Advertisement

சாதிகள் இருக்குதடி பாப்பா...

சாதிகள் இருக்குதடி பாப்பா...

உடுமலை கவுசல்யா
கடந்த பத்தொன்பது மாதங்களுக்கு முன்பாக உடுமலையில் நடந்த ஆணவப்படுகொலையின் காரணமாக இருபது வயது நிரம்புவதற்குள் கணவரை இழந்தவர்.

தன் மனதிற்கு பிடித்த ஆணுடன் குடும்பம் நடத்திய குற்றத்திற்காக, திருமணமான எட்டாவது மாதமே பட்டப்பகலில் கூலிப்படையினரால் கண் எதிரே கணவன் சங்கரை வீச்சரிவாளுக்கும் வெட்டுக்கத்திக்கும் பலிகொடுத்தவர்.சிசிடிவி புட்டேஜ் காரணமாக இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட காரணமாக இருந்தவர்.

சம்பவத்தில் கவுசல்யாவும் தலையில் வெட்டுக்காயத்துடன் பாதிக்கப்பட்டார்,தீவிர சிகிச்சை காரணமாக பிழைத்துக் கொண்டார்,சிகிச்சைக்கு பின் கணவரோடு வாழ்ந்த வீட்டிற்கே திரும்பியவர்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசும் வழங்கிய அனைத்து நிதியையும் கணவர் குடும்பத்திற்கே செலவழித்தார்.கழிப்பறை கூட இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்தவர்களுக்கு கழிப்றையோடு கூடிய சிறிய வீடு கட்டித்தர உதவினார்.

அன்றாடம் மற்றும் அவ்வப்போது சந்தித்தவர்களில் உண்மையிலேயே தன் மீது அக்கறை கொண்டவர்கள் யார் யார் என அடையாளம் கண்டு கொண்டார், அவர்களில் முக்கியமானவர்கள் சென்னையைச் சேர்ந்த இளங்கோவன்-கீதா தம்பதியினர்.
இவர்களது வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்து தகுதி அடிப்படையில் தற்போது குமாஸ்தா வேலை பார்த்து வருகிறார்.வேலை காரணமாக வெளியூர் விடுதியில் இருக்கிறார்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கணவர் வீட்டிற்கு சென்று கணவர் குடும்பத்தாரோடு நேரத்தை செலவழித்து வருகிறார்.

இவை எல்லாவற்றையும் விட மனிதர்களை கீழ்த்தரமாக்கி, தன் வாழ்க்கை சீரழித்த சாதியை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளார், இதற்கான சமூக களங்களில் ஒரு போாரளியாக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார், தனக்கு ஏற்ப்பட்ட நிலமை இனி எந்தப் பெண்ணிற்கும் நேரக்கூடாது என்பதற்க்காகவும் சாதி ஆணவப்படுகொலையில் ஈடுபடுவோர் இனியாவது திருந்த வேண்டும் என்பதற்காகவும் மேடைகள் கண்டுவருகிறார்.பல்சர் ஒட்டுகிறார், பறை இசைக்கிறார், மனதில் இருப்பதை தைரியமாக பேசுகிறார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.இந்நிலையில் சென்னையில் 'ஜாதிகள் இருக்கேயடி பாப்பா' என்ற ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கவுசல்யா கலந்து கொண்டார்.

தலை முதல் உடை வரையிலான இவரது தோற்றம் மாறியிருக்கிறது எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது ,பெரியாரிடம் இருந்தும் அம்பேத்காரிடம் இருந்தும் கற்ற பெற்ற விஷயங்களை மேற்கொள்காட்டி பேசத்தெரிந்து இருக்கிறது.
சிறுவர் சிறுமிகளுடன் கவுசல்யா உரையாடுவதுதான் ஆவணப்படத்தின் கரு.இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு காதல் பற்றி ,சாதி பற்றி என்ன புரிதல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவுகிறது.

இனிமேல் காதலிக்கிறதுக்கு முன்னாடி நீ என்ன சாதின்னு கேட்டுதான் காதலிக்கணுமா? பயமிருக்குக்கா?என்ற கேள்விக்கு அப்படி கேட்டு காதலிப்பது காதல் இல்லை, காதலிப்பது மனசாக மட்டுமே இருக்கவேண்டும் என்று பதில் தருகிறார் கவுசல்யா.
இந்த ஆவணப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது ஆகவே அதில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு அழைத்த எம்.ஜே.பிரபாகருக்கும்,கூடுதல் விவரங்கள் தந்து உதவிய இளங்கோவன்-கீதா தம்பதியினருக்கும் நன்றி!

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    இங்கே நான் அவ்வப்போது இந்தியர்களை ,தமிழர்களை சந்திப்பேன் ..அவர்கள் தமிழர்கள் என்றால் ,தமிழில் பேசுவது தான் முறையாக இருக்கும் என்று பேசுவேன்.,,அவர்கள் என்ன ஜாதி என்று அவர்களும் கேட்பதில்லை .நானும் கேட்பதில்லை ..இந்த ஜாதியாக இருக்குமோ என்று சிந்திப்பதும் இல்லை ,,சில நேரங்களில் ஜாதி பேச்சு இன்னும் தொடர்ந்தால் அது காண்பிய்து விடும். அதற்காக அவர்களுக்கு தனிதத்துவமும் கொடுப்பதில்லை .வெளிநாடுகள் வந்தால் ,...கருப்பு ,வெள்ளை என்று மணமுடித்து கொள்கிறார்கள் .வெள்ளையர்களை தான்அதிமகாக விரும்புகிறார்கள் என்பதும் உண்மை தான் ..இரண்டு பேரின் மனமும் குணமும் ஒத்து போனால் யாரும் தடை போடுவதுசரியாக இருக்காது திருமணத்திற்கு பின் ,அதில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு என்ற எண்ணம் வர வேண்டும். ...திருமணத்திற்கு பின்,தம் குடும்பத்தை அவர்களின் சமூகம் கேவலமாக பார்க்கும் என்ற எண்ணம் தானே அதற்க்கு காரணம் ...அதே சமுதாயம் நீங்கள் பிச்சைக்காரர்களாக வாழ்ந்தாலும் கண்டு கொள்ளாதது என்பதும் உண்மை ......வெளிநாடுகளில் சென்ற ஆண் மக்கள் ,வெள்ளை பெண்ணை கூட்டி வந்து ஜாம் ஜாம் என்று வூர் கூடி திருமணம் செய்கிறார்களே ..வெள்ளையரும் வேறு ஜாதி தானே ...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி இன்னும் காட்டு மிராண்டி தான் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்ன் .,,,ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு ,,,கொலை வெறியால் ...குற்றத்திற்கு உள்ளவர்கள் மரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் எனது நம்பிக்கை .அந்த பெண்ணின் முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது ..நல்ல விஷயம் ..முடிந்தால் ...அவர் கணவனின் ஜாதியிலிருந்தே ஒருவரை மறுமணம் செய்து கொள்ளலாம் .

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    மனிதர்களை கீழ்த்தரமாக்கி மிருகங்களாக திரியும் ஜாதி வெறியர்களும், காவிகளும் கருத்து வாந்தி எடுத்து நாறடிக்க வந்து விட்டார்கள். ஆணவ கொலையை கண்டிக்க துப்பில்லாத புல்லர்கள்.

    • Cheran Perumal - Radhapuram,இந்தியா

      எந்த காவியும் இங்கு வரவில்லை. வாழ்வியலை புரிந்து கொள்ள துப்பில்லாத ஜென்மங்கள் காதலையும், ஜாதியையும் பற்றி பேச வந்தது காதலை வளர்க்க உதவாது. இனக்கவர்ச்சியை காதல் என்று சாதிக்கும் மிருகங்கள்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    காதலித்து மணந்தவர்கள் எல்லோருமே சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காதல் எதையுமே பார்த்து வருவதில்லை என்றால் பாதி காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவது ஏன்? தோல்வியில் முடிந்தபின்பும் காதல் நீடிக்கிறதா? இல்லையென்றால் அது என்ன காதல்? அதற்காக இப்படி கொடூரமாக பிரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் காதல் தோல்வியடைந்தால் அந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க பெற்றோரைத்தவிர யார் இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது காதலித்தாலும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் என்பது ஒரு பாதுகாப்பை தராதா?

    • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

      அப்பம்மா பார்த்துகுலம்கோத்திரம் பார்த்து மரத்தடி ஜோசியன்ட்லேந்து கோயிபண்டாரம் வரைபொருத்தம்பார்த்து நடந்த திருமணங்கள் எல்லாமே வெற்றியா நகமும் சதையுமாவா இருக்காங்க விடிஞ்சதுலேந்து ராவு வரை சண்டை இன்லாஸ் குத்தம் என்று வாழ்ந்து சாவுறாங்க எவ்ளோபெருங்க இப்போதெல்லாம் திருமணம் டிக்ரீக்கும் டிக்ரீக்குமேதான் காசுக்குமகிசாசுக்குமேதான் திருமணம் பொறுத்துப்போனா ஓகே பொறுமை இல்லேன்னா டிவோர்ஸ் தானே நடக்குது , படிக்காத கூமுட்டையாகட்டிக்க இருபாலரும் தேர்வு செயறதே இல்லே கைலே காசு இருந்தால் ஒண்ணாந்தேதிகைநெறய்ய சம்பளம் வந்தால் டபுள் ஓகே எவ்ளோ கஷ்டங்கள் இருக்குத்தெரியுமா வாழ்க்கையே விநோதமாயிருக்கே

  • TechT - Bangalore,இந்தியா

    சிறுவர் சிறுமியரிடம் காதல் பற்றி உரையாடல் எதற்கு?, வயது 18 முடிந்தவர்கள் மட்டுமே பேசவேண்டும். பிஞ்சில் பழுக்க வைக்காதீர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement