Advertisement

சர்ச்சையில் சிக்கிய கபில் சிபல்

புதுடில்லி: 'அயோத்தி ராமர் கோவில் வழக்கை 2019 லோக்சபா தேர்தல் காலம் வரை தள்ளி வைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் காங்., மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபில் வாதாடியது ஏற்புடையது அல்ல என சன்னி வக்ப் போர்டு கருத்து தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வாதம்சுப்ரீம் கோர்ட்டில், ராமர் கோவில் வழக்கு நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சன்னி வக்ப் போர்டு சார்பில் ஆஜரான கபில் சிபல், 'இந்த வழக்கை 2019 லோக்சபா தேர்தல் காலம் வரை தள்ளி வைக்க வேண்டும்' என, வாதாடினார். அவரது கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. கபில் சிபல் இதுபோல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ராமர் கோவில் விவகாரத்தை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் அவர் விமர்சனம் செய்தார். இது குறித்து காங்., தரப்பில், ' இது கட்சியின் கருத்து அல்ல. சன்னி வக்ப் போர்டு சார்பில் தான் கபில் சிபல் வாதாடி வருகிறார்' என,கூறப்பட்டது.

வக்ப் போர்டு மறுப்புஆனால், இந்த கருத்தை சன்னி வக்ப் போர்டு மறுத்துள்ளது. அதன் உறுப்பினர் ஹாஜி மெக்பூப் கூறுகையில், '' கபில் சிபல் எங்கள் வழக்கறிஞர் தான். ஆனால், அவர் ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெளியிட்ட கருத்து தவறு. ராமர் கோவில் வழக்கில் விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கபில் சிபல் கருத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார். இதுப்பற்றி பிரதமர் மோடி கூறுகையில், '' ராமர் கோவில் விவகாரத்தில் விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். ஆனால், காங்கிரசும், அதன் தலைவர்களும் இதை ஏற்க மறுக்கின்றனர்,'' என்றார்.Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (38)

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  ரெம்பவும் கீழ்த்தரமான அரசியலால் இந்தியா ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறார்கள். காங்கிரசில் தலைவர்கள் நிதானம் இழந்து செயல்படுகிறார்கள். ராகுலுடன் காங்கிரசின் குடும்ப அரசியல் முடிந்துவிடும்

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  மணிசங்கரும் கபில்சிபலும் போதும் ...கட்டாயம் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது ....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சந்துல சிந்து பாடுவது என்பது இதுதான்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  நான் தான் கூறினேன், ஆனால் நான் கூறிய கருத்து என்னுதில்லை.. எத்தனையோ துரோகத்தை இந்த நாடும், இந்துக்களும் சந்தித்து விட்டனர், இதையும் அந்த லிஸ்ட்டு ல சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீரோ லாஸ் கபில் சிபலுக்கு பொய் சொல்வது எல்லாம் தண்ணீர்பட்ட பாடு...

 • Indhuindian - Chennai,இந்தியா

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வக்கீல் பெருமானே உன்னை புரிந்துகொண்டது தெரிந்துகொண்டது நாட்டு மக்களே

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றல்லவா இருக்கிறது கான்-கிரெஸ்ஸில் ஏன் எல்லா தலைவர்களும், பப்பு ராகுல்ஜீ மாதிரியே இருக்கிறார்கள்? பாவம், ஒரு நல்ல தலைவன் இல்லாமல் கான்-கிரேஸ் அழிந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி சுதந்திரம் கிடைத்த உடனேயே காங்கிரெஸ்ஸை கலைக்க வேண்டும் என்றார். அது இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மஹாத்மா காந்தியின் கனவு நனைவாக ராகுல்ஜீயும், பணப்பசி, கபில் சிபில் போன்றோர்கள் முயற்சிக்கிறார்கள். நடக்கட்டும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  கான் கிராஸ் கட்சி இந்து விரோத கட்சி என்று திரும்பவும் நிரூபித்துக் கொண்டே வருகிறது... சில லூசு இந்துக்கள் தான் இன்னமும் புரிந்து கொள்ளாமல் பெனாத்துகிறார்கள்...

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  இந்த மாட்டுகறி மாமிச கம்பெனி முதலாளிக்கு நம் நாடு, கலாச்சாரம் பற்றிய கவலையெல்லாம் இல்லை.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ இந்த மாதிரி காங்கிரஸ் வக்கீல் பசங்க தான் குட்டையை குழப்பிக்கிட்டே இருக்காங்களா???

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இப்போ புது பேஷன் நல்ல பிரபலமானும்னா இப்படி ஏதேனும் சர்ச்சை கருத்து அல்லது எதையாவது பேசணும் உடனே பேமஸ் ஆகிடலாம்... மெர்சல் போல பத்மவதி போல நல்ல விளம்பரம் இப்போ இவரின் தொழில் கொடிகட்டி பறக்கும் அடுத்த ராம்ஜெட்மலினி ரெடி ......

 • vbs manian - hyderabad,இந்தியா

  நுணலும் தன வயல் கேட்டது

  • Thiyagarajan - Bangalore,இந்தியா

   யார் கேட்டது?

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  In which case, the Wakf Board should shunt out him from their case.

 • Indhuindian - Chennai,இந்தியா

  The country and BJP should be grateful to people like Sri Kapil Sibal, Sri Mani Shankar Iyer (for his Chaaiwala and today's Neech Aadmi) for making its job easy. What is amazing is their perfect timing.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ் பெயரை கெடுக்க இப்படி பட்டவர் போதும், இவர் இந்து மதத்திற்கு எதிரான, காங்கிரஸ் காரன், மக்கள் சிந்தித்து இந்த காரிய வாதிகளை ஒதுக்க வேண்டும்

 • TamilMark -

  காங்கிரஸ் முகம் தெறிந்து விட்டது இது நாள்வரை ராமர் கோவிலை வைத்து யார் அரசியல் செய்தது என்று மக்களுக்கு புரிய வைத்ததற்கு கபீர்க்கு நன்றி

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  மாட்டாமல் சொத்து சேர்க்க வேண்டுமா? வழக்கறிஞர் ஆகிவிடுங்கள்...கபில், ப சி போல. நல்ல சி ஏ யை உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

 • Jayvee - chennai,இந்தியா

  கபில் சிபல் சன்னியா அல்லது ஷியாவா ? (அவர் ஹிந்து அல்ல என்பது பலருக்கு தெரியாது )

 • I love Bharatham - chennai,இந்தியா

  இன்றும் பாபரி ப்ரிச்சனை பற்றி பேசுகிறோம், நமது கோவில்கள் பாபரி பிரச்னைனின் போது இடித்ததை பற்றி ஒருவரும் பேசுவது இல்லை என்பது வேதத்தனைக்கு உரியது .....1000 ஆலயங்கள் மேலாக இடிக்கப்பட்டது....

  • grg - chennai,இந்தியா

   சிதம்பரம் கோவில் கூட கொள்ளை அடிக்கப்பட்டு பின்பு மீண்டும் எழுந்தது.

 • rajan - kerala,இந்தியா

  இந்த ஆளுக்கு இதேதான் பிழைப்பு. கோடிக்கணக்கில் ஆட்டைய போட்டுடுவானுங்க ஏண்டா அப்படி பண்ணினேன்னு கேட்டால் அது வெறும் சீரோ லாஸ் என சொல்லிக்கினு போய்க்கிட்டே இருப்பான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கபில் சிபல் சொல்லிவிடவேண்டியது தான் இது கான்கிராஸ் கட்சியின் நிலைப்பாடுதான். என்னை சொல்லச்சொன்னது சோனியா தான் என்று.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்தமாதிரி காங்கிரஸ் கட்சி எவ்வளவு கேவலப்பட்டாலும் திருந்தாது. திருந்தாத கூட்டம் தான் தற்போது அந்த கட்சியில் உள்ளது. இதில் சுதந்திரத்திற்கு போராடிய கட்சி என்று குபீர் சிரிப்பு மூட்டுவார்கள்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சர்ச்சைக்குரிய கருத்து அல்ல, அவரே சர்ச்சைக்குரிய மனிதர்தான்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இடிப்பு வழக்கிற்கும் , அதன் பின் நடந்த கலவரங்களுக்கும் தண்டனை கொடுக்காமல் , அந்த இடத்தை என்ன செய்வது என்று வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது .. இந்தியர்களின் உயிரை விட கட்டடமும் அதில் மேல் உள்ள அரசியலும் தான் எல்லாருக்கும் முக்கியம் .. கொடுமை ..

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  சன்னி போர்டுக்காக கபில் சிபல் ஆஜராகவே இல்லை .. இந்த கேசில் பல மனுதாரர்கள் உண்டு .. அதில் ஒரு மனுதாரருக்காக தான் ஆஜர் ஆகி இருக்கிறார் .. பிறகு எதுக்கு இது செய்தி ஆக படுகிறது ?? யாருக்காக ஆஜராகவில்லையோ அவர்களிடமே போய் இது உங்கள் கருத்தா என்று கேட்டால் என்ன பதில் வரும் ?? சன்னி போர்டுக்காக ஆஜராகினார் என்று தவறான தகவலை மேடையில் ஒரு பிரதமர் தருவது எவ்வளவு கேவலம் ??

  • Seshadri - Chennai,இந்தியா

   நண்பரே இன்றய நியூஸ் பாருங்கள் உச்ச கோர்ட்டில் கபில் சிபல் சன்னி வக்ப் போர்டிற்கு ஆஜராகியுள்ளார் என்று ப்ரோப் காட்டுகிறார்கள்

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   Wakf வாரியமே "அவர்கள் எங்கள் வழக்கறிஞர்" என்று சொல்லியிருக்கிறது இதில் நீங்கள் எங்கே புதுசாக??

  • s.Krishnamurthy - ,

   Ayodhiyil Ramar kovilum kattattum masoodhiyum katttattum. adhanal andha oorilulla Muslim matrum hindukkalin vaazhkkai tharamum uyarum kodikkanakkana per sutrula varappovadhal. Ayodhiyil Enna varavendum enbadhai andha oor makkalidam vittuvittu matra oor makkal vilagikkolvadhe ellorukkum nalladhu

 • Rags - dmr188330,இந்தியா

  2g zero loss நாயகன் மறுபடியும் காங்கிரஸ் கட்சியை சங்கடத்தில் மாட்டிவிட்டார். இது அவருடைய கர்வமான அணுகுமுறையால் நிகழ்ந்தது.

 • yila - Nellai,இந்தியா

  இதில் என்ன சர்ச்சை? விரைவில் தீர்வு ஏற்பட்டால், பின் ஹிந்துத்துவாக்கள் எப்படி அரசியல் நடத்துவார்கள்? கபில் சிபல் உடனே முடிக்க வேண்டும் என்று கேட்டாலும், ஹிந்துத்துவாக்கள் நிச்சயம் தீர விட மாட்டார்கள் என்பதே உண்மை.

  • Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா

   என்னாது? ஹிந்துத்துவாக்கள் நிச்சயம் தீர விட மாட்டார்களா?. சன்னி வக்ப் வாரியமும், பாப்ரிமஜீத் இமாம்களும், ஹிந்து துறவியர்களும் பிரச்சினையை பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாக முடிக்க ஒரு தீர்வுக்கு வந்துள்ள நிலையில், பிரச்சினை முடிந்துவிட்டால் இதைவைத்து அரசியல் செய்ய முடியாதே என்கிற கெட்ட எண்ணத்துடன் ஜீரோ லாஸ் புகழ் கப்புசிபல் வழக்கை இரண்டு வருடங்களுக்கு ஒத்திப்போட வாதாடி மூக்குடைபட்டு நிற்பது கேடு கெட்ட காங்கிரசின் வக்கிர புத்தியால் தான்.

  • RGK - Dharapuram,இந்தியா

   கபில் சிபல் தான் உளறுகிறார் என்றால் நீங்களுமா.. இதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் ...

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  காந்தியின் பெயர் சொல்லி வோட்டு பிட்சை எடுக்கும் பொறுக்கிகள் தங்களை இந்த பிரச்சனையிலிருந்து விலகியிருப்பதும் வோட்டு பிச்சைக்காக தான். காங்கிரஸ் கட்சியின் கடைசி அத்தியாயம் ராஹுலினால் எழுத படுகிறது. மங்களம் சீக்கிரம்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  வருமானம் நின்னுடுமே...

 • VnJayaram -

  i thought he is a gentleman.he proved he is 3 rated mind.

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு

   அவர்கள்சொன்னது தான் முழுக்க முழுக்க உண்மை. இவர்களை மாதிரி வக்கீல் தொழில் செய்வோருக்கு பிரச்சினை தீராத வரையில் வருமானம் அது மட்டுமே இவர்களின் நோக்கம்.

  • RGK - Dharapuram

   சார், அவர் 2G ஊழலில் ஒரு ரூபாய் கூட நஷ்டமில்லை என்று கூறியவர் அந்த அளவுக்கு புத்திசாலி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement