Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
தமிழில் பத்மாவதி
பத்மாவதி சரித்திரம் தமிழில் மூன்றாவது நாவல். கதாநாயகன் 'நாராயணன்', நாயகி 'பத்மி' என்கிற பத்மாவதி. நாராயணின் அப்பா பாத்திரம், மோசடி பேர்வழியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாராயணன் - உத்தமன். அவன் விரும்பும் பத்மாவதியை, சிறு வயதிலேயே வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். 12 வயதுச் சிறுமியாக இருக்கும்போதே, அந்த கணவன் இறந்து, பத்மாவதி விதவையாகி தாய் வீடு திரும்பி விடுகிறாள். அதன்பின் புரட்சிகரமாக நாராயணன், பத்மாவதியை விதவைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்நாவல் 1950ல் சென்னைப் பல்கலையில் பாடநுாலாக பயன்படுத்தப்பட்டது.

தகவல் சுரங்கம்
பழு பாவக்காய் சீசன்
டிசம்பர், ஜனவரியில் தமிழகத்தில் பழு பாவக்காய் சீசன். இது தமிழில் தும்பங்காய் எனவும் அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் தீவிரமாகும் மூட்டுவலி, சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு பழு பாவக்காய் சிறந்தது. ஒரு கிழங்கில் இருந்து இது உருவாகிறது. பனை மரத்தை போன்று பழு பாவக்காயிலும் ஆண், பெண் என இரு வகைகள் உள்ளன. ஆண் பழுபாவக்காய் பூக்க மட்டும் செய்யும், காய்ப்பதில்லை. இது பெண் பழு பாவக்காய் செடியின் சத்தை உறிஞ்சி விடும். மனிதர்கள் காலடி பட்ட இடங்களில் இவை வளர்வதில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement