Advertisement

மும்பையில் கைதான கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்

சென்னை: தாயை கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான, கொடூரன் தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினான்.


கொடூரன்:
சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தான். குன்றத்துாரில், 25 பவுன் நகைகளுக்காக பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவானான். அவனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


கைது:
5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று(டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிச.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.


தப்பியோட்டம்:
இந்நிலையில் கோர்ட்டில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினான். மும்பை போலீசாரின் உதவியோடு அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (45)

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  என்கவுண்டர் பண்ணவேண்டியதுதான..... பாலியல் பலாத்காரம் பண்றவன நடுரோட்டுல வச்சு கொல்லணும்...

 • sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  கொலை குற்றவாளிகளை ஜாமினில் விடுவித்தால்,அவன் சாட்சிகளை கலைப்பதோடு தனக்கு எதிரானவர்களை கொன்று விடுவான் ,ஒரே கொலை செய்தலும் ,பலகொலை செய்தாலும் ஒரே தண்டனைதான்

 • அப்பு -

  தொப்பை போலீசார் ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு நிகரானவர்னு யாரோ சொன்னாங்களே.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  தப்பி ஓடுனதா நீயூசா? சரி இனிமே என்கவுண்டர் தான்? இதுதான் சரி?

 • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

  இந்த போலீசே அந்த 25 பவுன் நகையை வாங்கிட்டு, தப்பிக்க விட்டிருக்கும்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஒரு கொலை குற்றவாளியை பாதுகாக்க துப்பில்லாத காவல்துறையா பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிடப் போகிறது? இருபத்தி ஐந்து பவுனில் லஞ்சம் எத்தனை பவுன் கிடைத்ததோ தெரியவில்லை? விட்டு விட்டார்கள்.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  செம்மரம் வெட்டுபவர்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் சுட்டு தள்ளும் போலீசார் பிஞ்சு குழந்தையை கொன்றவனை, பெற்ற தாயை வெட்டியவனை சுட்டு தள்ள தயங்குவது ஏன்?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஒரே வழி ஷுட் அட் சைட் தான் பெஸ்ட் இந்த நாய்கள் என்னாத்துக்கு உசுரோட இருக்கவேண்டும்

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  காவல் துறையினரின் கவனக்குறைவே இதற்க்கு காரணம்...

 • Muthu Kumar - Thogamalai ,Karur.,இந்தியா

  தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் பிளான் தொடங்கியது ......

 • VELAN S - Chennai,இந்தியா

  இந்திய சட்டமே ஒரு வெட்டி , இதிலே , போலீஸ் கார பயலுக , அவனை தப்பிக்க விடுறானுக , என்னதை சொல்ல , அவனை ஒழுங்கா பிடித்து வைத்திருந்தாலுமே , இந்த இந்திய சட்டம் அவனுக்கு 50 ஆண்டு கழிந்த பிறகு இவனுக்கு தண்டனை கொடுக்காம விட்டிறலாம் ஏன்னா சிறையில் கொஞ்ச நாளு இருந்திட்டாரு என்று சொல்லி இவனை விட்டு விடும் , எப்படி பட்ட தெண்ட இந்திய சட்டம் பார்த்தித்தீர்களா . இதற்கு ஒரே வழி தீர்ப்பை விரைவாக சொல்வது , இல்லையெனில் தீர்ப்பை இழுத்தடிக்கும் , நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் , தாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்பதை உணர்ந்த இந்தியர்களே இப்படி இருக்கிறார்களே , என்னுடைய இந்த செய்தியை நீதிபதிகள் யாரவது படிக்கிறார்களா , என்னுடைய இந்த மெசேஜை படிக்கவேண்டிய பதவியிலுள்ள அரசியல்வாதிகள் படிக்க தினமலர் ஆவண செய்தால் இந்த மாதிரி தீர்ப்பு டிலே ஆகாத்திருக்க சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தாவது தீர்ப்புகளை விரைவு படுத்தவேண்டும் , அது நாட்டிற்கு மிக முக்கியமான தேவை , இல்லையையெனில் மக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள் .

 • Kailash - Chennai,இந்தியா

  எல்லா பிரச்சனைக்கும் காரணம் அந்த போலி நிதிபதிதான் (நீதிபதி அல்ல) வெளியே விடவில்லையென்றால் இவ்வளவு பிரச்னை வராது.. உடனே அந்த நிதிபதியையும் உள்ளே தள்ளவேண்டும். நியாயமான வழக்கறிஞர்கள் இருந்தால் இவர் மீது வழக்கு போட்டு நிதிபதி பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும். போலீஸ் வேண்டுமென்றே தப்பிக்க விட்டார்கள்.. சாதாரண ஒரு குற்றவாளியை பெரிய குற்றவாளியாக்கி விட்டனர். இவனை பொறுத்தவரை போலீசாரை தாக்கினான் அதனால் என்கவுண்டர் செய்தோம் என்று சொல்லுவது போலித்தனம். சாக்கு போக்கு சொல்லாமல் நேரடியாக நாங்கள் வேண்டுமென்றே கொன்றோம் சமுதாய வைரஸ்சை அழித்தோம் என்று சொல்லலாம் போலீஸ் இப்படி சொன்னால் அவர்கள் இழந்த மதிப்பை உயர்த்தும்.

 • ameer -

  இவனுக்கு சாவு நிச்சயம். அதுவும் என்கவுண்டர் மூலம் தான். இதை இவன் அம்மாவ கொன்னப்பவே எனக்குள் தோன்றியது. அதை ஊடகம் நிருப்பித்துள்ளது.

 • vnatarajan - chennai,இந்தியா

  முதலில் இந்த காமக்கொடூரனுக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்ததே தவறு. மேலும் தன தாயை கொன்ற ஈவு இரக்கமற்ற மிருகத்திற்கு கையில் விலங்கிடாமல் கொண்டு வந்தது மிக மிக தவறு இவன் தப்பிப்பதற்கு அஜாக்கிரதையாக நடந்துகொண்ட காவல்துறையினரை விசாரித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்காவேண்டும் . அவன் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றாலோ அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய முயற்சித்தாலோ . ஆச்சரியப்படுவதற்கில்லை . . ஆகையால் காவல்துறை தீவிரமாக தேடி அவனை pidikkavendum அல்லது என்கவுண்டர் பண்ணவேண்டும்

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இந்த லட்சணத்தில், தமிழ் நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸ் க்கு நிகராம். வெட்கக்கேடு.

 • S Hari Haran - CHENNAI,இந்தியா

  பெயில் எனபது எவ்வளவு குற்றங்களுக்கு அடிகோலியுள்ளது என்று ஒரு ஆய்வு செய்து மிகக்கடுமையான நிபந்தனைகளையின் பேரிலே அதுவம் மிக கீழதரமில்லாத கேஸேகல்லுக்கு மட்டும் தரவேண்டும்

 • VOICE - CHENNAI,இந்தியா

  Encounter செய்யபட்டால் அனைவர்க்கும் மகிழ்ச்சி. மனித உரிமை இது போன்ற விசயத்துக்கு கண்டும் காணாமல் இருபது நல்லது அதும் முடியவில்லை என்றல் . Train ட்ராக் போட்டு accident கேஸ் கிளோஸ்பண்ணிடுங்க. இது போல நாதாரிகள் எல்லாம் சித்ரவதை செய்து மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும். வீட்டில் ஓவர் செல்லமாக பிள்ளைகளை வளர்க்காதீர்கள். பின்னால் இது போன்ற உருப்படாமல் போக வாய்ப்புகள் அதிகம் முக்கியமாக மொபைல் கம்ப்யூட்டர் இரண்டும் அடிக்கடி கேஸூலாக சோதனை செய்வது நல்லது. தீய நட்பு இன்று மொபைல் நெட் connection உடன் தான் அதிகமாக வருகிறது. அடுத்தவர்கள் முன்பு அவமானப்படுத்தாமல் தனியாக தவறை கண்டிப்பாக சொல்லி திருத்தி கேட்கவில்லை என்றல் சிறுவயது முதலே அடித்து திருத்துவது நல்லது.

 • jagan - Chennai,இந்தியா

  ஸீன் செட்டப் செஞ்சாச்சு ..அடுத்து என்கவுண்டர் தான் , ஏரோபிளான் டிக்கெட் செலவு மிச்சம்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  எலக்ட்ரிக் டிரைன் மோதி பலி என்றோ கடலில் மூழ்கி தற்கொலை என்றோ செய்தி வரலாம், நடந்தால் நல்லதுதான்.

 • மைதிலி -

  இவனை நடக்க கூட தெம்பில்லம மயக்க ஊசி போட்டு இல்ல கூட்டு போயிருக்கணும்.இனிமேலாவது உஷாரா இருங்க.என்னத்த சொல்றது.

 • pu.ma.ko - Chennai,இந்தியா

  கருப்பன் குசும்புகாரன். என்கவுண்டருக்கு பிளான் பண்றான்....

 • Maheshwaran Irulappan - Bangalore,இந்தியா

  எனக்கென்னவோ போலீஸோட ஆசிர்வாதத்தோட தான் எல்லாமே நடக்குது... முதல்ல அவன் மேலே குற்றம் நிரூபிக்காதது.. இப்போ தப்பிக்க விடுறது... இவனும் ஜான் டேவிட் மாதிரி சென்னையிலே எதோ ஒரு பிபிஓ ல சீக்கிரம் வேலைக்கு சேருவான்னு தோணுது..

 • குறிஞ்சி நில கடவுள் - kallai,இந்தியா

  அது என்ன தல "பொத்துனாப்ல என்கவுன்டர்"...? அதுவும் இல்லாம இவனால நாட்டுக்கு என்ன பிரயோஜனம்...போலிஸ்க்கு தான் டூர் அரேன்ஞ் பன்றான்...சென்னை 2 மும்பைனு...அடுத்தது வெளிநாடு போய்ட்டார்னு நியூஸ் வருமோ...?

 • Bala - madurai,இந்தியா

  ரைட்டு, அவனை போட்டு தள்ளணும்னு முடிவு பண்ணிடீங்க , நடத்துங்க நடத்துங்க

 • Kabilan E - Chennai,இந்தியா

  இது போலீசாரின் உதவி இல்லாமல் நடந்திருக்கு வாய்ப்பே இல்லை...அவர்களை நிரந்தரமாக பனி நீக்கம் செய்யுங்கள்...எதற்கும் லாயக்கற்றவர்கள்...

 • M.SRINIVASAN. - Tirunelveli,இந்தியா

  அவனுக்கு ஜாமீன் கொடுத்தவர்களை கொண்டு தேட சொல்லுங்கள்

 • Senthil -

  hanging him or shooting him immediately.

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  வாழத் தகுதியற்றவன்

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  ஓடும்போதே, போட்டுருக்கவேண்டாமா? இனி, இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமா???... திருடன் போலீஸ் விளையாட்டு வெளையாடுறாங்களோ??? நல்ல நீதித்துறை, நல்ல காவல்துறை....

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  இந்த அயோக்கியனை கண்டவுடன் சுட போலீஸ்க்கு அனுமதி கொடுக்கவும் ...

 • Rafi -

  Good justice by court for giving him bail for murdering little kid

 • VeluSamyLic -

  கோட்டை விட்டாங்க ளா!!!!

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆஹா..., செம்மெ சான்சு.... "பொத்தினாப்ல encounter செஞ்சிடலாம்....". Officers ...., மிஸ் பண்ணிடாதீங்க....

 • Karthik - Singapore,சிங்கப்பூர்

  அட அட. என்ன ஒரு திறமையான போலீஸ்.

 • oliver - karimun,இந்தோனேசியா

  This is not accep and not true and they will encounter him today night and do they thing we are fools and police should not take law in their hand and 100% he is to be punished but by law

 • enmanam -

  அந்த நாயை சுட்டு தள்ளுங்க. நாசமா போறவன்

 • raja - Kanchipuram,இந்தியா

  இதை முன்பே செய்திருக்க வேண்டும். நல்ல செய்தி வரட்டும். பாராட்டுக்கள்.

 • Saravanan - Male,மாலத்தீவு

  அப்படியே அவனை என்கவுன்ட்டர் போட்டுடுங்க சார்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement