும் தேசத்தை வலிமையாக்க வேண்டும். எத்துணை காலம் தான் அவர்கள் எகிப்திய அரசின் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். சவூதி போன்ற தேசத்தில் அந்நியர்களாக வேலைக்கு செல்வார்கள். அங்கும் இன்றோ முழுதும் சவுதியர்கள் மட்டுமே இருக்கும் தேசம் என்று வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதிலிருந்து அனைவரையும் நிறுத்தி வெளியேறுகிறார்கள். தினமும் ஆறுமணிநேரமே மின்சாரம், இரண்டும் மணிநேரம் மட்டுமே இன்டர்நெட் என்று இருக்கிறது பாலஸ்தீனிய காசா பகுதி. வருடத்தில் ஒரே ஒருமாதம் மட்டுமே எகிப்து வழியாக பாலஸ்தீனர்களால் அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும். மற்ற காலங்களில் எல்லை அடைக்க பட்டிருக்கிறது என்பது தானே நிஜம். போரால் ஏவுகணை தாக்குதலால் சின்னாபின்னமாகி கிடக்கிறது தேசம். முதலில் அதை நிர்மாணிக்கவேண்டும். அதற்கு இவர்கள் விட்டு கொடுத்து விட்டு செல்லத்தான் வேண்டும். ஜெருசலேம் அல்ல இப்போதைய உடனடி நோக்கம். கையில் இருக்கும் நிலப்பகுதியை வாழ்வதற்கு உரிய பூமியாக மாற்றவேண்டும். மொத்த அரபு தேசத்தினரிடமும் ஆதரவு பெற்று அதை நிர்மாணிக்கவேண்டும். வெளிநாடுகளில் சரியான வேலையும் இல்லாமல் நாட்டிற்கு திரும்பினால் அங்கு வாழ்வதற்கு உத்திரவாதமும் இல்லாமல் வயதான தாய் தந்தையர்கள் பாலஸ்தீனத்திலும், அவர்கள் குழந்தைகள் அரபு தசீதில் சிறிய வேலைகள் செய்து கொண்டு பெற்றோர்களை பார்க்க முடியுமோ இல்லையோ என்று எத்துணை காலம் தான் கடத்தி கொண்டிருப்பார்கள். புனித மாதத்தில் மட்டுமே எகிப்திய எல்லைகள் பாலஸ்தீனிய எல்லைகள் பாலஸ்தீனர்களுக்கு திறக்கப்டும் நிலையை மாற்றவேண்டாமா அவர்கள். எதார்த்தங்களை ஏற்கவேண்டும். உலகின் சக்தி வாய்ந்த பிரிட்டிஷாரை நம்மால் எதிரிக்கவா முடிந்தது அன்று. ஆகையால் தானே அஹிம்சா என்ற சத்தியாகிரகம் என்ற புதிய ஆயுதத்தை, பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்கவே முடியாத நினைத்து பார்க்கவே முடியாத ஆயுதத்தை எடுத்து மெதுவாக வெற்றி பெற்று இன்று அவர்களின் ராணுவ பலத்தை விட நான்கு மடங்கு நாம் உயர்ந்து இருக்கவில்லையா. ஆயுதம் தாங்கி இருந்தால் வென்றிருக்கமுடியுமா? அமைதி மார்க்கத்தில் அமைதியாகத்தான் யோசிக்கவேண்டும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  டிரம்ப் சார் அந்த ஹெச் 1 பி விசா வையும் தடை செய்யுங்க சார் எங்க ஊர்ல அமெரிக்க ரிட்டர்ன்னு சொல்லி அவங்க பண்ணுற அதகளம் அலப்பறை அமர்க்களத்தை தாங்க முடியில

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அரபிகள் ஏற்கனவே எண்ணெய் விலை வீழ்ச்சியில் வாங்கிய அடியில் மிரண்டு போய் இருக்கிறார்கள்... அமெரிக்கா வேறு எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்து இருக்கிறது... தீவிரவாதம் செய்ய பணம் இல்லாமல் போகும்...

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நாம் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை இதுதான், அமெரிக்காவை / டிரம்பை எந்த தீவிரவாத இயக்கமும் ஒன்றும் செய்ய இயலாது அவர்கள் இருக்கும் இடம் அப்படி. அண்டை நாடு மெக்ஸிகோ, கனடாவுடன் நல்ல உறவில் உள்ளனர் (நமக்கும் இருக்கிறதே பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா என்று). வேண்டுமென்றால் கியூபாவில் இருந்து தாக்கலாம், கன்வென்ஷனல் யுத்தத்தில் அவர்களை வெல்ல முடியாது. இரட்டை கோபுரம் தகர்ப்பிற்கு பிறகு அவர்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். ஒசாமா என்று சிறு குழந்தைக்கு பெயர் இருந்தால் விமானத்தில் பறக்க தடை. எச்சரிக்கை வேண்டுமானால் விட்டுக்கொண்டு இருக்கலாம் ஆனால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement