Advertisement

பக்க வாத்தியம்

வில்லங்கமா கூவாதீங்கப்பா...!
இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை கிடைத்ததை முன்னிட்டு, சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச் சாலையில், அ,தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, சிலர், 'அண்ணன், ஓ.பி.எஸ்., வாழ்க' என, தொடர்ந்து கோஷமிட்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் அலெக்சாண்டர், பதறியடித்து, 'ஏம்பா... இப்ப தான் எல்லாம் கூடி வந்திருக்கு... ஆனா, ஒருத்தரை மட்டும் வாழ்கன்னு கோஷம் போட்டு, கட்சியை ரெண்டாக்கிடுவீங்க போலிருக்கே... 'ஒரு முறை, ஓ.பி.எஸ்., வாழ்கன்னா, மறு முறை, இ.பி.எஸ்., வாழ்கன்னு மாறி மாறி சொல்லுங்க... வில்லங்கமா கூவாதீங்கப்பா...' என அறிவுறுத்த, தொண்டர்களும் கோஷத்தை மாற்றிக் கொண்டனர். அங்கிருந்த தொண்டர் ஒருவர், 'நம்ம ஆட்கள் கூவுன கூவுல, மாவட்டமே கதிகலங்கி போயிட்டார் பாரு...' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    EOPS வாழ்க என்று சொல்லுங்கள் நோ ப்ராப்லம் எடப்பாடி அண்ட் ஓபிஸ் க்குபொதுவா இருக்குமே ஏ முதல்வர் ஓ THUNAI

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement