Advertisement

தேர்தல் ரத்தாகலாம்: ஸ்டாலின் சந்தேகம்

சென்னை : ''சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, மீண்டும் ரத்து செய்ய வாய்ப்புள்ளது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.


கொளத்துாரில், ஸ்டாலின், நேற்று அளித்த பேட்டி: கடந்த முறை, தி.மு.க., வெற்றிப் பெற போகிறது என்பதால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா விவகாரத்தை, அடிப்படையாக வைத்து, ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தினர். இப்போதும், அதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய நிலை, இப்போதும் உருவாகியிருக்கிறது.


கவர்னர், திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார்; கன்னியாகுமரிக்கும் செல்கிறார். அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால், கவர்னர் ஆய்வு நடத்துவதற்கோ
அல்லது மாவட்டவாரியாக சென்று, மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ, அதிகாரமும், உரிமையும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி, உடனே பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையைக் கூட்டும் பணியை, கவர்னர் செய்தால், எல்லாரும் அவரை பாராட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.


கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
'மாவட்டங்களில், அரசு பணிகளை ஆய்வு செய்வதை, கவர்னர் கைவிடவில்லை என்றால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்திருப்பது, வெளிப்படையான அரசியல். 'அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்; வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்' என, வாக்குறுதி அளித்து, பதவியேற்ற கவர்னர், தற்போது, மத்திய அரசின் திட்டங்களுக்குத் துாதுவராக செயல்படுகிறார்.
கவர்னருக்குரிய வரம்புகளை, இன்னும், அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை, இது எடுத்துக்காட்டுகிறதா அல்லது எல்லை வரம்புகள் தெரிந்திருந்தும், தமிழகத்தில், பா.ஜ.,விற்கு நற்பெயரை திரட்ட வேண்டும் என, கருதுகிறாரா என்ற, கேள்வி எழுகிறது. மாவட்டங்களில், ஆய்வு செய்யும் அரசியல் பணியை, கவர்னர் உடனே கைவிட வேண்டும்.


இனிமேலும், மாநில சுயாட்சி கொள்கையையும், கூட்டாட்சி தத்துவத்தையும், வலுவிழக்க செய்ய முயன்றால், கவர்னர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்களில், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

  என்னையா இது அஷ்ட கோணத்தில் மூஞ்சி,

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  பணப்பட்டுவாடா அனைத்தும் முடிந்த பின்னர் தேர்தலை மீண்டும் ரத்து செய்ய வேண்டும்...மீண்டும் ஒருமுறை தேர்தல் அறிவிக்க பட்டு மீண்டும் முதலில் இருந்து நடத்த வேண்டும்...எத்தனை முறைதான் இவர்கள் பணம் பட்டுவாடா செயகிறார்கள் என்று பார்க்க வேண்டும்...கொள்ளையடித்த பணத்தையெல்லாம் இந்த மாதிரியான வழியிலாவது செலவு செய்ய வெளியே எடுக்க வைக்க வேண்டும்...

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  குடு குடு குடு குடு .... சன்குழுமத்தில் இருந்து 300 கோடி மாதாமாதம் 300 கோடி லவுடரோம் ....குடு குடு குடு குடு

 • skandh - chennai,இந்தியா

  மத்திய அரசு ஸ்வாட்ச் பாரத் வரியை விலக்கிக்கொண்டு. ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை மாவட்டமிருக்கிறதோ அத்தனை கவர்னரை போடட்டும். அந்த கவர்னர்கள் மாவட்டம் தோரும் சென்று துடைப்பத்தால் பெருக்குவார்கள் மக்களுக்கும் சிக்கனமாகும் உறும் சுத்தமாகும். பி ஜெபிக்காரர்களுக்கும் வேலை கிடைக்கும்.பி ஜெ பியின் திட்டங்களும் நிறைவேறும் நல்ல யோசனையா?

 • Jeeva - virudhunagar,இந்தியா

  unaku vera velaai illaiya ?

 • Prem - chennai,இந்தியா

  Neenga panra panapattuvada nalaiyae therdhal nikka vaaipu iruku

 • RENETO - Chennai,இந்தியா

  stalin yen ipdi payapaduraru... oru velai tholvi payathula ipdilam olaritte irukkuraro...????

 • Sarathi_Ganesh - Delhi,இந்தியா

  neenga epdiyum win panna maatttaga sudalin..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சுடாலினைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது, ஏதோ ஒரு உளறல் உளறவேண்டுமே என்று சொல்வது போல இருக்கின்றது இது.

 • Anand - chennai,இந்தியா

  தோல்வி உறுதி. ஆதலால் ஏதாவது செய்து தேர்தலை நிறுத்தவேண்டும் என்கிற தோனியில் பேசுகிறார். திருமங்கலம் பார்முலா இவர்களுக்கே வேட்டு வைக்கிறது, முன்வினை....................

 • S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா

  இது இவரது சந்தேகம் அல்ல. விருப்பம். காரணம் தோல்வி பயம்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  தேர்தலே உன்னுடைய குடும்பத்தை உள்ளே தள்ளத்தான் நடக்கிறது. அப்புறம் எங்கே அது நிற்கும். லகான் லகானி கையில்

 • Kabilan E - Chennai,இந்தியா

  தொடை நடுங்கி

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  எப்படித்தான் சீரியஸா முகத்தை வெச்சிட்டு காமெடி பன்றாரோ? இவர் பிள்ளை நடிக்கும் படங்களில் இவரையே காமெடியனாக போடலாம். வைகோ ஆதரவு தெரிவிப்பதால் ஜெயிச்சிடுவோம்னு கனா காண்கிறாரா?

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  ஆர் கே நகரில் அதிமுக வெற்றி பெற்று விட்டால் அது பன்னீர் செல்வம் பழனிச்சாமி இணைந்த இந்த அரசை மக்கள் அங்கிகரித்த மாதிரி ஆகிவிடும்.. எனவேதான் தேர்தல் ரத்து ஆகவேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார்..

 • Vel - Chennai,இந்தியா

  வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்' என, வாக்குறுதி அளித்து, பதவியேற்ற கவர்னர், - ஆமா கவர்னர் வெளிப்படையாக தானே ஆய்வு செய்கிறார். அதுலே இவருக்கென்ன பயம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, தீபாவளி விருந்தும், கொண்டாட்டங்களும், எந்த சின்ன பசங்களும், மாதாமாதம் எதிர்பார்த்தால், அது அப்படி எதிர்பார்க்கும், சின்ன பையன்களின் தவறுதானே?. (விழா என்றாலே சின்ன பசங்களுக்குதானே ரோம்ப மகிழ்ச்சியான விசயம்).

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  திமுக விற்க்கு தோல்வி பயமோ

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இவர் சொல்வது நடக்க வாய்ப்பு உள்ளது பண பட்டுவாடா கன ஜோராக நடக்கிறது தேறாத ஆணையம் கையை பிசைந்து நிக்கிறது யாராவது கோர்ட்டுக்கு போனால் தேர்தல் கோவிந்தா தான்

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  அது முடியாதது சங்கிலியை புடிச்சி ஆட்டுச்சாம்? அப்படி இல்ல இருக்கு?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  உண்மையை சொல்லனும்னா தேர்தல் நிக்கணும்கிறது தான் இவரோட ஆசை..ஏன்னா அலைக்கற்றை வழக்கில் உச்ச நீதி மன்ற தீர்ப்பில் கனிமொழி ராசா ஜெயிலுக்கு போக நேர்ந்தால் அது வாக்காளர்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கில் அதிமுகவை ஜெயிக்க வைத்து விடும்...இதனால் தேர்தல் தள்ளி போக வேண்டும் என்பது சுடாலின் ஆசை ..............

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தேர்தலை நிறுத்த ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறாரோ என்னவோ...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  எனக்கு என்ன பயம்ன்னா ஓபிஸ் நீதி கேக்குறேங்குற பேர்ல நிஜ பிணத்தை வீதி வீதியா இழுத்துட்டு போவாரோன்னுதான்

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  தோல்வி வெளியே வராமல் தெரிய இவர்களே கூட அதை நிறுத்தும் வகையில் ஏதேனும் செய்வார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.....

 • Mariappa T - INDORE,இந்தியா

  ஏன் நீங்கள் நிற்க வைத்த விஷால் தேர்தலில் இல்லை என்பதாலா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement