Advertisement

இயற்கை உலகம்: மிக ஆழத்தில் வாழும் மீன்!

உலகக் கடல்களிலேயே அதிக ஆழமான இடம், மேற்கு பசிபிக் கடலில், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவிற்கு அருகே உள்ளது. இக்கடல் பகுதியில், 26 ஆயிரத்து, 200 அடிக்குக் கீழே வாழும் புதிய மீன் வகை ஒன்றை, விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
மரியானா நத்தை மீன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய மீன், இவ்வளவு ஆழத்தில் எப்படி வாழ முடிகிறது என்பதை, தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வழக்கமாக நீரில் இருக்கும் அழுத்தத்தை விட, 1,000 மடங்கு அழுத்தம் உள்ள பகுதியில் வாழும் மரியானா நத்தை மீன், தன்னை விட சிறிய கடல் வாழ் உயிரினங்களை இரையாக உண்கிறது. கடலில் இத்தனை அடி ஆழத்தில் ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement