Advertisement

அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான செய்தி:
இந்தியாவை சேர்ந்த ட்ரோன், அத்துமீறி சீன வான்பகுதிக்குள் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல். இதற்கு அதிருப்தியும் எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது. ட்ரோன் கீழே விழுந்ததையடுத்து, சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ட்ரோன் எந்த இடத்தில் விழுந்தது என்பது பற்றியும், எப்போது நடந்தது என்பது குறித்தும் வெளியிடவில்லை.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இவனுங்க பலதடவை இந்திய லடாக் எல்லையில் உள்ளே. உலா வருவார்கள் அதெல்லாம் சும்மா. வெறும் பொம்மையை வைத்து அரசியல் செய்கின்றனர்.

  • vnatarajan - chennai,இந்தியா

    கீழே விழுந்து நொறுங்கிய ட்ரொனை பார்செல் செய்து இந்தியாவிற்கு அனுப்பச்சொல்லுங்க. அப்போதுதான் சைனா கூறும் குற்றச்சாட்டு உண்மையா என்று தெரியும்

  • Mariappa T - INDORE,இந்தியா

    நம்ம விமானம் காணவில்லை என்பதை அடுத்த நாட்டுக்காரன் சொல்லித்தான் தெரியுது.

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

    நீ அத்துமீறும் போது?

  • ஈரோடுசிவா - erode ,இந்தியா

    மேற்படி ஆளில்லா விமானம் ... கட்டுப்பாட்டை இழந்து சீன எல்லைக்குள் சென்று விழுந்தது ... இது ஒரு தொழில்நுட்ப குறைபாடு ... இதற்கென்ன எதிர்ப்பு வேண்டிக்கிடக்கிறது ... ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement