Advertisement

'சாபம்' தீர்ந்தது; வாரிசு பிறந்தது

பெங்களூரு: மைசூரு மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால, 'சாபம்' முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய மன்னர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது.

400 ஆண்டுகளுக்கு முன்...



கடந்த, 1612ம் ஆண்டு மைசூரை, விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த திருமலைராஜாவிடம் இருந்து, ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். ராஜ நகைகளுடன் தப்பிய திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் உடையார் பரம்பரைக்கு ஒரு சாபம் அளித்தார். ' தலக்காடு மண்ணாக போகட்டும்; காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும்; மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்' என்பது அவரது சாபம். மைசூர் பகுதியில் கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் இந்த சாபம் மீது நம்பிக்கை உள்ளது. அதற்கு ஏற்றவாறு மைசூர் உடையார் மன்னர் குடும்பத்தில் வாரிசு சிக்கலும் இருந்து வருகிறது.

தத்தெடுக்கப்பட்ட புதிய மன்னர்



நாடு சுதந்திரம் பெற்ற போது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர் ஜெயசாமராஜேந்திர உடையார். வாரிசு இல்லாததால் அவர் கண்டதத்த நரசிம்ம உடையாரை தனது மகனாக தத்தெடுத்தார். அவர், 1974ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜ உடையார் கடந்த, 2013ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ்,23 என்பவர் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரின், 27 வது மன்னராக முடிசூட்டப்பட்ட அவருக்கு யதுவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என புதிய பெயர் சூட்டப்பட்டது. அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன், 27 ம்தேதி திருமணம் நடந்தது. பெங்களூருவில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில், திரிஷா தேவிக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

  • ramasamy - chingola,ஜாம்பியா

    சாபங்களை பற்றி அறிய "shapit " என்ற ஹிந்தி படம் பார்க்கவும். அதில் நம்பும்படியாக தர்க்க ரீதியான விளக்கங்கள் வைத்துள்ளார் படத்தின் இயக்குனர். இது மன்னர் குடும்பம் மட்டுமல்ல. பல குடும்பங்களில் உண்டு. மன்னர் குடும்பம் என்பதால் செய்தியாக வருகிறது. நல்ல மனம், செயல் பாடுகள் உள்ளவர்களுக்கு சாபம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பொது விதி. சாபம் கடவுள்களைக் கூட விட்டு வைத்ததில்லை என்பது புராண உண்மை.

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    VAALKA VALAMUTAN NOYINRI HEALTHYAAGA VALARANUM NANNAAIRUKKANUM

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    நாநூறு ஆண்டுகள் என்பது பதினாறு தலைமுறைகள். அதுவரை ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது சாபமாக கூட இருந்திருக்கலாம். சாபம் முடிவுக்கு வந்து ஆண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    சொத்துக்கு தான் வாரிசாக முடியுமே தவிர, உண்மையான இரத்த வாரிசு இல்லை என்பதே உண்மை. இரத்த வாரிசு இல்லை என்பதால் அப்போதே அந்த குடும்பம் முடிவுக்கு வந்து விட்டது. இந்த சாபங்கள் இந்தியாவில் சுழன்று கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள்.

  • jagan - Chennai,இந்தியா

    ஏன் பெண் குழந்தைகள் வாரிசு இல்லையா?

    • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

      இல்லை?

  • Pathi - Chennai ,இந்தியா

    Arasiyal pizhaithorukku Aram kootru aavathum - silapathigaram

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    காவிரியில் தண்ணி வரும்.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    I have visited the place Thalakkadu and was surprised to walk on the sea sand where there is no sea at all. It was like Mahabalipuram sand with lot of savukku trees located in a low level of atleast 15 feet.Later I came to know the history of the place through an article and counter checked with some Kannada natives who told me the history in a detailed manner. It's really an unbelievable wonder. How can sea enter in a place where there is no scope(as on date) for the existence of it. Any how as other readers pointed out our well wishes to the new born and the royal couple. God bless

  • Dynamo - Den Haag,நெதர்லாந்து

    சாபம், கோபமுன்னு உங்க பங்குக்கு மூடநம்பிக்கையை வளர்த்து விடுங்க...

    • Ray - Chennai,இந்தியா

      ஒரு குடும்பத்தில் நானூறு ஆண்டுகளாக ஆண்வாரிசு இல்லாமல் போனதற்கு வேறு ஏதேனும் வியாக்யானம் தருவீர்களா?

    • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

      நம்ம ஊரு நல்ல நம்பிக்கையே மூட நம்பிக்கையாத்தான் தெரியும்.

  • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    என்னய்யா கதை இது

    • N S Sankaran - Chennai,இந்தியா

      கதை அல்ல. உண்மை. இன்றும் தலைக்காடுக்கு மேற்கிலும் கிழக்கிலும் வண்டல் மண் வளமாக இருக்க தலைக்காட்டில் மட்டும் மணல் நிறைந்து உள்ளது. சாபம் தீர்ந்த நல்வேளையில் காவிரி நீர் குறையாமல் பாயட்டும். குடகு முதல் பூம்புகார் வரை செழிக்கட்டும்.

    • kundalakesi - VANCOUVER,கனடா

      அது அப்படி தாம்பா, டாடா குடும்ப வரிசையா பாரு, Jamsetji டாடா,Dorabji Tata,Ratanji Tata, Naval Tata, R. D Tata, J. R. D. Tata, Ratan Tata, Simone Tata. Noel Tata, எல்லோரும் முந்தையவருக்கு தத்து . பணமிருந்தும் வாரிசில்லா சாபம் ஆபிரகாம் மதங்களுக்கும் உண்டு.

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

    வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...

  • karthik - chennai,இந்தியா

    பெண் குழந்தைகளும் வாரிசுகள் தான் என்பதை உணரவேண்டும்.

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

    வாழ்த்துக்கள், சாபம் தீர்ந்தது மகிழ்ச்சி.

  • kamal -

    vazthukal

  • Duruvan - Rishikesh,இந்தியா

    சாபம் உண்மைதான் ஜெயலலிதாவுக்கும் ஆண் வாரிசு இல்லையே

    • Ray - Chennai,இந்தியா

      இது என்ன புதுக் கதை? யார் விட்ட சாபம்னு சொல்லிடுங்களேன்

  • Jebamani Mohanraj - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டின் மீதான திராவிட சாபம் தீர இன்னும் மூன்னூறு ஆண்டுகள் ஆகுமா அடக்கடவுளே

  • Velai - Ahmadabad,இந்தியா

    வாஸ்துக்கள்... நீடுடிவழ்க. இன்று அரச முறை ஆட்சியில் இல்லாவிடினும் நீங்கள் இந்தியாவின் சரித்திரம். உங்களுக்கு வாரிசு பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

  • smoorthy - bangalore,இந்தியா

    புதிய அத்தியாயம் துவக்கம் / வாழ்க வளமுடன் /

  • I love Bharatham - chennai,இந்தியா

    இவரகள் சாபம் தீர வழி காட்டியவர் ....சிருங்கேரி ஸ்வாமிகள் என்பது கூடுதல் தகவல்.

    • Chezhian KM Kottai - coimbatore,இந்தியா

      அடிச்சு விடு, அடிச்சு விடு

    • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

      லூஸ்தனத்துக்கு ஒரு அளவு வேண்டாமா?

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    சபாஷ் சகல ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள்

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    வாரிசு நலமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும்...வாரிசு பிறந்த சந்தோஷத்தில் காவேரி தண்ணி தொறந்து விடுங்கப்பா...புண்ணியமா போகட்டும்....

  • sambantham sasikumar - chennai,இந்தியா

    வாழ்த்துகள்

  • Rajan - chennai,இந்தியா

    இவர்கள் வாழ்க்கையில் நமக்கு என்ன பாடம் ? என்ன தான் சொத்து பணம் இருந்தாலும் எல்லாவற்றையும் வாங்கமுடியாது...இந்த தம்பதி நலமாக வாழ வாழ்த்துக்கள்.

  • Kumar - Namakkal,இந்தியா

    வாழ்க வளமுடன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement