Advertisement

நாளை நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு... சோதனை! வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் தீவிர பிரசாரம்

நாடே எதிர்பார்க்கும், குஜராத் மாநில சட்டசபை தேர்தல், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலை, பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.


மஹாராஷ்டிராவில் இருந்து பிரிந்து, 1960ல், குஜராத் தோன்றியது முதல், காங்., வசம் இருந்த ஆட்சி பொறுப்பு, 1990ல் பறிபோனது; அப்போது, ஜனதா தளம் - பா.ஜ., இணைந்து ஆட்சி அமைத்தன. பின், 1995ல், பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல், 22 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும், பா.ஜ., முதல் முறையாக, கடும் நெருக்கடிக்கு இடையே தேர்தலை, நாளை சந்திக்கிறது.


கடும் நெருக்கடி:
கடந்த, 2001 முதல், பிரதமராக பதவியேற்ற, 2014 வரை, மூன்று சட்டசபை தேர்தல்களில், அங்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர் மோடி. அவர், பிரதமராக பதவியேற்ற பின், நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. அதனால், இதுவரை இல்லாத கடும் நெருக்கடி, மோடிக்கும், அவரது மூளையாகச் செயல்படும், அமித் ஷாவுக்கும் ஏற்பட்டுள்ளது.


தேர்தலின்போது வழக்க மாக ஆளுங்கட்சிக்கு எதிராக ஏற்படும் மனநிலை, அதுவும், 22 ஆண்டு கால ஆட்சி என்பதால்,
இங்கு, சற்று கூடுதலாகவே இருக்கக்கூடும். வணிகர்கள் அதிகம் நிரம்பிய மாநிலம் என்பதால், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., பிரச்னையில் அங்கு எதிர்ப்பலை ஏற்பட்டது. சூரத்தில் நடந்த, மாபெரும் போராட்டமே அதை உணர்த்தியது.


பா.ஜ.,வின் ஓட்டு வங்கியான, வணிகர்கள் நிரம்பிய, பதிதார் - படேல், உயர் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி உயர்த்தியவருமான, ஹர்திக் படேல், பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளார். ஆனந்தி பென் படேலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய கோபமும், அவர்களுக்கு உள்ளது.


இது போதாதென, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த, ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அல்பேஷ் தாகூர் ஆகியோரும், பா.ஜ.,வுக்கு கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர். ஹர்திக் உட்பட இவர்கள் மூவரும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்திருப்பது, பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மூவருடனும், ராகுல் கைகோர்த்துள்ளதால், பா.ஜ., வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. அகில இந்திய தலைவர் பொறுப்பு கிடைக்கவிருப்பதால், அதற்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க, தீவிரமாக களம் இறங்கி உள்ளார் ராகுல்.


அமித் ஷாவின் மகன், ஜெய் ஷாவின் சொத்து, பன்மடங்கு அதிகரித்தது தொடர்பான புகாரில் சிக்கியதும், பா.ஜ., வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், பண மதிப்பிழப்புக்கு பின் கிடைத்த உ.பி., தேர்தல் வெற்றி மற்றும் சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆகியவை, பா.ஜ.,வுக்கு ஆறுதல்.

உறுதி இல்லை:
கருத்துக் கணிப்புகள், பா.ஜ,,வுக்கு ஆதரவாக இருந்தாலும், முடிவு வரும் வரை, உறுதி இல்லை என்பதை பா.ஜ., உணர்ந்துள்ளது. மோடி என்னும் தனிமனிதர் செல்வாக்கு மற்றும் வளர்ச்சி என்னும் முழக்கம் ஆகிய இரு அம்சங்களை மட்டும் நம்பி, பா.ஜ., களம் இறங்கியுள்ளது. மோடி, வாரத்திற்கு மூன்று முறை, குஜராத் சென்று பிரசாரம் செய்தது, அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியை காட்டியது. குஜராத் தேர்தல் அறிவிப்பு தாமதம் ஆனது.

அதற்கு இடைப்பட்ட நேரத்தில், நர்மதா அணை திறப்பு, மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், விவசாயிகளுக்கு சலுகைகள் மற்றும் ஜி.எஸ்.டி.,யில், 178 பொருள் விலை குறைப்பு என மத்திய, மாநில பா.ஜ., அரசுகள், சலுகைகளை வாரி வழங்கியது. இது, பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட அச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


இது போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே, குஜராத் எனப்படும் நெருப்பாற்றை கடக்க வேண்டியுள்ளது. அதை கடந்தால் தான், அடுத்து வரும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்கள் மற்றும், 2019 லோக்சபா தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
படேல் ஓட்டுகள் பாதிக்குமா?
கேசுபாய் படேல், பா.ஜ.,வில் இருந்து விலகி, தனிக்கட்சி துவங்கிய போது, 2012ல், படேல் சமூகத்தினர் அவரை கைவிட்டனர். மின்சாரம், குடிநீர் கிடைக்காத ஊர்களுக்கு, அதை சாத்தியப் படுத்திய, பா.ஜ.,வை, படேல் சமூகத்தினர் மறக்கவில்லை. ஆனால், இப்போது, ஹர்திக் படேலுடன் கைகோர்த்துள்ள இளைஞர்கள், 1995க்குப் பின் பிறந்தவர்கள். அவர்களுக்கு, மின்சாரம், குடிநீர் வசதி பற்றிய பெரிய மனக்குறை இல்லை. அதனால், இம்முறை, படேல் சமூக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்குமா என்பதில் தெளிவில்லை.- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  நாளை நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு... சோதனை //////// சோதனை மோதிஜிக்கல்ல ... குஜராத் மக்களுக்கு தான் ... மாநிலத்தை இந்தியாவிலேயே நெ -1 ஆக மாற்றி அமைத்த பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்கிறார்களா ... இல்லை ., நன்றி மறந்து நயவஞ்சக கான் + கிராஸ் கும்பலுக்கு ஆதரவளிப்பார்களா .... என்று சத்தியசோதனை நடைபெற உள்ளது ... ஆனால் ., குஜாராத்தியர்கள் புத்திசாலிகள் ... தாமரையை மலரச்செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ... அவர்கள் ஒன்றும் வீணாய்போன ''டுமீளன்ஸ் '' அல்லவே ... ?

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  என் வேலை இங்கு என் கருத்துக்களை சொல்வதே. இத்தாலிய அடிமை அடிவருடிகளுக்கும், தீராவிடங்களுக்கும், வெள்ளை, பச்சை தேச துரோகிகளுக்கும் பதில் சொல்வதில்லை. சோதனைகளை சாதனையாக்கி எம் இந்திய மக்களின் வேதனை தீா்க்க வந்த ஒப்பற்ற தலைவன் திரு. மோடிஜி. பா.ஜ.க என்ற தேசபக்த இயக்கத்தின் வெற்றி பயணத்தை யாராலும் தடை செய்ய முடியாது, இத்தாலிய.அடிவருடிகள் குஜராத்தில் தோற்றதற்கான பொய் காரணங்களை இப்போதே தேடி வைத்துக்கொள்வது.நல்லது 19ம் தேதி உதவும். EVM காரணம் கேட்டு காது புளித்துவிட்டது.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடப்பாவமே கருத்துக்கணிப்புகள் டுபாக்கூர் என முழங்கி திரிந்தவர்கள் இப்போ அவைகளை துரத்துகிறார்கள்..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மரியப்ப, உன்னுடைய வாழ்த்துக்களை உன் தலைவனுக்கு சொல்லலாம். எங்கள் சார்பாக சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் எந்த காலத்திலும் இத்தாலிய வாரிசை ஆதரிக்கமாட்டோம்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  வளர்ச்சி வளர்ச்சி என்று கூவி நிலம் நீர் எல்லாம் கார்போரேட்டுகளிடம் கொடுத்துவிட்டு ,மோடி வோட்டுக் கேட்டால் மார்வாடிகள் ஓட்டுப்போட மறுக்கிறார்கள் . மோடியின் சாதனை குஜராத்திகளை குஜராத்தில் இருக்கவிடாமல் துரத்தி உலகம் எங்கும் மீட்டர் வட்டிக்கடைகள் பரவ விட்டது தான் . இதனால் இந்தியர்கள் கோபம் மோடி மீதுள்ளது கந்து வட்டி தேசத்தில் அறிமுகப்படுத்தியதற்காக ,மார்வாடிகளும் தங்களை துரத்திய மோடியை பழி வாங்க தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள் ,கைகளில் ஆப்புடன் .இருக்கும் நிலைய பார்த்தால் அப்பு சொருகி மோடி கொஞ்சம் முனகினாலும் முனகுவார் போலிருக்கு. ஒரு ஆபத்து விட்டு போடும் இயந்திரம் கைக்கு பொத்தான் அமுக்கினால் தாமரைக்கு போடும் விஞ்ஞான சாதனை பிஜேபி செய்திருந்தால் ?

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ஜிஎஸ்டி சுட்டதடா... "கை" வென்றதடா....புத்தி கெட்டதடா... ஆட்சி போனதடா....

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  எல்லாம் சரி பக்தால்ஸ் விடிஞ்சா குஜராத்தில் தேர்தல் ஆனால் இன்னும் உங்க பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடவிலையே ஏன் ? அக்கினி பகவான்களே உமது பதில்களை எதிர்பார்க்கிறேன்.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  இந்த குஜராத் தேர்தலிலும் மோடி கும்பல்தான் ஜெயிக்கும். மோடி , அமித்ஷா கிரிமினல்கள் எப்படியாவது ஜெயித்து விடுவார்கள்

 • R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா

  மனசாட்சி உடன் வாக்களிக்க வேண்டும் மக்கலே.அப்போது தெரியும் யார் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் என்று , நேர்மியாக வாக்களியுங்கள் மக்களே....

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  நீண்ட நாட்களாக நிதானமாக சேகரித்து இப்போதுதான் தினமலர் முழு நிலவரத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது , பொறுத்திருப்போம் விடியலை நோக்கி.....

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  வலராசியை நம்பி பிஜேபி காலம் காண்கிறது என்பது செம காமெடி .. பிரதமரோ வேறு எந்த பிஜேபி அமைச்சரோ வளர்ச்சி பற்றி பேசி எங்கேயும் பிரச்சாரம் செய்யவில்லை .. ராகுல் காந்தியை கலாய்ச்சது , அவர் கோயிலுக்கு சென்றது , யார் ஹிந்து , ராமர் கோவில் , அக்பர் , பாபர் , கில்ஜி , இந்திரா மூக்கை பொத்தியது, மோடி தன்னை காங்கிரஸ் கேவலப்படுத்திவிட்டது என்று சொன்னது.. இது மாதிரி மாபெரும் நாட்டுக்கும் , குஜராத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பிஜேபி எடுத்து பிரச்சாரம் செய்தது .. என்ன ஒரு வளர்ச்சி அரசியல் ..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  நீங்க ஆயிரம் அலசல் செய்யுங்க....குஜராத் மக்களுக்கு உண்மை தெரியும்...கடந்த இருபது வருடங்களில் குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்ற பிற நகரங்கள் கண்டுள்ள வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு சீராக இருப்பது என்று பல விஷயங்களில் பாஜக அரசின் செயல்பாடு எப்படி என்று அங்குள்ள மக்கள் அறிவார்கள்...இங்கே தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு டுமிழன்கள் கம்பு சுத்தி ஒரு ஆணியும் புடுங்கப் போவதில்லை....கான் க்ராஸ் வந்தால் திரும்ப கற்காலத்துக்கு போவோம் என்று அறியாத மக்கள் இல்லை குஜராத்திகள்.. .. அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னது...ஹர்டிக் படேல் தனித்து நின்றிருந்தால் பாஜக வாக்கு பிளவு பட்டிருக்கும்...காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்ததால் ஹர்டிக் அபிடேல் மேல் நம்பிக்கை கொண்டிருந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்..அந்த மக்கள் பாஜகவை துறந்து காங்கிரஸ் பக்கம் செல்ல தயாராக இல்லை...இதுதான் உண்மை நிலவரம்...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  குஜராத் உள்ளூர் நாளிதழ் கணிப்பு பாஜக 162 இடம் வெற்றி பெரும்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விட போகிறேன் என்று சொல்லும் மோடி போல ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்லி சாமானியனை நடு தெருவில் அல்லாட விட்டது தான் இவர்கள் சாதனை..ஊழல் அணு அளவும் ஒழியவில்லை.. அதற்கு பல சாட்சிகள் உள்ளன..மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.. அப்புறம் எவன் இவர்களுக்கு வாக்களிப்பான் ..ஒரு சில சொம்புகளை தவிர...

 • Indhuindian - Chennai,இந்தியா

  பிஜேபி தானாகவே நூற்று இருபது தொகுதிகளில் ஜெயித்து விடும். திருவாளர் மணி ஷங்கர் ஐயர் புண்ணியத்தில் இன்னும் ஒரு இருபத்தாய்ந்து தொகுதிகள் கிடைக்கும். பி ஜே பி மணி ஷங்கர் ஐயருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The people of Gujarat wanted a change in their state at this moment.So it is 100% chance for opposition parties to come to power in this election. We should not compare the recent local body election's victory of BJP in UP .There are lot of difference between that election and this election.In this Gujarat assembly election there is a little chance for BJP to come to power but a very bright chance for opposition parties to come to power at this moment.The Karuththu Kanippu by various medias are may not be correct as it reflects only limited number of people's opinion.Let us hope for good always in coming days.

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  யப்பா முதல்ல தேர்தல் ஆணையம் யார்பக்கம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அவர்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள்... உடம்பே கூசுகிறது...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மோடி அவர்களை இந்த தேர்தல் ரொம்பவும் சிரமப்பட வைத்துவிட்டது, எப்போதும் குஜராத் ஞாபகத்திலேயே தான் இருந்து வருகிறார், தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி தேர்தல் வேலைகளை செய்துவருகிறார், ஆள் பலம், பண பலம், அதிகார பலம், இப்படி பல வலுவான ஆயுதம் தாங்கி பி.ஜெ.பி இந்த தேர்தலை சந்திக்கிறது, எங்கும் மோடி, எதிலும் மோடி, அவர் ஒருவர் மட்டுமே, வேறு யாருக்கும் வேலை இல்லை, ஆனால் எத்தனை நாள் இவர் இதை இப்படியே கட்டி காப்பாத்த முடியும், அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்காவிடில், இன்று காங்கிரஸ் சந்திக்கும் நிலையை நாளை பி.ஜெ.பி சந்திக்கும்,

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தேச பற்றுள்ள பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பர். பாஜக வெற்றி உறுதி. போலி மதசார்பின்மை தோற்பது உறுதி, ஜெலுசில் ரெடியா வச்சிக்கவும்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மூன்றாண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின் போதும் இதோடு பாஜக ஒழிந்தது என செய்தி போடுவார்கள் இத்தாலி அடிமைகள் ஜோராகக் கைதட்டுவார்கள் ஆனால் முடிவோ வேறு மாதிரியிருக்கும் இப்போதும் மாற்றமிருக்காது (யாரும் ஹிமாச்சல் தேர்தலைப் பற்றி எழுத்துவதிலையே ஏன்? ராகுலகூட அங்கு பிரச்சாரம் செய்த செய்தியில்லையே ஏன்? )

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  எங்க போட்டாலும் ஓட்டு எங்களுக்கே, நல்லா இருக்குடா உங்க நியாயம்

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  மோடியின் மாய பிம்பம் உடைந்து போய் நாட்கள் பலவாகி விட்டன....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  வெகு நாட்கள் கழித்து ஒரு சரியான அலசல். வெற்றிக்காக எதுவும் நடக்கலாம். அதையும் மீறி மாற்றம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கிறதென்று அர்த்தம்.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  தொழிலதிபர்கள் கட்சி ஒரு பக்கம், ரோமானிய ராஜ்ஜிய விழுதுகள் மறுபக்கம். இதில் யார் ஜெயித்தாலும் தோத்தாலும் பொதுமக்களுக்கு யாரும் எதுவும் செய்யப்போவதில்லை.

 • AR -

  அட போங்க பாஸ். அதான் ஓட்டுப் போடுற மெஷினில் உங்க வேலைய காட்டிரிங்கள.. அப்புறம் என்ன நெருக்கடி.

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  வெற்றி பெற எல்லா திருட்டுத்தனத்தையும் செய்யும் கும்பல்...உத்தரபிரதேசத்தில் அதுதானே நடந்தது.

 • இந்துத்தமிழன் - Tamilnadu,இந்தியா

  சாதனை நாயகர்களுக்கு சோதனை எல்லாம் ஏணிப்படிகள் மாதிரி தான். இந்த சோதனையும் கடந்து போகும். மோடிஜி யின் மணிமகுடத்தில் குஜராத் வெற்றி மற்றுமொரு வைரமாகத் திகழும். ஒரு வாரம் பொறுத்திருங்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்றால் ராகுல் விடுமுறையில் சென்று இருக்க வேண்டும்... குறைந்தபட்சம் மணிசங்கர் அய்யராவது தேர்தல் களமிறக்கி இருக்கமாடார்கள்... இதன் பின்னரும் கற்பனையில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  மோடியால் மக்களுக்குத்தான் சோதனை

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  " உ.பியில் சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆகியவை, பா.ஜ.,வுக்கு ஆறுதல்." அது தான் பிராடு என்று உண்மையை புட்டு புட்டு வைக்கிறார்களே.. வெறும் 17% தான் என்று. அதை வைத்து மகத்தான வெற்றின்னு சொல்லி ஏமாற்றுகிறார்களாமே? ஆமாவா?

 • Mariappa T - INDORE,இந்தியா

  RaGa நீங்கள் வெற்றி பெற எல்லா இந்தியனுடைய வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement