Advertisement

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடிதம்:
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப போதுமான நிதியுதவி வழங்க வேண்டும். ஒக்கி புயல் பாதிப்புக்குள்ளான குமரியில் மின் கட்டமைப்பு, விவசாயம், சாலை போக்குவரத்து போன்றவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அரேபியா, குஜராத், மாலத்தீவு பகுதிகளில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை தொடர வேண்டும். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஆமாங்க பேரிடரை அருவிச்சு ஒரு பெரிய தொகையை குடுங்க பங்கு போட நிறைய ஆட்கள் இருக்காங்க.

 • Jayvee - chennai,இந்தியா

  ரெண்டுபேருல ஒருதுராவது போய் பார்த்திருக்கவேண்டும் .. இதுல பேச்சு வேற

 • rajan. - kerala,இந்தியா

  இத்தனை விபரமாய் திட்டமிட்ட கொள்ளை என கண்டுபிடித்த நீங்கள் உங்க ஆட்சிக்காலத்தில உங்க ஆளுங்க அரங்கேற்றின திட்டமிட்டு இங்கு ஆட்டைய போட்டு வெளிநாடுகளில் கொண்டு போயி முதலீடு பண்ணினது எதுவுமே உங்களுக்கு தெரியாதோ. சரி இப்போவாச்சும் நல்ல சிந்திச்சு என்ன பேசுறோம் எது பேசுறோம்னு பார்த்து பரிமாறுங்க.

 • AR -

  அதிமுகவின் தலைமை அலுவலர் பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் கேட்கிற மாறி கேட்பாரு அவர் குடுக்குற மாறி கொடுப்பார். அப்புறம் இத பெரிய அளவில பாராட்டி நம்ம படிக்கிற இந்தப் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிடும். அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சகஜம்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  மத்திய அரசுக்கு ஒரு கடமை உண்டு மறுப்பதற்கில்லை.... ஆனால் மாநில அரசு என்ன நாத்துக்கு??... MGR நூற்றாண்டு விழா கொண்டாட மட்டும்தானா?.... உங்கள் கடமையை ஒழுங்கா செய்யமால் கை ஏந்துவது?.... பிச்சை எடுப்பதற்கு சமம்... கடல் படை , கடலோர எல்லை படை மற்றும் விமான படை உதவிக்கு வந்து இருக்கு... ஆனால் உங்கள் கோரிக்கை காசையே குறி வைத்து இருக்கு.... அரசியல் ...சாக்கடை அரசியல்....

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஆமா அப்பிடி அறிவித்து அப்புறம் நல்ல ஒரு அமௌண்ட்டா தேத்தி அத அப்படியே ஆட்டையப்போடலாம் பாருங்க .... மானம்கெட்ட பயல்களா ....

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆமாம் உடனெபல்லாயிரம் கொடிகளை தரவும் புயல்தான் ஏமாத்திட்டுபோய்ட்டுது சென்னைக்குமலைமட்டுமேன்னு

 • Selvaraj - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  ஒருவாரத்திற்கு பிறகு கடிதம் அனுப்பியுள்ளாராம். ஏன் நடந்து சென்று ஒருவருடம் கழித்து கொடுக்கவேண்டியதுதானே? மக்கள் வீதியில் வந்து போராடியபின்னர்தான் விழித்திரோ? கேவலம் மக்கள் கேரள அரசிடம் உதவிகோரியுள்ளனர்

 • rajan. - kerala,இந்தியா

  அட சாமியோவ் புயலுக்கு முன்னாடியும் ரோடுகள் படு குழிகள் தான் இப்போ அது கொஞ்சம் பெரிய குழி ஆகி இருக்கு அம்புட்டுதான். ஏதோ ஒழுங்கா ரோடு போட்டு கணக்கு எழுதின மாதிரி பேசுறாங்க. பேரிடர் எனும் பெயரிலே இன்னொரு ஆட்டைய பரோடா தயாராக்குறானுங்க.

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  புயல் மய்யம் கொண்டபோது கோவையில் மய்யம் கொண்டு விழா ஏற்பாடுகள் செய்து நாசம் நடக்கையில் கொண்டாடி தீர்த்தவர் இந்த முதல்வர் எடப்பாடி.முதல்வர் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்.குமரி மக்கள் வாழ்க்கையை இழந்து அழுது கொண்டிருக்கையில் தேர்தல் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்.குமரி மாவட்ட ஆட்சியர் உட்ப்பட்டஅதிகாரிகள் மூன்று நாட்களுக்குப்பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்கிறார்கள்.இவ்வளவு கேவலமான ஆட்சியாளர்களை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை.ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்கிறவர்கள் லட்சணம் இதுதான்.இப்படி இதுவரை பாதிப்பை எட்டியே பார்க்காத அலட்சிய முதல்வர் ,,அமைசசர்கள் ,அதிகாரிகள் கொண்ட கேவலமான பொறுப்பற்ற அரசு இருந்தால் மத்திய அரசு இதை எப்படி பேரிடர் என்று அறிவிக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement