Advertisement

தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

சென்னை: ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


விண்ணப்பம்
ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆர்கே நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தை கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.


தொப்பி யாருக்கு?
இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டனர். முடிவில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.


குக்கர் சின்னம்:
பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தினகரன் கேட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.


எதிரிகளுக்கு பிரஷர்:
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது: எந்த சின்னம் ஒதுக்கியிருந்தாலும் நான் போட்டியிட்டிருப்பேன். இறுதியாக தாய்மார்கள் விரும்பும் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து (68)

 • Jayvee - chennai,இந்தியா

  பருப்பு வேகுமா

 • chenthil kumar - Nagercoil,இந்தியா

  இது ஜெயிலில் சசிகலா ஸ்பெசல் சமையல் அறையில் பயன் படுத்திய குக்வெர் நினைவாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட சின்னம். வாக்காளர்கள் இதை நினைவில் கொள்ளவும்.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  பரவாயில்லை இனி ஆர்கே நகரவாசிகள் தினம் தினம் புது புது குக்கர்களில் விதம் விதமாக சமைத்து தம்பி தினகரனுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் சுட சுட அளிப்பார்கள் .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இரண்டு பெரிய கட்சியின் வேட்பாளர்கள் மிகப்பெரிய கூட்டணியுடன் போட்டி இட்டாலும், அவர்களுக்கு இல்லாத ஸ்டார் அந்தஸ்தை இவருக்கு தான் தருகிறது மீடியாக்கள். இவருக்கு எந்த சின்னமாக இருந்தாலும் அந்த சின்னத்தை மீடியாக்கள் பிரபலப்படுத்தி விடும். ஜன்னல் கம்பி சின்னத்தை ஒதுக்கி இருந்தால் கூட அது பிரபலமாகி விடும். போதாதா குறைக்கு சோசியல் மீடியாக்களில் பிரபலமாகிக்கொண்டு தான் இருக்கிறார். இவருக்கென்று ஒரு டிரேட் மார்க் சிரிப்பை வைத்திருக்கிறார். இந்த இடைத்தேர்தல் சிறப்பாவதற்கு இவரே முழுக்காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இவன் ஒரு குற்றவாளி எப்படீங்க இவனெல்லாம் நிக்கலாம் ஜாமீன் லேதான் வந்துருக்கான் இன்னம் கேசு முடியலீங்களே விஷாலுக்கு ஒரு நீதி இந்தமாதிரி கேசங்கள் தான் அதிமுக்கியம்போல நாட்டுக்கும் மக்களுக்கும் நாசமா போக அந்த கூட்டம்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ தொப்பியை யாரு தட்டிகிட்டு போனது ?

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  RK நகர் வாக்காளர்களுக்கு குக்கர் இலவசமாய்க் கிடைக்கும் ...

 • bal - chennai,இந்தியா

  வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்...உள்ளே போகும்போது சமைத்து சாப்பிட உதவும்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அட கூறு கெட்ட குக்கரு. இனிமே செய்யதடா மக்கரு .

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தொப்பி போட்டு ஃபோட்டோ போஸ் எல்லாம் சூப்பரா குடுத்தாக... குக்கர்? பத்து பாத்திரம் தேய்க்கிற மாதிரி ஃபோஸ் தருவாரா?

 • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

  எந்த சின்னமாக இருந்தாலும் அதற்கென்று தமிழ்ப்பெயர் இருக்க வேண்டும் அல்லது அதன் பெயரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். குக்கருக்கு தமிழ் சமையலர் அல்லது சமையல்காரர் அல்ல. ஏனெனில் குக் என்றால்தான் சமையலக்காரர். குக்கர் என்பதற்கு சமையல் செய்யும் பாத்திரம் என்று தான் தமிழாக்கம் செய்ய முடியும். இது சரியல்ல. திராவிட தமிழ் கொலைஞர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? இதுவே ஒரு இந்தி பெயராக இருந்தால் மொழி ரத்தம் பீறிட்டு அடிக்குமல்லவா?

 • rmr - chennai,இந்தியா

  chinnatirku pathil ellarukum ethavuthu en kudukalam

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  மேலே safey valve இருக்காது என்று நினைக்கிறேன். இட்லிதான் சுடலாம்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தொப்பி போச்சே.... தம்பி இன்னும் ரிசல்ட்டு வரலே....

 • Paranthaman - kadappa,இந்தியா

  கம்பெனி குக்கரை நன்றாக தெரியும் படி சின்னமாக போட்டால் கம்பெனி கமிஷன் கிடைத்திருக்கும்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  குக்கருக்கு மேலே வெயிட்டைக் காணோமே.

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஆரம்பத்தில் தினகரன் என்னவெல்லாம் பேசினார். இப்போ ஒரு சவுண்டையும் காணோம்.

 • ARUN.POINT.BLANK -

  dinakara nee vega pora hahahaha

 • பாலூரான் -

  வச்சு செய்யிறாங்க....

 • Paranthaman - kadappa,இந்தியா

  தொப்பி சௌகரியம் குக்கருக்கு வராது. தொப்பியை சுலபமாக தலையில் போட்டு கழட்டமுடியும். மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும்.தேர்தல் சின்னமாக தலையில் மாட்டி காட்டமுடியும். குக்கரை எப்படி எடுத்து காட்டுவது. எப்படி அதை மற்றவர்களுக்கு இலவசமாக கொடுப்பது. தினகரனுக்கு மிகவும் சிக்கலான சின்னம்.

 • ManiS -

  Pods kooru ketta cooker... Recalling Vadivel dialogue... He is a gem comedian

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "Keezha Vizhuindhalum Meesaiyiel Mannu Ottadha kadhaya" this man is telling about his pressure cooker symbol to give pressure to other parties is really making every one to laugh.Nowadays the cookers are not famous and no one knows about it as every one using steel and aluminium vessels for making foods and curries.This symbol won't help this man to get votes from the people of R.K.Nagar.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தொப்பி தலையில் மாற்றி கொண்டு திரிந்தார் பிரஷர் குக்கர் வைத்து என்ன செய்வார் தெரியவில்லை , ஒரு வேலை தலைகீழாக மாற்றி கொள்வாரோ???

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆர்கே நகர வாழ் மக்களே உங்களுக்கெல்லாம் 5லிட் குக்கர் இலவசமா வரும் என்ஜாய்

 • Saravanan - Chennai,இந்தியா

  தினகரனை பார்த்து ரொம்ப பயப்படுறாங்க. அடுத்த தலைவர் உருவாக்க படுகிறார்

 • balaji -

  kongu katchi super idu Coimbatore pakam apadina cm eps avarhal madhusudanan ah tolvi adai seai tan oorukararukw thopi kidaika erpadu panitaru.after election unala na keten enala ne keten adicika poranga

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  என்ன குக்கர் (படத்தில்) அடிவாங்குன மாதிரி இருக்கு ...?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அப்போ எல்லோர் வீட்டுக்கும் எலக்ட்ரிக் குக்கர் இலவசம் .

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சட்டி சுட்டதடா, கை விட்டதடா...

 • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

  ஹையா, ஆளுக்கொரு வெள்ளி குக்கர் இலவசம். உற்சாகத்தில் RK நகர், அண்ணலின் வெற்றி உறுதி

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு குக்கர் இனாம்

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  சரஸ்வதியோடு சேர்ந்து இட்லி கடை வைக்கலாம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஓட்டுப்போட்டுக்கொண்டு வருபவனுக்கு இன்றைக்கு இருப்பது இந்த ஜட்டி மட்டும் தான் அப்படி இருக்க இந்த தொப்பியைப் பற்றிய கவலை வேறு? வந்தே மாதரம்

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  தொப்பி சின்னத்திற்கு தான் வாக்களிக்கும்படி 4000 பட்டுவாடா பண்ணிட்டார் இப்ப இல்லையின்னா என்ன அர்த்தம்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  விஷாலை துரத்திவிட்டார்கள் , தொப்பியும் இல்லை , வாக்கு சீட்டும் கிடையாது இயந்திரம்தான் ஓட்டுப்பதிவு செய்திட . நல்லதொரு நாடு .அதுல ஜனாநாயகத் தேர்தல் . வெளங்கிரும் . மக்கள் சக்தி இல்லாவிட்டாலும் பணம் இருந்தால் டயர் நக்கினால், நாற்காலி குந்ல்லாம் என்று ஒரு ஜனநாயகம் . அதுல ஒரு தேர்தல் கமிஷன் . இரு கல்லாறை ஒரு இரட்டை இலை சின்னம் , இதுதான் இப்போது தமிழகத்தை சூறையாடிக்கொண்டிருக்கு .

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  "தினகரனுக்கு தொப்பி இல்லை" தொப்பி மட்டுமா .. மூளையும் இல்லை.. அறிவும் இல்லை. அடக்கமும் இல்லை.. நல்லவனும் இல்லை. நல்லவர்களும் உடன் இல்லை.. இன்னும் எத்தனையோ இல்லை ..இல்லை...

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  தொலைஞ்சு போன தொப்பி விலை எண்பத்து நாலு கோடிங்க.

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  பிஜேபி விட அதிக ஒட்டு பெற்றால் போதும்.

 • M.SRINIVASAN. - Tirunelveli,இந்தியா

  ஓன்று மட்டும் உறுதி .சசிகலா மற்றும் தினகரனை கண்டு மத்தியரசுக்கு பயம் இருக்கிறது

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  தொப்பிக்கு வந்த மவுசை பாருங்க ,,,,என்னமோ தொப்பி கிடைச்ச மட்டும் ஜெயித்துடுவோம்னு நம்பிக்கையாகும் ...எந்த சின்னமா இருந்தா என்ன மக்கள் அந்த அல்லவா இப்ப விபரம் இல்லாம இருக்காங்க ..இரட்டை இலை சூரியனை தவிர மத்தது எல்லாம் வேஸ்ட் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு இத எவனாலும் மாத்தவும் முடியாது ...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தொப்பிக்கே தொப்பியா...வெரிகுட் ..காலி டப்பிக்கு தொப்பி எதற்கு...டாஸ்மாக் குப்பிக்கு கூட தொப்பி இருக்கு..ம.மாபிக்கு தொப்பி இல்லையா...

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  குல்லாவி வந்தப்புறமாதா இவிங்ளுக்கு பெரிய்ய ரொம்ப சிக்கல் ப்ரோப்லேம் வந்துபோட்டுத்தமா.

 • Indhuindian - Chennai,இந்தியா

  எப்படியும் எல்லோருக்கும் குல்லாய் போடப்போறார். தொப்பி சின்னம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  panneerum edapaadiyum anna thi mu ka vai alika enna kodumaiyaiyum seivaarkal .thinakaran entha sinnathil kettaalum makkaL AATHARITHU VETRIPERA SEIYAVEN.

 • appaavi - aandipatti,இந்தியா

  பாவம் எத்தனை தொப்பிகள் கரன்சியோடு ரெடி செய்யப்பட்டதோ...எல்லாத்தையும் இனி குடும்பத்தோடு உட்கார்ந்து கிழியுங்கள்....

 • கருணாநிதி -

  தோப்பி இல்லாட்டி கூட மதசூதனன் மன்னை கவ்வுவார்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தினகரனுக்கு ஏற்ற சின்னம் திருவோடுதான். ஜெயில் கதவும் பொருத்தம்.

 • Kailash - Chennai,இந்தியா

  தொப்பி யாருக்கும் கொடுக்க கூடாது... தினகரனுக்கு மட்டும் கொடுக்காமல் யாருக்காகவாது கொடுத்தால்... அது வேண்டுமென்றே செய்வதுதான்.. போன முறை முதல்வரே தொப்பி போட்டு பிரசாரம் செய்து பணத்தை சப்ளை செய்தனர். சப்ளை லிஸ்டில் இவர் பெயர் தான் இருந்தது... ஒரு விசாரணையும் இல்லை. இதே ஆணையம் ஒன்றையும் கிழிக்க முடியவில்லை...

 • Udhaikumar - Chennai,இந்தியா

  பதிவு செய்த அரசியல் கட்சிகள் கேட்பதால் சுயேச்சைகளுக்கு கொடுக்கமுடியாதுன்னு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர் ஒருத்தர் இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலைன்னு பகிரங்கமா மீடியாக்கள் முன்னாடி அறிக்கையை விடுகின்றார். அவர் ஏன் இப்படி மிரண்டு போய் இருக்கார் என்பது தெரியவில்லை. தேர்தல்ன்னு வந்துட்டா நேரடியாக மோதிப்பாத்துடனும். அதைவிட்டுட்டு, விண்ணப்பத்தில் போடப்பட்ட கைஎழுத்து சம்மந்தப்பட்டவர்களுடையது இல்லேன்னு சொல்லச்சொல்றதும், சுயேச்சைகள் பலரை ஒரே சின்னத்தை கேட்கச்சொல்லி முடுக்கிவிடுவதும், ஒரே பெயரில் நான்கைந்து சுயேச்சை வேட்பாளரை களத்தில் இறக்கி வாக்காளர்களை குழப்பமடையச் செய்வதும், இதுபோன்ற விஷயங்களை எந்தக் கட்சி செய்திருந்தாலும், அடுத்து வரப்போகும் சட்டமன்றத்தேர்தல்ல அக்கட்சி பெரும் பின்னடைவைத்தான் சந்திக்கும்.. அஇஅதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் தேர்தல் முறைப்படி நடக்குமா அல்லது நடக்காமலேயே போய்விடுமான்னும் யோசிக்கவேண்டியிருக்கு. தேர்தல் முறைப்படி நடந்தால் தான் யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை அறியமுடியும்.. என்ன ஒன்று. டி.டி.வி தினகரன் போன முறை செஞ்சு வச்ச முதலீடு அத்தனையும் இந்தச்சின்னம் அவருக்கு கிடைக்காமல் போச்சுன்னு அவர் மட்டும் கவலைப்படலாம்..மத்தபடி ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தரும் என எதிர்பார்க்கலாம்..

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  அப்பாடா...... இனி தினமலரில் தொப்பி படம் போட்டு செய்தி போடமாட்டார்கள்

 • Palich Venkat - salem,இந்தியா

  மை காட் ... சிரிப்பு தாங்க முடியல ..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தொப்பி இல்லாட்டி குல்லா கொடுங்க, இல்லை அல்வா கொடுங்க...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  " தொப்பி இல்லையா ?" ....என்னங்கடா இது கப்பித்தனமா இருக்கு ?

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  தினகரனுக்கு தொப்பி கொடுத்திருந்தால் இலையை பின் தள்ளியிருக்கும்....

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  அப்போ தினகரனுக்கு கட்சியே இல்லை. தனி நபர்தான் என்பது உறுதி செய்யப் பட்டது. கெடுவான் கேடு நினைப்பான்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  மகிழ்ச்சி .... அப்படியே தொப்பி தந்தாலும் என்னமோ டெபாசிட் வாங்குன மாதிரி தான் .... எதற்கு இந்த தேர்தல் இப்போ?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தினகரன் ஜெயிக்க கூடாது என்று தானே தேர்தலை நிறுத்தி மறுபடியும் வைக்கிறார்கள் . எப்படி அந்த சின்னம் கொடுப்பார்கள் ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தொப்பிக்கு வந்த வாழ்வு...

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  தொப்பி இல்லைனாலும் கணிசமான ஓட்டுக்களை தினகரன் பெறுவார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement