Advertisement

ஆர்கே நகரில் 59 பேர் போட்டி; விஷால் மனு தள்ளுபடி உறுதியானது

சென்னை: ஆர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் தேர்தல், டிச.,21ல் தேர்தல் நடக்க உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தினகரன், பா.ஜ.,வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது, தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 73 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் அளித்திருந்தார். தேர்தல் விதிப்படி, இன்று(டிச.,7) மதியத்திற்குள் ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் விளக்கமளித்தால், வேட்புமனு ஏற்று கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டதாக கூறப்படும் தீபன், சுமதி இருவரும் தேர்தல் அலுவலரிடம் நேரில் ஆஜராக விளக்கமளித்தனர்.
இறுதி வேட்பாளர் பட்டியலில் விஷாலின் பெயர் இடம்பெறவில்லை.
Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • bairava - madurai,இந்தியா

  கடந்த முறை வாக்கியந்திரத்தில் தில்லுமுல்லு செய்து அதிமுக வெற்றிபெற்றதற்கு செய்த அதே செயலை பி ஜே பி செய்து வெற்றிபெறப்போகிறது தமிழன் வாயில் மண்ணு தான் .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "விஷால் மனு தள்ளுபடி உறுதியானது" - தண்டயார்பேட்டெ சனங்க குடுத்து வெச்சது அவ்ளோதான்..... Next ட்டு எங்குனக்குள்ளயாவது மீட் பண்ணுவோம்....

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  விஷால் வேட்ப்புமனு நிராகரிக்க சதி நடந்ததாக சொல்லும் நண்பர்கள் அவர் தேர்தலில் நிற்க பின்னணியில் என்னவெல்லாம் சதி வேலை நடந்தது என்பதையும் யோசிக்கணும் ....ஆளும் கட்சி விரலை சூப்பிட்டா இருக்கும் .முக்கியமான எதிர் கட்சிகள் எல்லாம் தேர்தலில் நிற்குது அப்புறம் என்ன ?ஆளும் கட்சி பிடிக்கலைன்னா திமுக வுக்கு ஒட்டு போட்டுட்டு போங்க ...விசாலேதான் வேணுமாக்கும் .ஓட்ட பிரிச்சா திமுகவின் வெற்றி சுலபமாகும்னு நினச்சு இந்த வேல ...விஷாலுக்கு இனிதான் இருக்கு ஆப்பு ,,விரைவில் நடிகர்சங்க தலைவர் பதவியை விட்டு துரத்தி அடித்தாலும் ஆச்சரிய பட ஏதும் இல்ல .

 • Vivaram Vignesh - Ayodhi,இந்தியா

  விஷால் மனு தள்ளுபடி உறுதியானது என்று சொல்லுவதை விட மிரட்டப்பட்ட இருவர் மேற்கொண்டு தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட காலவரையில் வந்து கையெழுத்து தங்கள் தான் போட்டது என உறுதி அளிக்கவில்லை என்பது தான் பொருத்தமாக இருக்கும். மிரட்டல் என்பது அதிமுகவிற்கு கைவந்த கலை. அதிமுகவும் அதை இயக்கும் பாழாய் போன பாஜகவும் இனி தமிழகத்தில் விலாசமின்றி தவிக்கும் என்பது உறுதி.

 • Indhuindian - Chennai,இந்தியா

  எப்படியும் கோர்ட்க்கு போக போகிறது. கோர்ட் எலெக்ஷனை ஸ்டே பண்ணாலும் பண்ணலாம். ஆகவே வேட்பாளர்கள் முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்னால் சிறிது யோசிக்கவும் அல்லது கோர்ட் ஆர்டர் வரும் வரைக்கும் அவசரப்படாமல் இருந்தால் நல்லது

 • raja - Kanchipuram,இந்தியா

  அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் எடுபிடிகள். கேவலம் இந்த மாதிரி சுய புத்தி இல்லாத ஜென்மங்கள் அதிகாரிகளாக பவனி வரும் நிலையில் நாடு இருக்கிறது

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்திய அரசியல் சட்டத்தின் காமெடி, நாடகங்களில் ஒன்று அரங்கேறியுள்ளது.

 • Somiah M - chennai,இந்தியா

  தேர்தலில் போட்டி இடுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் .போட்டி இடுவதற்காக தகுதிகளை மாற்றி அமைக்க வேண்டும் .ஜன நாயகத்தை கேலி கூத்தாக்குவது தடுக்கப் பட வேண்டும் .

 • Kailash - Chennai,இந்தியா

  விரைவில் இன்னொரு முறை தேர்தல் நடக்கும்... காரணம் அங்கு மிகவும் முதிர்ந்தவர் பல பேர் மறைமுக ஆதரவு பின்னணியில் வெற்றி பெறுவார். முதிர்ந்தவர் வேறு... சில மாதங்களில் திரும்பவும் பிளாஷ் நியூஸ் வரலாம்... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாம்.... பிறகு வழக்கம் போல... சொத்து விபரங்களோடு ஆரோக்கியம் பற்றி மருத்துவர் சான்றிதழ் இணைக்கலாம் காரணம் அரசுக்கு தேவையில்லாமல் தேர்தல் செலவு அதிகரிக்கிறது மக்கள் பணம் வீணாக்குகிறது ....

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  நடக்குமா நடக்காதா ?.ஜெயிக்கப் போவது யாரு...?.ஆருடம் சொல்வதில் தமிழிசை அக்காதான் வல்லவர்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஜெ இருந்தபோது வென்ற அதே EVM ஐ கொண்டுவைத்து இரட்டை இலை ஒரு லட்சம் வாங்கிவிட்டது , என்று புருடா விட்டாலும் அதனை எதிர்க்க யாருக்கும் இங்கு திராணியில்லை ... துப்புக்கெட்ட உலகமடா இது ...

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  அதெப்படி பெரிய கட்சி வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுவில் தப்பே செய்யறது இல்லை?

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  தேர்தலில் நிற்க ஆசைப்படுற ஆனால் திடீரென்று மக்களுக்கு நல்லது செய்ய போறேன் என்ற நாடகம் தான் நம்புற மாதிரி இல்லை . அன்பு செழியன் தற்கொலையில் இவரால் ஒன்று செய்யமுடியவில்லை . அதனால புது நாடகம் . பிக் பாஸ் ஜூலி மாதிரி இவன் .

 • Selvakumar - Chennai,இந்தியா

  "திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தினகரன், பா.ஜ.,வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர்..." இப்படித்தான் தினமலர் போன்ற சில ஊடகங்கள் தொடர்ந்து 'நாம் தமிழர்' கட்சியை உதாசீனப்படுத்தி வருகிறது. தினமலரே ஒரு சவால்... இங்கு குறிப்பிட்ட வேட்பாளர்களில் சிலரை விடவாவது நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் நீங்கள் செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள தயாரா?

 • செல்வராசன்வ -

  வாக்கு சீட்டு நம்பகதன்மை உடையது

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  59 =5 +9 =14 =1 +4 =5 ஆகவே இது குரு/வியாழன் கிரகத்தின் எண். இதில் வெற்றிக்கனி பறிப்போர் நிச்சயம் அரசு கட்டிலில் அமர வாய்ப்பு 3 மாதத்தில் கிடைக்கும். சும்மா இப்படி உடான்ஸ் விடவேண்டியது தானே.

 • abu - chennai,இந்தியா

  அப்போ ஒப்புகை வாக்கு சீட்டு உறுதி... புண்ணியவான்கள் யாரும் தேர்தலை நிருதிடக்கூடாது...

 • Nachimuthu - mettur,இந்தியா

  58 பேரில் எதனை வேட்பாளர்களை ஆளுங்கட்சி விலைக்கு வாங்குகிறதோ

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அப்போ EVM தில்லு முள்ளு ரெடி .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement