Advertisement

ஓட்டுக்காக அம்பேத்கரை பயன்படுத்தும் காங்.,: மோடி தாக்கு

புதுடில்லி : அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் இருட்டடிப்பு செய்துள்ளது என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

டில்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாடையும் முறைக்க முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மக்களின் மனங்களில் இருந்து அவரின் ஆதிக்கத்தை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அம்பேத்கரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. இந்த நினைவு மையம் அமைக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகியும் இதனை திறக்காமல் காங்., காலம் தாழ்த்தி வந்தது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே காங்., அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது.
தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக சிவனின் பெயரை ராகுல் கையில் எடுத்துள்ளார் என்றார். தொடர்ந்து அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து (41)

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  சிறந்த நடிகனுக்கு எத்தனை என்ன விருது இருக்கோ அத்தனையையும் இவருக்கு தரலாம்...

 • kuthubdeen - thiruvarur,இந்தியா

  விடுங்க பாஸ் அம்பேத்காருக்கும் பிஜேபிக்கும் எந்த விதத்திலாவது சம்பந்தம் இருக்கா ?சும்மாச்சுக்கும் வெளிப்போர்வைக்கு அவர் பேர அப்ப அப்ப பயன் படுத்திகிவீங்க அவர் சார்ந்த மக்களை மதிப்பீங்களா என்ன ?அதெல்லாம் இருக்கட்டும் ஓட்டுக்காக நீங்க மட்டும் ராமர் லட்சுமணன் என்று சாமிய உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் போல உரிமை கொண்டாடி ஏமாத்தலயா என்ன அதுபோல காங்கிரஸ் கட்சியும் அம்பேதகரை பயன் படுத்திக்குது ..அரசியல்னா இதெல்லாம் சகஜம் இல்லையா ?ராகுல் சிவனை கும்பிட்டதே உங்களால பொறுக்க முடியலையே ..சந்தோசம்ல பட்டு இருக்கணும் .காரணம் தெரியும் பாஸ் ,,,எங்கே இவனும் பங்குக்கு வாரான் நம்ம ஓட்டு போய்டுமோன்னு பயம் தானே ....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இத்தனைநாளாய் இவர்கள்அம்பேத்காரை எந்தவகையில் நினைவு கூர்ந்தனர் என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்தவேண்டும்.

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  இவர் மட்டும் ஓட்டுக்காக என்னன்னவோ சொல்வார். வேறு யாரும் அதற்க்கு சொந்தம் கொண்டாடக்கூடாது.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  என்ன சார் , பட்டேல் ஓட்டு கை நழுவியவுடன் , உங்களுக்கு அம்பேத்கார் நினைவு வந்துள்ளதா ?? ...இல்லைனா, வல்லபாய் பட்டேல் தான் இந்தியாவையே கண்டுபிடித்தார் என்றல்லவா பீத்துவீர்கள் .....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  All Politicians mid use the name of Baba Saheb Ambedkar,the concessions given to SC And ST's g.s.rajan, Chennai.

 • A.V. senthilkumar - Jeddah,சவுதி அரேபியா

  மோடி அவர்களே, நீங்க முதலில் சொன்ன எதையாவது ஒழுங்கா செய்யுங்க, பிறகு மற்றவரை குறை சொல்லலாம். ஆனால் ஒன்று நிச்சயம் மொத்த இந்தியாவும் உத்திர பிரதேசம் மாதிரி இருக்கும்னு தப்பு கணக்கு போடாதீங்க

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  இது மோடியின் தாக்கு அல்ல தலித் ஓட்டிற்க்காக மோடியின் உளறல், இவரும், பாஜகவும், RSS ம் அம்பேத்காரின் அரசியல் சாசனம் சொல்வதை ஏற்க மாட்டார்களாம் ஆனால் அம்பேத்கார் மீது பாசத்தை பொழிகிறாராம் ,குஜராத் தலித் வாங்கு வங்கியை குறிவைக்கிறார் மனிதர்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ரூபாய் மதிப்பிழப்பு கிஸ்தி GST பற்றி பேசி ஓட்டு கேளுங்களேன்... மறக்காமல் கூட அந்த ஜெட்லியை வைத்துக்கொள்ளவும்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நான் ஏன் புத்த மதத்தை தழுவினேன் என்பதற்கு அம்பேத்கார் கூறிய விளக்கத்துக்கு முதலில் பதில் சொல்லுங்கள் தலைவா

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  நம்ம நாட்டுலே அம்பேத்கர் பெயரை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளம்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வாஜ்பேயி செய்யாததை இவர் செய்தார் என்று பாராட்டுவோம்.

 • ganesha - tamilnadu,இந்தியா

  இந்த காங்கிரஸ் பப்பு இதுக்கெல்லாம் ஒட்டு வேண்டும் என்றால் வெக்கமே இல்லாத கோவிலுக்கு போவாங்க, ஹிந்து ன்னு சொல்லுவாங்க பூணல் போட்டுப்பாங்க அம்பேத்கார் பற்றி வாய் கிழிய வக்கணையாய் பேசுவாங்க. இதுவரைக்கும் டெல்லியில் ஏதாவது கோவில்லு போயிருக்காங்களா சோனியா ராகுல். அப்புறம் எப்படி வெக்கம் இல்லாத ஹிந்து பிராமண என்று இவர்கள் சொல்லுவார்கள். அப்படியே நீ ஹிந்துவாக இருந்தால் நிச்சியம் ராமர் சேது பாலத்தை தகர்க்க சொல்லி இருக்க மாட்டாய். ராமர் கோவில் கட்ட வாயாலாவது பேசி இருப்பாய். அதுவும் இந்த இருபத்தைந்து வருடமாக ஒன்றும் பேசவில்லை. முஸ்லிம்களின் ஆதரவு போவிடுமோ என்று ராமர் கோவில் கட்டுவது பற்றி ஒன்றும் பேசியது கிடையாது. அதனால் நீ ஹிந்து கிடையாது என்று எல்லாருக்கும் தெரியும். உண்மையை சொல்லிவிட்டு போயேன்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  60 ஆண்டுகால காங்கிரஸ் இந்தியாவை பாழடித்து விட்டது என கூவும் நீங்கள்... இந்த உங்களின் ஆட்சியில் என்ன செய்திர்கள்.. உங்களோட ஆட்சியில நடந்தஏதேனும் நல்லத பத்தி சொல்லி வாக்கு கேளுங்கள் எதற்கு அடுத்த கட்சியை மட்டம் தட்டியே ஒட்டு கேட்கணும்...

 • sabi -

  modiji you please talk about your performance like g s t and demonitisation while you canvas for voting. you are still in election propaganda mode.

 • jies - Chennai,இந்தியா

  மோடியின் சாதனைகளை பல. லஞ்சம் , குப்பை , இலவச பிச்சை இதில் ஊறியவர்களுக்கு மோடியை ஒத்துக் கொள்வது மிக கடினம்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பெருங்காய டப்பா காலியாயிடிச்சி போல...வெத்து கூச்சல்..

 • iniyan - Doha,கத்தார்

  இதெல்லாம் ஒரு பொழப்பு..

 • Abubacker - tirunelveli,இந்தியா

  இந்தியாவை கட்டமைத்ததில் முகலாயர்களின் பங்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறேன். ஓட்டுக்காக ராமரை , அயோத்தியை பயன்படுத்துகிறது - பிஜேபி ஓட்டுக்காக அம்பேத்கரை பயன்படுத்தும் காங் - இரண்டும் (காங் & பிஜேபி) அரசியலுக்காக மக்களை உயிருடன் எரித்தும் கொல்வார்கள். இதை மக்கள் புரிந்துகொண்டால் நல்லது.

 • iniyan - Doha,கத்தார்

  அதானே..ஓட்டுக்காக மெஷின் இருக்கும் போது யாரையும் ஏன் பயன் படுத்தனும்? நீங்க சும்மா இருங்க தல.. நம்ம ஆளுங்க எல்லாமே ரெடி பண்ணிட்டாங்க..

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அம்பேத்கார் மோடிஜிக்கு மட்டுமா சொந்தம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தம்,

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  அம்பேத்கர் இந்து மதத்தை கழுவி ஊற்றியவர் .. நீங்கள் அதே மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறீர்கள் .. உங்களுக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம் ?? அம்பேத்கர் தான் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் என்று எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே பள்ளியில் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் .. அப்போ என்ன இருட்டடிப்பு செய்தார்கள் ?? ஏதோ இந்தியர்களுக்கு அம்பேத்கர் பற்றி தெரியாதது போலும் , நீங்க வந்து தான் எங்களுக்கு சொல்லி கொடுத்த மாதிரியும் பில்ட் அப் எதுக்கு ?? தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தப்படுத்தும் வேலை செய்வது, அவர்களுக்கு கடவுள் கொடுத்த பாக்கியம் என்று பேசியது எழுதியது யார் ?? மனு சாஸ்திரத்தில் குடி கொண்டு இருக்கும் ஒரு சித்தாந்தத்தில் இருந்து கொண்டு, அதை நிராகரித்த அம்பேத்கருக்கு சொம்பு தூக்குவதெல்லாம் ஓட்டுக்காக இல்லாம வேற என்ன ??

 • srikanth - coimbatore,இந்தியா

  cong மட்டம் தட்டியே எவ்வளவு நாள் vote கேட்க போறீங்க Pm சார். மூணு வருஷம் உங்களோட ஆட்சியில நடந்த நல்லத பத்தி சொல்லி vote கேட்கவே மாட்டிங்களா ?

 • krishnan - Chennai,இந்தியா

  இதெல்லாம் ஒரு பொளப்பு.

 • manoharan - TIRUVALLUR,இந்தியா

  காங்கிரஸ்த்தான் 23 வருட காலமாக அம்பேத்கார் நினனைவகத்தை திறந்து வைக்கவில்லை. பின் ஏன் மோடி மட்டும் மூணரை ஆண்டுகள் கழித்து திறக்கிறார். குஜராத் தேர்தல் கருதித்தானே.

 • Mariappa T - INDORE,இந்தியா

  மோடி ஜி அவர்கள் வேறு பேசுவதற்கு ஒன்னும் இல்லை. GST யோ இல்லை DeMo வோ அங்கு அவர் பேசவே முடியாது.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  தான் என்னசெய்யப்போறோம் என்றும் என்ன செய்தேன் அதன் பலன் என்னவென்று சொல்லிஒட்டுக்கேட்பதில்லை கடவுளையும் நல்லத்தலைவர்களின் பெயரைச்சொல்லி ஒட்டுகேட்டுவிட்டு அம்மக்களுக்கு நாமம் போடுவது பேஷனாக போய்விட்டது.

 • Makkalukkaga - India,இந்தியா

  அவர்கள் அம்பேத்கர் என்றால் இவர்கள் சர்தார் வல்லபாய் படேல் .. எல்லாம் அரசியல் தான்

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  ஓட்டுக்காக மாட்டை பயன்படுத்தும் பொழுது அம்பேத்காரின் பெயரை பயன் படுத்தவதில் என்ன தவறு ......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement