Advertisement

இயற்கை உலகம் புதிய வகை பட்டாம் பூச்சி!

அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினங்களில், புதிய வகையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அந்த வகையில், பட்டாம் பூச்சி வகைகளில் எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவே தோன்றும். ஆனால், 'கம்பாரேடிவ் சைட்டோஜெனிடிக்ஸ்' இதழில், அண்மையில் புதிய பட்டாம் பூச்சி வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
தெற்கு ரஷ்யாவிலுள்ள டாகெஸ்தான் பகுதியில் பறந்து திரியும் இந்த பட்டாம் பூச்சிக்கு, 'பி.ஆஸ்ட்ராலோரோசிக்கஸ்' என, விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
நீல நிற இறக்கை கொண்டுள்ள இந்த பட்டாம் பூச்சிக்கு, 46 குரோமோசோம்களே உள்ளன. வழக்கமாக பட்டாம் பூச்சிகளுக்கு, 64 குரோமோசோம்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement