Advertisement

'தொப்பி' போனாலும் தினகரன் 'அமோகம்'

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு, 'தொப்பி' கிடைக்காத நிலையில், அவரது ஆதரவு கும்பல், தெருவுக்கு தெரு, பணம் பட்டுவாடா செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. அப்போது, அ.தி.மு.க., பிளவால், சசிகலா அணி சார்பில் போட்டிட்ட, தினகரனுக்கு, 'தொப்பி' சின்னம் கிடைத்தது. இந்த தொகுதியில், வரும், 21ல், இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை, அ.தி.மு.க., அணிகள் இணைந்த நிலையில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மீண்டும் தொப்பி சின்னம் கோரினார். ஆனால், 'பிரஷர் குக்கர்' சின்னமே கிடைத்தது.

தொப்பி போனாலும், தொடர்ந்து, 'கெத்து' காட்டி வரும் தினகரன் தரப்பினர், முன் போல், தெருத்தெருவாக பணத்தை வாரி வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் குவிந்துள்ள பிற மாவட்ட ஆட்கள், தண்டையார்பேட்டை பகுதிகளில், வீடு வீடாக சென்றனர்.ஓட்டுக்களை உறுதி படுத்தும் வகையில், வாக்காளர் அட்டை நகல், அவர்களின் மொபைல் போன் எண்களையும் பெற்றனர்.

'மொபைல் போனில் அழைப்பு வரும்; சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள்' எனக்கூறி செல்கின்றனர். இதனால், இந்த முறை, 2 கிராம் தங்கம் கிடைக்குமா, பணம் கிடைக்குமா என, தெரியாமல், வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

'தொப்பி' பறிபோனது ஏன்?கடந்த முறை அறிவிக்கப்பட்ட தேர்தலின்போது, 'தொப்பி' சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்ததால் அந்த சின்னம் மக்களிடம் பிரபலமானது. இதனால், 29 சுயேச்சைகள் தொப்பி சின்னத்தை பெற முட்டி மோதினர்.

தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற கட்சிகளான, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி இருவரும் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். விதிமுறைப்படி பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களுக்குத்தான் சின்னத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி ரமேஷ், ரவி இருவரும், தொப்பி சின்னம் கேட்டதால் குலுக்கல் நடந்தது. இதில் ரமேஷிற்கு தொப்பி சின்னம் கிடைத்தது.

தொப்பி சின்னத்திற்கு அடுத்ததாக, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய சின்னங்களை ஒதுக்க தினகரன் கோரியிருந்தார்.அவற்றையும் வேறு வேட்பாளர்கள், தட்டிச் சென்றனர். இறுதியாக தினகரனுக்கு, 'பிரஷர் குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

இது குறித்து தினகரன் கூறுகையில், ''நான் ஏற்கனவே, 'எந்த சின்னம் கொடுத்தாலும் நிற்பேன்' என கூறியிருந்தேன். வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பதுபோல், என் எதிரிகளையும், துரோகிகளையும், 'பிளட் பிரஷர்' ஏற்ற, 'பிரஷர் குக்கர்' சின்னத்தில் நிற்கிறேன்,'' என்றார்.

'ஓட்டுகளை பிரிப்போம்''தொப்பி' சின்னம் பெற்ற, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ் கூறுகையில், ''நாங்கள் யாரையும் போட்டியாளராக நினைக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால், ஓட்டுகளை பிரிப்போம்; இது, தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (73)

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  ஆசைப்பட்டது கிடைக்க வில்லை என்றால் என்ன...கிடைத்ததை வைத்து முயற்சிக்க வேண்டியதுதான்...எனக்கு தெரிந்த வரையில் தி.மு.க வெற்றி பெரும்...

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  சமையல்காரன் போலவே உள்ளது

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  IT ரைடுஎன்ற சின்னம் இருந்தால் இவனுக்கு கொடுக்கலாம்

 • jagan - Chennai,இந்தியா

  குக்கர் இங்கிலீஸ் வார்த்தையே , எப்பிடி தமிழில் சின்னத்தை சொல்வார்?

 • jagan - Chennai,இந்தியா

  சூட்கேஸ் சின்னம் யாருக்கும் இல்லையா?

 • Jeeva - virudhunagar,இந்தியா

  COOKER LA VARUM UNAKU SATHAAM NEE VENAM ENGALUKKU NITHAM

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எந்த சின்னம் கொடுத்தாலும் அந்த பொருளை வாங்கி மக்களிடம் சேர்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு கார் , மோட்டார் சைக்கிள் சின்னம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

 • Prem - chennai,இந்தியா

  TTV endha chinnathula pottiyittalum avaruku tholvi mattum than minjum

 • RENETO - Chennai,இந்தியா

  TTV enna saeithalum tholvi 100% confirm

 • Sarathi_Ganesh - Delhi,இந்தியா

  intha TTV kosu tholla thaanga mudila...

 • malar - chennai,இந்தியா

  ஒரு மாயை யில் இருக்கும் வாழும் சசிகலா தினகரன் கும்பல் அதிலிருந்து மீளவே இல்லை என்று தெரிகிறது...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  காசு கொடுக்க முடியாது ஆகவே எல்லோருக்கும் ஒரு 10 லிட்டர் மற்றும் 5 லிட்டர் குக்கர் மற்றும் 2 லிட்டர் குக்கர் இலவசமாக தந்து புது விதமான முறையில் ஓட்டு சேகரிக்கலாம் என்று டீ.டீ.வி. தினகரனுக்கு சொல்லலாமே. வோட்டளிப்பவர்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்குமே அப்போது தினகரனைக் குறித்து.

 • Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா

  அ தி மு கவைவிட அதிக ஓட்டு வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை

 • Jagadeesan Vaidyanathan - chennai,இந்தியா

  மிஸ்டர்.பாலகிருஷ்ணன்:ஸ்டாலின் ரொம்ப நல்லவரு. பணமே செலவழிக்க மாட்டாரு. உத்தமரு. அவருடைய வேட்பாளரு கூட கடன்ல இருக்கிறதா எலேக்சன் கமிஷனிடம் ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார். இப்படி இருந்தா எப்படி ஜெயிக்கிறது. அப்பா ஐடியா கொடுப்பாரு. இவ்வளவு ஊழல் செஞ்சும் மாடிக்காதவாறு. எந்த விதத்தில் மக்களை வசீகரிக்கலாம் என்பதை அறிந்தவரு. சற்று பொறுங்கள். பணமா பொருளா என்பது தெரியும்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஒரு ஐந்து லிட்டர் அலுமினிய குக்கரின் விலை கிட்டத்தட்ட ஐந்து நூறு ரூபாய் . அதுவே காப்பர் பாட்டமாக இருந்தால் கிட்டத்தட்ட ஆயிரத்து இரண்டுநூறு ரூபாய். இதில் எந்த குக்கரை மக்களுக்கு மாதிரியாக தரப்போகிறார் ? செலவில்லாமல் தொப்பியை காண்பித்து மக்களுக்கு குல்லா போட நினைத்தார். தேர்தல் கமிஷன் இவருக்கு செலவை இழுத்துவிட்டது.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  தேர்தலுக்கு முன்னாலேயே இவன் உள்ளே போய்விடுவான்

 • Paran Nathan - Edmonton,கனடா

  வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம். இந்த தேர்தலில் நிரூபணமாகப் போகின்றது. ஊடகங்கள் எவ்வளவுதான் அலறினாலும், சமூகவலைத்தளங்கள் எப்படித்தான் செய்திகளை திரித்துக் கூறினாலும் அதனை நம்பும் மக்கள் தமிழ்நாட்டில் 10 - 15% மானவர்களே. மக்கள் பணத்திற்கு விலைபோகின்றார்கள் மக்களைக் குறைகூறுவதை விடுத்து, மக்களிற்கு தேவையான அடிப்படை வசதிகளையேனும் செய்தால் நல்லது. தினகரன் மீது எல்லாவகையான ஆயுதங்களையும் ஏவிவிட்டு இன்றி நிராயுதபாணியாக நிற்கும் மத்திய, மாநில அரசுகளை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தினகரன் எளிதில் வெல்வார். இதுதான் அந்த மகேசனின் தீர்ப்பு.

 • balasubramanian - coimbatore,இந்தியா

  கில்லாடி தினகரன் .பணம் பத்தும் செய்யும் ..உண்மை தான் ....ஆனால் RK நகரில் பணம் மட்டுமே பத்தும் செய்து விடும் என்று சொல்ல முடியாது .

 • Brijesh - Chennai,இந்தியா

  ஆளுபவர்களின் கண்டைனர் ஐ விட தினகரனே மேல்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே தான் திருட்டு புரட்டு கரன் புகுந்து விளையாடுகிறான்.. காரணம், தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதே அவனது விருப்பம்... கொள்ளை காசு லட்சம் கோடிகள் என்ற அளவில் இருப்பதால் அதில் கொஞ்சூண்டு எடுத்து செலவு செய்கிறான் இந்த திருடன்....தேர்தல் ரத்தாக வேண்டும் என்பதே அவனது விருப்பம்...

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஆர் கே நகர் தொகுதி மக்களுக்கு வீட்டுக்கு ஒரு இலவச குக்கர் கிடைக்கும். வாழ்க தேர்தல் ஆணையம்.

 • christ - chennai,இந்தியா

  பணத்தை வாரி இறைத்து அனைவரையும் விலைக்கு வாங்க நினைக்கும் இவனை எப்படி தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது ? இந்த குக்கர் எப்போ வெடித்து சின்னாபின்னம் ஆகப்போகுதோ ?

 • k.shanmugasundaram - trichy,இந்தியா

  எவ்வளவு அடிச்சாலும் இவர் தாங்கிறார். இவர் ரொம்ப நல்லவர் ஐயா.

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  People must change their attitude,they must feel cash for vote is spoiling democracy.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அ.தி.மு.கவும் தினகரனும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்துவருவதாக கேள்வி, இருவரிடமும் கொள்ளை அடித்த பணம் குவிஞ்சி கிடக்குது, ஒரு சாதாரண பொதுக்கூட்டத்துக்கு ஆள் புடிக்கவே பணத்தை அள்ளி வீசும் ஆளும் கட்சி, இடைத்தேர்தல் என்கிறபோது, தங்களால் இயன்ற அளவிற்கு அள்ளி வீசுவார்கள், இது தான் சந்தர்ப்பம், மக்களுக்கு கொண்டாட்டம்

  • Vel - Chennai,இந்தியா

   திமுக என்ன பரதேசி கட்சியா. அவர்கள் செய்யும் அளப்பறையை தொகுதிக்குள் போய் பாருங்கள் கோயம்புத்தூராரே. தெருவில் இருக்கும் எல்லோருக்கும் ஊர்வலம் போக அழைத்துப்போய் 10 மணி முதல் 2 மணி வரை தொகுதி வலம் வர தினம் ஆளுக்கு 300 /- பணம், மதிய சாப்பாடை பிரியாணி தருகிறார்கள் ஆனால் வட்ட நிர்வாகி அதில் 100 தலா தனக்கு எடுத்து கொள்கிறார். குவாட்டர் கவனிப்பும் உண்டு. மக்களுக்கு கொண்டாட்டம் இல்லை போக்குவரத்து திண்டாட்டம் தான் இருக்கு. கொண்டாடுபவர்கள் யார் தெரியுமா திமுக நிர்வாகிகள், பிரியாணி, ஒயின்சாப் கடை ஊழியர்கள், தண்ணீர் பாக்கட், டீக்கடை மற்றும் பெட்ரோல் பங்க் வியாபாரிகள்தான்

  • Sathish - Coimbatore ,இந்தியா

   உங்களுக்கு கொஞ்சம் கொடுத்திருந்தா பேசாம இருந்திருப்பீங்க அப்படித்தானே சென்னைவாசிகளுக்கு கிடைக்கிறது கோவை வாசிகளுக்கு கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு தெரிகிறது. முக்கால்வாசி நாசமா போச்சு தமிழ்நாடு இனி மீதம் இருப்பதையும் விட்டுவைப்பானேன். அதையும் முடிச்சிடுங்க.

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஆர்.கெ நகர் தேர்தலில் தேர்தல் கமிஷன் எவ்வளவு பாது காப்பு கொடுத்திருந்தும் அதிலும் தினகரன் புகுந்து விளையாடுகிறார். வாக்காளர்களை வேறோர் இடத்திற்கு அழைத்து சவரன்களையும் ரொக்கத்தையும் குக்கர்களையும் வழங்குவதாக செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிப்பது குறித்து மகிழ்ச்சி. அவர் ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு பணத்தால் டாட்டா காட்டியவர். இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஆட்களால் தேர்தலை ஒழுங்காக நடத்த இயலாது. ஓட்டுரிமை நன்மை தீமைகள் எதிர் விளைவுகள் அறியாத பாமர ஏழை மக்களிடம் இருப்பதால் ஆட்சி கோறும் வேட்பாளர்கள் அவர்களிடமிருக்கும் பணத்தை வைத்து ஏழை மக்களின் வாக்குகளை பல வித குறுக்கு வழிகளில் சுலபமாக சுரண்டி விலைக்கு வாங்கி வெற்றி பெறுகிறார்கள். பின்னால் ஏழைகளிடம் விட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமாக ஆட்சி செல்வாக்கில் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. இதனால் நேரிடும் சிக்கல்களால் சில நேரங்களில் தேர்தல் ஆணையமும் அடிக்கடி தேர்தலை தள்ளிப் போடுகிறது. இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள ஏழை பணக்காரன் நல்லவன் கெட்டவன் படித்தவன் படிக்காதவன் மதத்தாலும் பணத்தாலும் அதிகாரத்தாலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற எவ்வகை பேதமின்றி அனைத்து தரப்பினரடங்கிய சர்வ சுதந்திரமுள்ள இந்திய நாட்டின் மக்களாட்சி உரிமை கேலிக்கூத்தாகி விட்டது. இதை மேலும் வளரவிட்டால் ஒரு கால கட்டத்தில் மகாத்மா காந்தி மூலம் கிடைத்த நாட்டின் இத்தகைய ஜன நாயக சுதந்திரம் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். இதற்கு மாற்று மருந்தே இல்லையா. இருக்கிறது. தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் கடந்த காலம் நிகழ்காலம் இனி வரும் எதிர் காலம் என்ற முக்கால செயல்பாடுகளை தேர்தலுக்கு முன் முழுமையாக ஆய்ந்து கடுமையாக தணிக்கை செய்யும் முறை பின் பற்றப்பட வேண்டும். எல்லொரும் நல்லவரல்ல. எல்லோரும் கெட்டவருமல்ல.

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  கடந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் 89 கோடி பணப்பட்டுவாடா குறித்து கிடைத்த ஆதாரம் காரணமாக தேர்தல் நின்று போனது. ஆனால் பணப்பட்டுவாடா ஆதாரத்தின் அடிப்படையிலான நபர்கள் மீது இன்றுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அவர்கள் அனைவரும் புனிதராக மாறி, மறுபடியும் தேர்தல் களத்திற்கு வந்து விட்டனர். இந்நிலையில் தமிழகத்தை சூறையாடி, கோடி கணக்கில் குவித்து வைத்துள்ளவர்கள் அச்சம் ஏதுமின்றி துணிந்து பணப்பட்டுவாடா செயல்களில் மீண்டும் ஈடுபடவே செய்வர். மக்களும் கிடைத்தவரை லாபம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.எனவே தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி முறை முற்றிலும் அழிந்து, பணநாயக ஆட்சி முறை தற்போது வேரூன்றி விட்டது என்பதை நடுநிலையாளர்கள் எவரும் மறுக்க இயலாது.

 • sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  தினகரன் ஒரு ஊழல்வாதி என்பது தெரிந்தும் ,eppadi இவருக்கு தேர்தலில் நிற்க வைத்தார்கள் ,enbadhu தெரியவில்லை

  • balakrishnan - coimbatore,இந்தியா

   சட்டப்படி அவர் மீது ஊழல் குற்றம் எதுவும் இல்லை,

  • நானும் தேச நேசன்தான் - chennai,இந்தியா

   அதிமுகவில் எல்லோரும் புத்தரின் சீடர்கள்...அப்படித்தானே ???

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

   இரண்டாமிடம் தினகரனுக்கு உறுதி..கடைசீ இரண்டு இடங்களுக்கத்தான் இப்போது போட்டி..அதிமுகவா..பிஜேபி யா என்பதுதான் அது...

  • Kailash - Chennai,இந்தியா

   OPS மற்றும் EPS என்ன உத்தமபுத்திரர்களா? போன முறை 89 கோடி பரிமாற்றம் நடந்ததே? பாஜ தயவில் இவர்கள் ஆட்சி நடக்கிறது.

  • Mariappa T - INDORE,இந்தியா

   ஜெயகாந்தன், மிகவும் சரியான கருத்து.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மோடியும் இங்குள்ள மூடிகளும் தினகரனுக்கு ஏனிந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   தினகரன் ஸ்டாலினின் ஐந்தாம் படை என்பதால்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தொப்பியைவிட குக்கரில் அதிக பணத்தை வைத்து பாதுகாப்பாக விநியோகிக்கிக்கலாம் திராவிஷம் வாழ்க

  • balakrishnan - coimbatore,இந்தியா

   எப்படியெல்லாம் பணம் கொடுக்கமுடியும், எப்படியெல்லாம் வழிகள் இருக்கு, எப்படியெல்லாம் தப்பிக்கலாம், எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்யமுடியும் எல்லாத்தயும் கற்றுக்கொடுக்கும் ஒரே ஸ்தாபனம் ....

  • vigneshh - chennau,இந்தியா

   தீய மு kaa

  • Shanu - Mumbai,இந்தியா

   பிஜேபி பழத்தில் பணத்தை வைத்து எப்படி கொடுக்கும் என்பதை தோசை நேசன் அறிவார்

 • Paranthaman - kadappa,இந்தியா

  கத்தி போய் வாலு வந்தது. டும் டும்.குக்கர் கம்பெனிகளுக்கு விற்பனை பெருகும். தினகரனுக்கு கமிஷன் கிடைக்கும்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஆர்.கே நகர் தொகுதியில் நேற்று முதல் நாள் முதல் பண பட்டுவாடா நடக்க ஆரம்பித்து உள்ளது..............மக்கள் மானம் கெட்டவர்களாக இருக்கும் வரை அவர்கள் அடிப்படை வசதிகளுக்காக அல்லாட வேண்டி தான் இருக்கும்.....அதிமுக திமுக ரெண்டுமே முப்பது வருடம் ஆண்டும் ஏன் இவர்கள் இன்னும் குடிக்க கூட தண்ணி இல்லாம அல்லாடறாங்க? சென்னை இப்படி மானம் கேட்டு கையேந்தி நிற்பதால் தான்..........எங்களுக்கு வசதியை செஞ்சு கொடு ஒட்டு போடறோம்னு உரிமையோடு கேக்காமல் , 500 கொடுக்கறியே இது நியாயமா ஐயாயிரம் கொடு என்று பிச்சை கார தனமாக வேட்பாளரிடம் சண்டை போடுகிறார்கள்......ஜெயிக்கறவன் ஏன் இவங்களுக்கு நல்லது செய்யணும்? அதன் பணம் கொடுத்தாச்சில்ல? அவன் தொகுதி நிதியை அட்டையை போட்டு தான் அந்த கடனை சரி கட்ட முடியும்.............

 • VOICE - CHENNAI,இந்தியா

  மத்திய மாநில அரசு சுயேச்சையாக நிற்கும் தினகரனுக்கு இவ்ளோ பயந்து மட்டும் இல்லாமல் ஒன் சைடு தேர்தல் கமிசன் வேலைக்கு ஆகாத விஷாலுக்கு கூட பயந்து வேட்புமனு தாக்கல் இவ்ளோ தில்லுமுல்லு செய்யம்போது இவர்கள் எப்படி நேர்மையாக தேர்தல் நடத்துவார்கள். பிஜேபி தற்போதைய ஆட்சியில் நீதிமன்றம் சட்டம் எல்லாம் வேஸ்ட் என்று புரிய வைத்து விட்டார்கள். மத்தியில் ஆட்சியில் இருப்போர் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பது உறுதி செய்த ஆட்சி இது. கொலிஜியம் தங்கள் கொடுக்கும் நபர்களை மத்திய அரசு நியமித்தல் பண்டமாற்று முறை போன்று அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு கொடுப்பதாக மக்கள் பலர் பேசி கொள்வதை கேட்கமுடிகிறது இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

 • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

  தொகுதி மக்கள் இவருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வழக்கம்போல "தொழிலதிபர்கள் கட்சியான பிஜேபி" ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு பண்ணி இவரது வெற்றியை தடுக்கலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   இவனுக்கு UK யிலும் பினாமி இருப்பதாக தொகுதி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். வருமான வரி சோதனை அங்கும் நடைபெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

  • shankarvelu - watford,யுனைடெட் கிங்டம்

   போராட்ட குணம் கொண்ட வீர தமிழன் TTV

 • chenthil kumar - Nagercoil,இந்தியா

  இது ஜெயிலில் சசிகலா ஸ்பெசல் சமையல் அறையில் பயன் படுத்திய குக்வெர் நினைவாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட சின்னம். வாக்காளர்கள் எதை நினைவில் கொள்ளவும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மானமுள்ள எவனும் இவருக்கு ஓட்டுப்போட மாட்டான்...

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அப்போ நிச்சயம் நெறைய அதிமுக ஓட்டு தினகரனுக்கு விழும்.

  • Kunjumani - Chennai.,இந்தியா

   காசிமணி சரி தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், சொரணை கெட்ட ஜென்மம் என்று தானை தலைவர் ஒரு முறை திருவாய் மலர்ந்து அருளினார் உங்கள் கூற்றுப்படி எல்லா தமிழனின் ஓட்டும் இவருக்கே. எனக்கு மாட்டு மூளை என்று சில வாசக நண்பர்கள் சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் எனக்கு வருத்தம் ஒன்று கிடையாது எனது கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். ஐந்தறிவுள்ள நான் இவருக்கு ஓட்டுப்போட மாட்டேன்.

  • Thirumalai Ayyathurai - chennai,இந்தியா

   ஆட்சி, அதிகாரத்துக்கு நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அந்த இரண்டு தகுதியைப் பெற்றிருப்பவரைத்தான் மக்கள் விரும்புவார்கள். இப்போது போட்டியிடும் வேட்பாளர்களில் அந்தத் தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒரே வேட்பாளர், தினகரன் மட்டுமே என்பதை மக்கள் விருப்பமாக இருக்கிறது. "போற்றுவார் போற்றலும் தாற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே" என்று சொல்லிய கண்ணனைப் போல் போர்க் களத்தில் நிற்கிறார் தினகரன். அநீதியைத் தோற்கடிக்க நீதியால்தான் முடியும், நீதியைப் பெற்றுத் தரும் துணிச்சல் தினகரனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இந்தத் தேர்தல் முடிவு அநீதியைக் கொன்று, நீதியை நிலை நாட்டும்..

  • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

   மோடி காலில் விழுந்து கிடைக்கும் அடிமைகளைவிட இந்த தில் தினகரன் மேல் என்று தொகுதியில் பேசிக்கொள்கிறார்கள், அதிமுகவில் பெரும்பாலோனோர் இவரையே ஆதரிக்கிறார்கள்

  • Kailash - Chennai,இந்தியா

   /Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்// வேறு யாருக்கு ஒட்டு போட வேண்டும்? உங்கள் பாஜ ஊழல் அரசுக்கு துணையாக இருக்கிறதே அது மட்டும் என்ன நேர்மையானதா? பல வழக்குகளை விட்டுவிட்டதே நண்பர்கள் என்ற காரணத்திலா? ரொம்ப ஜால்ரா அடிக்க வேண்டாம்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "உங்கள் பாஜ ஊழல் அரசுக்கு துணையாக இருக்கிறதே" - அரசுத்துறை வேகமாக செயல்படும் என்று எதிர்பார்ப்பது தவறு... யாரையும் இலவசத்துக்கு விட்டுவிட மாட்டார்கள்... வருமான வரித்துறை செயல்படுவதை நிறுத்தவில்லை... அதற்குள் ஊழலுக்கு ஆதரவு என்று குற்றம் சாட்டினால் என்ன செய்ய முடியும்...

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   அப்பிடியா, சொல்லவே இல்ல.

  • Malaichaaral - Ooty,இந்தியா

   கொலைகார மாபியா கும்பல் ஒழியவேண்டும்..

  • Kailash - Chennai,இந்தியா

   //Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்// எப்போது நடவடிக்கை எடுக்கும்? இருக்கும் வழக்குகளுக்கு தீர்ப்பு கொடுங்கள் பிறகு புதிதாக ரெய்டு செய்யலாம். ரெய்டு நடந்து கொண்டே இருந்தால் யார் வழக்கை நடத்துவது, விசாரிப்பது பிடித்து உள்ளே போடுவது, முறையற்ற சொத்துக்களை அரசு அபகரிப்பது? இப்போதே பாதி பேருக்கு 65 வயது நடக்கிறது...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  மூடி இல்லாத குக்கரை தலைல கமுத்துனா அதுவும் தொப்பி மாதிரிதான் இருக்கும் தினகரனுக்கு பாதி வெற்றி இப்பவே கிடைச்சுருச்சு

  • Kunjumani - Chennai.,இந்தியா

   மீதி வெற்றி கிடைக்க சிவகங்கை சீமானிடம் பாடம் பயிலவும். அவருக்குதான் தோல்வியை வெற்றியாகும் சிதம்பர ரகசியம் தெரியும். சார் சொன்ன மாதிரி உங்களுக்கு பாதி வெற்றி கிடைத்திருப்பதால் நீங்கள் எம் எல் ஏ ஆவது உறுதி.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   சரி அது வேகரத்துக்கு எதனை விசில் வரணுன்னு சொல்லவே இல்லியே?

  • R dhas - Bangalore,இந்தியா

   ஹா ஹா ஹா .... கும்புடுறேன் சாமி எப்படி இப்படியொல்லாம் யோசிக்குறிங்க....

  • TechT - Bangalore,இந்தியா

   கும்புடுறேன் சாமீ , உங்களுக்கு நிஜமாகவே நல்ல மூளை, parallel thinking logic நன்றாக உள்ளது.

  • R dhas - Bangalore,இந்தியா

   ஹா ஹா ஹா .... கும்புடுறேன் சாமி எப்படி இப்படியொல்லாம் யோசிக்குறிங்க....அப்படியே தலை உள்ளே மாட்டிக்காம இருந்தா சரி...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பணம் கொடுக்கும் ஆட்களை எங்க ஊருக்கும் அனுப்புங்கப்பா. நாங்களும் தினகரனுக்கு வோட்டு போடுகிறோம் தோற்கும் போதே இவ்வளவு பணம் இறைத்தால், மன்னார்குடி மாபியா எவ்வளவு பணம் கொள்ளை அடித்து இருப்பார்கள்?

  • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

   ஒங்க ஊர்ல வாங்குனாலும் காப்பு கொடுத்தாலும் காப்பு. அது தெரியுமா ஐயர்?

 • Baskar - Paris,பிரான்ஸ்

  பருப்புக்கு ஏற்ற குக்கர். பருப்பு வேகுமா வேகாதா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். வரும் 19 தேதி சனிப்பெயர்ச்சி.அதற்கு முன்னரே நாஞ்சிலை காணோம்.புகழேந்தி மருத்துவமனையில்.இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ.எல்லாம் சசிக்கே வெளிச்சம்.

 • vns - Delhi,இந்தியா

  பெயரைப்படித்து வாக்களிக்க முடியாதவர்கள் வாக்களிக்க வேண்டாம். இந்த சின்னம் அடிப்படையான தேர்தல்கள் இந்தியாவின் அறியாமை பறை சாற்றுகின்றன.

 • Mariappa T - INDORE,இந்தியா

  வாழ்த்துக்கள் தினகரன் அவர்களே, நீங்கள் அதிமுக வோட்டை பாதியா பிரிக்க வேண்டும் அவைகளை தோற்கடிக்க எனது வாழ்த்துக்கல்.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

   சத்தியமா இதுதாங்க உண்மையா வாழ்த்து? சரி என் பங்கிற்கு நானும் அதையே வாழ்த்துகிறேன்?

  • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

   போங்கய்யா போங்க. அந்த ஆளு ஓட்டுவீட்டுல இருக்குற ஓட்டைக்கூட பாதியாகப் பிரிக்க முடியாது. மதுசூதனன் வெற்றி பெறுவார்.

  • periasamy - Doha,கத்தார்

   போட்டியே தினகரனுக்கும் மருத்துகணேஷ்க்கும் தான் மற்றவர்களுக்கு வைப்புத் தொகை கூட கிடைக்கப்போவதில்லை

  • Ms. Kothamali. - coimbatore,இந்தியா

   மது சூதனன் வெற்றி பெறுவது எதற்கு ? மீண்டும் இடை தேர்தல் வருவதற்கா? வயசான காலத்திலே ... போய் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க சார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement