Advertisement

பணம் மோசடி இரு வாலிபர்கள் கைது 

தி.நகர், கோவிந்தன் தெருவை சேர்ந்தவர்,இப்ராஹிம் ஷா, 48. இவர், தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில், அவரது உறவினர் மகன், சைதாப்பேட்டை, சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த ரகுமான் கான், 26, என்பவர் பணி புரிந்து வந்தார்.கடந்த, எட்டு மாதங்களுக்கு முன், சைதாப்பேட்டையில், ரகுமான் தனியாக உணவகம் துவங்கினார்.இப்ராஹிம் உணவகத்தில் பணிபுரிந்த, கவுரிசங்கர், 28, என்பவர், மூன்று மாதங்களுக்கு முன், ரகுமான்கான் உணவகத்தில் பணிக்கு சேர்ந்தார்.இந்நிலையில், தன் கடையில் பணிபுரிந்த நேரத்தில், கவுரிரிசங்கர் மற்றும் ரகுமான் ஆகியோர் காசோலை திருடி, ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில், இப்ராஹிம் ஷா புகார் அளித்தார்.விசாரணையில், இது உண்மை என தெரியவந்ததால், இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement